எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 26, 2012

தக்காளி சமையல்கள் பகுதி 2

இப்போ தக்காளிக் காயில் கூட்டு செய்யக் கத்துப்போம்.  இரு விதமாகக் கூட்டுச் செய்யலாம்.  ஒண்ணு பொரிச்ச கூட்டு.  இன்னொண்ணு வறுத்து அரைத்த கூட்டு.


தக்காளிக்காய் கால் கிலோ, பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், குழைய வேக வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி, உப்பு, சாம்பார் பொடி அல்லது மி.வத்தல் 2. தாளிக்க பெருங்காயம், கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, தாளிதம் செய்ய எண்ணெய்.

தக்காளிக்காயை நான்கு துண்டங்களாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  தேங்காய் துருவலோடு ஜீரகம் ஒரு மி.வத்தல் சேர்த்து அரைக்கவும்.  மி.வத்தல் சேர்க்கவில்லை எனில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும்.  தக்காளிக்காய் வெந்ததும், அரைத்த விழுது, வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விடவும்.  கீழே இறக்கி வைத்துக் கடுகு, உபருப்பு, மி.வத்தல் ஒன்று, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போடவும்.


வறுத்து அரைத்த கூட்டு:

தக்காளிக்காய் கால் கிலோ, துவரம்பருப்பு வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் பொடி.

வறுத்து அரைக்க:  மி.வத்தல் இரண்டு, கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் குவியலாக , பெருங்காயம் .

தாளிக்க:  கடுகு, உ.பருப்பு. கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிதம் செய்யவும் வறுக்கவும் தேவையான எண்ணெய்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொண்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

தக்காளிக்காயை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  வெந்ததும், வெந்த து.பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.  தேவையானால் ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள் சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கிக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளித்துப் பின் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

6 comments:

  1. நாங்கள் தக்காளிப் பழமாகவே எடுத்து, பொடியாக நறுக்கிப் போட்டு இதே போலச் செய்வோம். வறுத்து அரைக்கும் கூட்டுக்கு நாங்கள் திருநெல்வேலி டைப் அரைத்து விட்ட சாம்பார் என்று சொல்வோம்! இதற்கு எந்தக் காய் வேண்டுமானாலும் போடுவோம் என்றாலும் முருங்கைக்காய் ப்ளஸ் கத்தரிக்காய் போட்டுச் செய்யும் போது சாப்பிடுபவர்கள் ரசிப்பார்கள்! அடுத்தமுறை தக்காளிக்காய் வாங்கி செய்து பார்க்கவேண்டும் காய் என்பதால் கொஞ்சம் புளிக்குமோ?! :)

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், தக்காளிப்பழத்தில் அரைத்துவிட்ட சாம்பார் எனக்கு அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. :))) தக்காளி,கு.மி. போட்டு அடியிலே தாளித்துக் கொட்டிக்கொஞ்சமாகப் பருப்புப் போட்டுச் செய்யும் சாம்பார்னா பிடிக்கும். அரைத்து விட்ட சாம்பார் வேறே, இது வேறே. அரைத்து விட்ட சாம்பாருக்கு மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய் தான் வறுத்து அரைப்போம். இது வேறே. :)))))

    ReplyDelete
  3. கூட்டை சாம்பார்னு சொல்வீங்களா ஸ்ரீராம்? (எங்க வீட்டுக்கு வந்திருப்பீங்க போலிருக்கே? சின்ன வயசுல எங்கம்மா பொரிச்ச் குழம்பு செஞ்சதும், 'ஏம்மா தொட்டுக்க எதுவும் இல்லையா?'னு கேட்டா குழம்பிலந்து கொஞ்சம் காயை சரிச்சு, 'பொரிச்ச கூட்டு' என்று ஒரு கரண்டி வைப்பார்.)

    ReplyDelete
  4. வாங்க அப்பாதுரை, பொரிச்ச குழம்புக்கும், பொரிச்ச கூட்டுக்கும் கூட வித்தியாசம் உண்டே! :))))

    ReplyDelete
  5. எங்க வீட்லே எல்லாம் ஒண்ணு தான்!!

    ReplyDelete
  6. எங்க வீட்ல எல்லா ஒண்ணு தான்!!!

    ReplyDelete