இப்போத் தக்காளி சீசன் ஆரம்பிச்சிருக்கு. தக்காளி இங்கே பத்து ரூபாய் விற்கிறது. ஆகவே கொஞ்சம் போலத் தொக்கு செய்து வைத்துக்கொண்டால் நல்லதுனு ஒரு கிலோ வாங்கினோம். ஹிஹிஹி, மீனாக்ஷி, கோவிச்சுக்காதீங்க. அல்வாவுக்கே அல்வா கொடுக்கலை. இந்த வாரத்துக்குள்ளாக அல்வா கண்டிப்பாய் வரும்.
தக்காளி ஒரு கிலோ, மிளகாய் வற்றல் 50 கிராம்.(காரம் தேவை இல்லை எனில் குறைத்துக்கொள்ளவும்.) எண்ணிக்கையில் சொன்னால் சரியாக வராது என்பதாலஅளவு சொல்லி இருக்கேன். உங்கள் தேவைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம். நல்லெண்ணெய் தான் இதற்குச் சரியாக இருக்கும். ஆகவே நல்லெண்ணெய் நூறு கிராம் தேவை. உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது. வெல்லம் தூளாக இரண்டு டேபிள் ஸ்பூன். கடுகு ஒரு டீஸ்பூன் தாளிக்க
நான் ஸ்டிக் கடாய் அல்லது இரும்புச் சட்டியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயம் பொரித்துக்கொள்ளவும். தனியாக வைத்துக்கொண்டு, மிளகாய் வற்றலைச் சிவப்பாக வறுத்து எடுக்கவும். பின்னர் தக்காளியை நன்கு அலம்பி நான்காக நறுக்கி அந்த மிச்ச எண்ணெயில் போட்டு வதக்கவும். தோல் பிரிந்து வரும் வரை சுருள வதக்கிய பின்னர் ஆற விடவும். ஆறியதும் மிக்சியின் பெரிய ஜாரில் போட்டு மி.வத்தல், தக்காளி வதக்கல், தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இப்போது அதே கடாயைக் கழுவிட்டு அல்லது வேறொரு கடாயில் மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும். கடுகு போட்டுத் தாளிக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும். கொஞ்சம் கொட கொடவென்றே இருக்கும். பயப்படாமல் விழுதை மேலே தெளித்துக்கொள்ளாமல் சேர்க்கவும். நிதானமாகத் தீயை வைத்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். மெல்ல மெல்ல கெட்டிப்பட ஆரம்பிக்கும். நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரியும் சமயம் வெல்லத்தூளைச் சேர்க்கவும். சிறிது நேரம் கிளறியதும் அல்வா பதத்துக்கு உருட்ட வரும். அப்போது கீழே இறக்கி வெந்தயப் பொடியைச் சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
இதை தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தலாம். மேலும் சாதத்தை நன்கு உதிராக வடித்து ஆற வைத்து இந்தத் தொக்கைப் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கிளறி , மேலே வறுத்த கொத்துமல்லிப் பொடி ஒரு டீஸ்பூன் தூவிக் கொண்டு, கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்தால் ஒரு நாள் வித்தியாசமான ஒரு சாதமும் கிடைக்கும். காரட் தயிர்ப்பச்சடி இதற்கு நன்றாக இருக்கும்.

சிலபேர் இதில் சீரகம் சேர்ப்பார்கள்.
ReplyDeleteஅது ஒரு வாசனை.
எனக்குப் பிடிக்காது.
சாதம் கலந்து கொள்வதில்லை என்றாலும் தொட்டுக் கொள்ள செய்வோம். வெல்லம் போட மாட்டோம்!
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அல்வாவுக்கே அல்வா கொடுத்தது நீங்களாதான் இருக்கும். :))
ReplyDeleteதக்காளி இல்லாம எனக்கு சமைக்கவே தெரியாது. தக்காளி தொக்கு ஆஹா! நான் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடற, ரசிச்சு ரசிச்சு சாப்பிடற, அடிக்கடி பண்ற டிஷ். நான் கேக்காமலே இந்த ரெசிபி தந்த வள்ளல் நீங்க. :) நான் pregnant ஆகி இருந்த இரண்டு தடவையும் ஆரம்பத்துலேந்து டெலிவரி ஆன வரைக்கும் அப்படி வாமிட் பண்ணி இருக்கேன். எதை சாப்பிட்டாலும் வாந்திதான். ஸ்வீட் பாத்தாலே வாந்திதான். அந்த நேரம் நான் சாப்பிட்டு வாந்தி எடுக்காம இருந்த ஒரே டிஷ் இந்த தக்காளி தொக்குதான். அதனால அம்மா எப்பவும் கொரியர் மூலமாவும் யாரவது ஊருக்கு வரும்போது எல்லாம் தக்காளி தொக்கும் பண்ணி, பண்ணி அனுப்பிண்டே இருந்தா. அதனாலேயோ என்னவோ என்னோட ரெண்டு குழந்தைகளுக்கும் தக்காளி தொக்குன்னா அவ்வளவு பிரியம். தக்காளி தொக்கு இருந்தா போறும் வேற எதுவுமே வேண்டாம். நானும் எப்பவும் தக்காளி தொக்கு பண்ணிண்டே இருப்பேன். அதுவும் பண்ணின வேகத்துல காலி ஆயிண்டே இருக்கும். காலி ஆயிண்டே இருக்கும்னு சொல்றதை விட பசங்க அதை காலி பண்ற வரைக்கும் விட மாட்டா, வேற எதையும் தொட மாட்டான்னுதான் சொல்லணும். :)) இங்க எங்க நண்பர்கள் வட்டத்துலேயும் நான் பண்ற தக்காளி தொக்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உங்க ரெசிபி கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். அடுத்த முறை நிச்சயமா இந்த முறைலதான் பண்ண போறேன்.
மன்னிக்கணும் என் தக்காளி தொக்கு கதை கொஞ்சம் பெருசா ஆயிடுத்து.
தொக்குனு எப்படி பேர் வந்தது? ஊறுகாய்க்கும் தொக்குக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், சீரகம் இதிலே சேர்த்தால் நல்லாவே இருக்காது. வெல்லம் நிறைய எல்லாம் போடக் கூடாது. கொஞ்சம் போல. தக்காளியின் புளிப்பைக் கொஞ்சம் நீக்கிக் காட்டுவதற்காகச் சேர்த்தால் போதும். வெல்லம் போடாட்டியும் பரவாயில்லைதான்.
ReplyDeleteமீனாக்ஷி, உங்க தொக்கு ரெசிபியையும் சொல்லுங்க. அப்படியும் பண்ணிப் பார்க்கலாம். பச்சையாக அரைத்தும் செய்கின்றனர். வெந்நீரில் போட்டு அல்லது குக்கரில் வைத்தும் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த முறையில் கொஞ்சம் அதிக நாட்கள் கெடாமல் தாக்குப் பிடிக்கும்.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, தொக்குனு எப்படிப் பேர் வந்ததுனு நீங்களே சொல்லிடுங்க. ஊறுகாய்த் துண்டங்களாக இருக்கும். அதுவே நன்கு உருத்தெரியாமல் கிளறி விழுதாக்கினால் தொக்கு. எலுமிச்சையில் கூடத் தொக்குக் கிளறலாம். :))))சர்க்கரை சேர்த்த மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய்களும் உள்ளன. சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகப் பயன்படுத்துவோம். கொண்டைக்கடலையை மட்டுமே ஊறுகாய் போடலாம். அதே போல் வெந்தயம் மட்டுமே ஊறுகாய் போடுவதும் உண்டு.
ReplyDeleteஎனக்குத் தெரியாதுன்றதுனால தான் உங்களைக் கேட்டேன்! :-) அப்போ ஊறுகாய் தொக்கு ரெண்டும் ஒண்ணு தானா? or பிராமண வழக்கா இருக்குமோ? வேறே ஏதாவது பாஷைலந்து கூட வந்திருக்கும். ஹிந்தில தான் மடியா பேர் சொல்லுவாங்க. மலையாளம் தெலுங்குல ஊறுகாய்க்கு என்னவோ தெரியலியே. அங்கிருந்து வந்திருக்கலாம்.
ReplyDelete(யார்ராவன்.. சாப்பிடுறதை விட்டு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கான்..)
This comment has been removed by the author.
ReplyDeleteநீங்க சொல்றது தான் சரி.
ReplyDeleteஉருத்தெரியாமல் விழுதானதால் (காயின் உரு/வடிவம் கரைந்து மணம்,சுவை மட்டும் தொக்கி நிற்பதால்) தொக்கு.
பின்னிட்டீங்க போங்க.
ஹிந்தில தான் மடியா பேர் சொல்லுவாங்க//
ReplyDeleteஹிஹிஹி, அது ஆசார் இல்லை, அசார்னு சொல்லணும் ஹிந்தியிலே. என்ன இருந்தாலும் குஜராத்தியர் மாதிரி வித விதமான அசார் போட நம்மளாலே முடியாது. :))))
பின்னிட்டீங்க போங்க.//
ReplyDeleteஹிஹிஹி, அதே, அதே.
தொக்கு எப்படி share பண்ணுவீங்க மீனாக்ஷி? "இந்தாங்க இதை சாப்பிடுங்க, வாந்தியே வராது"னு சொல்வீங்களா?
ReplyDeleteநான் பண்ற தக்காளி தொக்கு ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிள் மேடம். கிட்டத்தட்ட மாங்காய் தொக்கு ரெசிபியேதான்.
ReplyDeleteசென்னைல இருந்த வரைக்கும் வேண்டிய அளவு தக்காளியை எடுத்துண்டு, அதை ஓரளவு சின்ன சின்ன துண்டுகளா நறுக்கி, ரெண்டு மூணு நாள் வெய்யில்ல காய வெச்சு, ஜூஸ் எல்லாம் சுத்தமா வத்தி போன அப்பறம் அரைச்சு தொக்கு கிளறுவோம்.
இப்ப அப்படி எல்லாம் பண்றதில்லை. தக்காளி உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துண்டு, அதை நன்னா அலம்பி, கட் பண்ணி, கொஞ்சூண்டு அதாவது ஒரு இணுக்கு புளியும், கால்
ஸ்பூனுக்கும் கம்மியா சக்கரையும் சேத்து மிக்ஸ்சில நன்னா அரைச்சுக்கணும். நான் எப்பவும் தோராயமா மீடியம் சைஸ் தக்காளி பத்து இல்லை பனிரெண்டு எடுத்துப்பேன்.
இலுப்பசட்டியில ஒரு கால் ஸ்பூன் வெந்தயத்தை நன்னா சிவக்க வறுத்து எடுத்துண்டு அதை நைசா பொடி பண்ணி வெச்சுக்கணும். வெந்தய பொடி கடைகளில கூட கிடைக்கறது. வேணும்னா அதை வாங்கி போட்டுக்கலாம்.
இலுப்பசட்டில ரெண்டு கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடுகு தாளிசுண்டு, அதுல இந்த அரைச்ச விழுதை போட்டு ஒரு பத்து நிமிஷம் நன்னா கொதிக்க விடணும். அப்ப அப்ப கொஞ்சம் கிளறி கொடுக்கணும். அப்பறம் இந்த விழுது கொஞ்சம் குறுக ஆரம்பிக்கும் போது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு இதெல்லாம் தேவைக்கு ஏத்த மாதிரி போட்டு திரும்ப நன்னா கொதிக்க விடணும். அது கொதிச்சு கொதிச்சு நன்னா குறுகி எண்ணெய் பிரிஞ்சு வெளில வரும்போது அடுப்புலேந்து இறக்கிடலாம். அப்பறம் கொஞ்சம் கழிச்சு பொடி பண்ணி வெச்சிருக்கற வெந்தயத்தை போட்டு இன்னொரு முறை நன்னா அப்படியே கலந்துடனும். அவ்வளவுதான்.
பெருங்காயம் கட்டி பெருங்காயமா இருந்தா அதை எண்ணெய்ல பொரிச்சு எடுத்து தனியா வெச்சுண்டு, வெந்தய பொடி கூட பொடிச்சு கடைசியா கூட கலந்துக்கலாம். இங்க கட்டி பெருங்காயம் கிடைக்காததால நான் பொடிதான் உபயோகிக்கறேன்.
இதெல்லாம் நான் நான்-ஸ்டிக் பாத்தரத்துல பண்றது இல்லை. கல்கத்தா இலுபச்சட்டி இல்லன்னா தண்டவாள இலுப்ப சட்டிலதான் பண்ணுவேன். இலுப்பசட்டி கொஞ்சம் பெருசா இருந்தா பெட்டர், ஏன்னா தக்காளி கொதிக்கும்போது ரொம்ப தெறிக்கும்.
//தொக்கு எப்படி share பண்ணுவீங்க மீனாக்ஷி? "இந்தாங்க இதை சாப்பிடுங்க, வாந்தியே வராது"னு சொல்வீங்களா?//
ReplyDelete:))
நேற்று தக்காளி தொக்கு செய்து பார்த்தேன். அரைத்தும் எல்லாம் சட்னி மாதிரி ஆகிவிட்டது. next time அரைக்காமல் வேகவைத்தே செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteபெருங்காயத்தை எப்படிப் பொறிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த போது மீனாக்ஷியின் பின்னூட்டம் உதவியாக இருந்தது.
ReplyDeleteவெந்தயப்பொடி எதற்காகப் போடவேண்டும்?