மோர்க்குழம்பு! மோர்க்குழம்பு சிலருக்குப் பிடிக்காது. என்றாலும் அதுவும் நன்றாகவே இருக்கும்.இப்போ நாம் மோர்க்குழம்பில் சில வகைகளைப் பார்ப்போம். முதலில் கொதிக்க வைக்காத மோர்க்குழம்பு!
இதற்குத் தேவையான பொருட்கள்: நல்ல கெட்டித் தயிர் கடைந்தது ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு. தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி, கருகப்பிலை, தேவைப்பட்டால் கொத்துமல்லி.
இதற்குத் தானாக போண்டாவைத் தான் பொதுவாகப் போடுவார்கள். உளுந்தை ஊற வைத்து உப்புக்காரம் போட்டு அரைத்து உருட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது குழம்புக் கறிவடாம் இருந்தால் அதைத் தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
முதலில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொண்டு மோரில் கலக்கி உப்பையும் தேவையான அளவு போட்டுக் கொள்ளவும். அடுப்பை ஏற்றி ஓர் வாணலியில் தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்துக் கலந்து வைத்திருக்கும் தயிர்க்கலவையை அதில் ஊற்றிக் கலந்து உடனே அடுப்பை அணைக்கவும். பொரித்து எடுத்து வைத்திருக்கும் போண்டோக்களை அல்லது கறிவடாம்களை மோர்க்குழம்பில் சேர்க்கவும். சூடான சாதத்தோடு சாப்பிடலாம். அல்லது வேறு எதுக்கானும் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
இப்போது பிசைந்து சாப்பிடும் மோர்க்குழம்பு. இதற்குத் தானாக பூஷணிக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், சௌசௌ போன்றவற்றைப் போடலாம். பூஷணிக்காய் எப்போதுமே மோர்க்குழம்பிற்கு எடுத்தது.
இதற்குத் தேவையான பொருட்கள்: நல்ல கெட்டியான புளித்த மோர் இரண்டு கிண்ணம், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி அல்லது பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு.
பச்சை மிளகாய் இரண்டு அல்லது மூன்று. ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி இரண்டு டீஸ்பூன். இரண்டு டீஸ்பூன் அரிசியையும் ஜீரகத்தையும் ஒன்றாக ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலோடு ஜீரகம் அரிசியைச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். மோரோடு சேர்த்துக் கலந்து வைக்கவும். எந்தத் தான் போடுகிறோமோ அதை முதலில் வேக வைக்கவும். பூஷணிக்காய் எனில் கொஞ்சம் போல மஞ்சள் பொடி சேர்த்து உப்புப் போட்டு வேக வைக்கவும். காய் வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொண்டு அதிலேயே முதலில் அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க வைப்பார்கள். அப்படியும் செய்யலாம். அல்லது அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து கொண்டு அதை வெந்து கொண்டிருக்கும் தானில் கொட்டிக் கிளறிவிட்டுக் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துத் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளிக்கலாம்.
இன்னொரு முறை! இம்முறையில் செய்யும் மோர்க்குழம்பையும் பிசைந்து சாப்பிடலாம்.
தனியா ஒரு டீஸ்பூன், துபருப்பு ஒரு டீஸ்பூன், கபருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு+ஜீரகம் கலந்து ஒரு டீஸ்பூன் . ஜலத்தில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். இதற்குப் பருப்பு ஊற வைத்து அரைப்பதால் குழம்பு தானே கெட்டியாகும். ஆகவே அரிசி தேவையில்லை. அரிசிமாவும் வேண்டாம்.
இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாயுடன் மேலே சொன்ன ஊற வைத்த சாமான்களையும் சேர்த்து நன்கு அரைக்கவும். குழம்புக்கான தான் வெந்ததும் அரைத்த மசாலாவைக் கொட்டிக் கொஞ்சம் ஜலம் விட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்கையிலேயே தேவையான மோரைச் சேர்க்கலாம். அல்லது கீழே இறக்கி வைத்த பின்னர் தேவையான மோரைச் சேர்த்துக் கிளறி வைக்கலாம். பின்னர் தே.எண்ணெயில் கருகப்பிலையை உருவிப் போட்டுக் கடுகையும் தாளித்துக் கொட்டிக் கலக்க வேண்டும்.

கொதிக்க வைக்காத மோர்க்குழம்பு - இதைத்தான் நாங்கள் புளிசேரி என்போம். ஆனால் மஞ்சள் பொடி சேர்க்க மாட்டோம். (சிலர் சட்னி குழம்பு என்பார்கள்)
ReplyDeleteவாங்க நெல்லைத்தமிழரே, இங்கே எப்போவானும் தான் இந்த மோர்க்குழம்பு! பொடி, துவையல்னு சாப்பிடும்போது. இப்போ அடிக்கும் வெயிலில் துவையல் கிட்டேக் கூடப் போக பயமா இருக்கு!
Deleteஅதே தான் நெல்லை எங்க வீட்டிலயும் பச்சை புளிசேரி என்று சொல்வாங்க./ மஞ்சள் பொடி போடமாட்டோம்...அதே
Deleteபோண்டா போட்டால் போண்டா மோர்க்குழம்பு....பாட்டி சின்ன சின்னதா போண்டா செய்து குழம்பில் போடுவார்.
சில சமயம் பருப்பு வடையைக் கூட குழம்பில் போட்டுத் தருவார். நன்றாக இருக்கும். நானும் செய்திருக்கேன்..
கீதா
மோர்க்குழம்பு பிடிக்காதவங்க இருக்காங்களா என்ன?
ReplyDeleteஇதுக்கு தானாக, வேகவைத்து நீள வாக்கில் 2 இஞ்ச் சைசுக்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை போல் கட் பண்ணின சேனைத் தானைப் போடுவதை ஹோட்டல்களில் பார்த்திருக்கேன். நாங்க மோர்க்குழம்பில் வடை (அரிசி-துவரை சேர்த்து அரைத்தது) போடுவோம். (விசேஷ நாட்களில்)
எல்லோருக்குமே மோர்க்குழம்பு பிடிக்காது நெல்லைத் தமிழரே! சேனைக்கிழங்கை மோர்க்குழம்பில் போட்டு நான் பார்த்தது இல்லை. விசேஷ நாட்களில் மோர்க்குழம்பு வைத்து வடை தட்டும்படி ஆனால் அந்த வடை மாவை உருட்டிப் போட்டுப் பொரித்து மோர்க்குழம்பில் போடுவேன். உளுந்து வடை எனில் மோர்க்குழம்பு வடையாகவே பண்ணிடுவேன்.
Deleteகீதாக்கா கேரளத்தில் சேனை போட்டு மோர்க்கூட்டான் என்று வைப்பதுண்டு...நானும் செய்வதுண்டு. நன்றாக இருக்கும்.
Deleteகீதா
இன்னும் மோர்க்குழம்பு வகைகள் இருக்கா? நாங்க பண்ணும் மோர்ச்சாத்துமது ஒருவேளை ரச வகைகளில் வருமா?
ReplyDeleteநீங்க மோர்ச்சாத்தமுது என்கிறீர்கள், மாமியார் வீட்டில் மோர் ரசம் என்பார்கள். நாங்க மோர்ச்சாறு என்போம்.
Deleteநெல்லை நிறைய மோர்க்குழம்பு இருக்கே வெரைட்டிஸ்....எனக்கும் மகனுக்கும் பிடிக்கும் என்பதால் எங்க வீட்டுல மோர்க்குழம்பு வெரைட்டிஸ் ..
Deleteகீதா
மாம்பழ புளிசேரி, மாவடு மோர்க்குழம்பு, அப்பக்கொடி மோர்க்குழம்புலாம் வருமா?
ReplyDeleteமாவடு மோர்க்குழம்பெல்லாம் அவ்வளவாப் பிடிக்காது என்பதால் பண்ணியதே இல்லை. பண்ணாமல் எப்படிச் சொல்லுவது? அப்பக்கொடியைப் பார்த்ததே இல்லை. பாரதிமணி மூலம் தான் கேள்விப் பட்டதே!
Deleteமுன்னெல்லாம் அப்பக்கொடி வருடத்துக்கு ஒரு முறை எங்க கிராமத்துத் தெருல வித்துக்கிட்டு வருவாங்க. நெல்லைக்குப் போயிருந்தபோது 'அப்பக்கொடி' எங்கு கிடைக்கும்னு கேட்டா, நாட்டு மருந்துக்கடைக்குப் போங்க என்றார்கள்.
Deleteதனியா விதை போட்டு செய்வதை மோர் ரசம்னு நான் செய்வேன் :)
ReplyDeleteகூடவே வாழைத்தண்டை வதக்கி தேங்காயோடு சேர்த்தும் ட்ரை பண்ணியிருக்கேன் .
மோர்குழம்பிற்கு எனக்கு ரொம்ப பிடிச்ச காய் வெண்டை தான் .தொடருங்கள் அக்கா .
நீங்க குழம்பு வடாம் ரெசிப்பி போட்டிருக்கீங்களா ??இருந்த லிங்க் ப்ளீச்
தனியா, எந்த விதையைப் போட்டு மோர் ரசம் செய்வீங்க ஏஞ்சலின்?
Deletehttps://geetha-sambasivam.blogspot.com/2013/03/blog-post_24.html// நீங்க கேட்ட குழம்பு வடாம் செய்முறை இங்கே இருக்கு ஏஞ்சல். இதைப் போலவே தனி உளுந்தோடு ஒரு கைப்பிடி துவரம்பருப்பைச் சேர்த்து உப்புக்காரம் போட்டு அரைத்தும் பண்ணலாம். என் அம்மா அதிகம் உளுந்தில் தான் பண்ணுவார்.
Deleteதாளிக்கையில் மிவத்தல், துபருப்பு, தனியா, ஓமம் போட்டுத் தாளிப்பாங்க மோர் ரசம்/மோர்ச்சாறுக்கு! ஏஞ்சல் அதைத் தான் சொல்றாங்கனு நினைக்கிறேன்.
Deleteஅக்கா செஃப் :) என்னை கலாய்க்கிறாராம் :) நாம் dhaniya இதை தமிழில் தனியா னு வருது அதான் சொல்றார் :) ஓகே கொத்தமல்லி விதைனு சொல்லிடுவோம் இனிமே
Delete//Sorry, the page you were looking for in this blog does not exist.//
Deleteஎன்கிறது சுட்டிக்கு போனா
https://geetha-sambasivam.blogspot.com/2013/03/blog-post_24.html
Deleteகருவடாக் குழம்பும், அரைக்கீரை மசியலும் சாப்பிட்டிருக்கீங்களா? smoothly going. No problem. cut the // after the html and click for copy, paste and go
கீதாக்கா எங்க அம்மாவும், பாட்டியு உளுந்தில்தான் செய்வாங்க கரிமத்துவடாம்...அப்படினு சொல்லி...நானும் கற்றதுதான் அவங்ககிட்டருந்து...
Deleteகீதாக்கா இப்படி அரைக்கீரை மசியல் கருவடாக் குழம்புனு சொல்லி நீர் ஊற வைத்து ...செய்துட வேண்டியதுதான். மகனுக்கு என்னிடம் இருந்த கருவடாம் எல்லாம் கொடுத்துவிட்டுவிட்டேன். அதுக்கு அப்புறம் செய்யவே இல்லை..
கீதா
மோரில் இவ்வளவா? வியப்பாக உள்ளதே?
ReplyDeleteவாங்க முனைவரே, உங்களை இந்தப் பக்கம் பார்க்க எனக்கும் வியப்பு! நன்றி.
Deleteமோர்க்குழம்பு அவ்வப்போது எனக்குப் பிடிக்காமல்போகும்! குறிப்பக சீரகம் போட்டால் பிடிக்க மாட்டேன் என்கிறது!
ReplyDeleteஹாஹாஹா, ஶ்ரீராம், நானும் ச்ராத்த மோர்க்குழம்பைத் தவிர்த்து தினசரிகளில் பண்ணும் மோர்க்குழம்பில் சீரகம் சேர்க்க மாட்டேன். மோர்க்குழம்பு பண்ணினால் அது தீரும்படி மாலை ஏதேனும் பண்ணிடுவேன். அநேகமா சேவையா இருக்கும். இல்லைனா மேதி பராத்தா! அதுவும் இல்லைனா உ.கி. மசாலா சேர்த்து வதக்கி தஹி ஆலு!
Deleteஏன்...அடைக்கு மோர்க்குழம்பு நல்லா இருக்காதா? 'சேவை'ன்னு சொன்னதும் எனக்கு சேவை சாப்பிடணும்போல் இருக்கு. ஒரு மாதத்துக்கு மேலாயிற்று சேவை சாப்பிட்டு. போன மாசம்லாம், வாரம் இருமுறை சேவை பண்ணுவோம் (நான் பிழிவேன், மனைவி மற்ற வேலை எல்லாம். அப்புறம் நாழியின் காலைப் பிடிக்கும் வேலை ஹாஹா). சென்னைக்குப் போன உடனே சேவைதான்.
Deleteஎப்போவானும் மோர்க்குழம்பு அடைக்கும் உண்டு. அநேகமா வத்தக்குழம்பு தான் அடைக்குத் தொட்டுப்போம்.
Deleteஸ்ரீராம் ஹைஃபைவ். எனக்கும் மோர்க்குழம்பில் ஜீரகம் சேர்த்தால் கொஞ்சம் சோ ஸோ தான்...ஹா ஹா ஒதுக்க மாட்டேன் ஆனால் ப்ரிஃபெரன்ஸ் ஜீரகம் செர்க்காமல்...
Deleteகீதாக்கா சொல்லிருக்கும் கடைசி வகை மோர்க்குழம்புதான் மாமியார் வீட்டில் செய்வது. அதில் கூட நான் தனியா சேர்க்காமலும் செய்வேன்..
கீதா
பாட்டி சி வெ சேர்க்க மாட்டார் கருவடாத்திற்கு ஆனால் அம்மா சேர்தும் செய்வார். நானும் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வேன். மகனுக்கு வெங்காயம் போட்டது பிடிக்கும் என்பதால் அதைத்தான் அத்தனையும் கொடுத்துவிட்டேன். போடாததும் எடுத்து சென்றுவிட்டான்.
Deleteகீதா
கீதாக்கா அடைக்கு மோர்க்குழம்பு நன்றாக இருக்குமே....எனக்கு ரொம்பப் பிடிக்கும்
Deleteகீதா
உங்க கருவடாம் சுட்டி போய்ப் பார்க்கிறேன்...கீதாக்கா
Deleteகீதா