எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 26, 2020

பாரம்பரியச் சமையலில் ஒரு சில குறிப்புகள்!

சில ஒத்துப்போகும் சமையல் குறிப்புகளைப் பற்றி இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். ஒவ்வொருத்தர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி பண்ணுவார்கள் என்பது தெரியும். ஆனாலும் சில சமயங்களில் சில சமையல்கள் கொஞ்சம் கூட ஒத்துப் போகாமல் இருக்கும்.  நாம் வேறு வழியில்லாமல் சாப்பிடுவோம். ஆகவே ஒத்துப் போகும்படியான சில சமையல்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று எண்ணம்.  அப்படியான சிலவற்றை இங்கே சொல்லலாம்னு நினைத்தேன். இதைக் காலையிலேயே எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஏனோ வெளியிடத் தோன்றவில்லை.  இப்போப் பார்த்தால் முகநூலில் கிட்டத்தட்ட இதே கருவைக் கொண்டு ஒரு கவிதை நண்பர் நரசிம்மன் ராமானுஜம் யாரோ எழுதினதுனு பகிர்ந்திருக்கார். சரி நாமும் போட்டுடுவோம்னு வந்தேன்.

சாம்பாரோ, வற்றல் குழம்பு/வெறும் குழம்பு எனப் பண்ணினால் தொட்டுக் காய் ஏதேனும் வதக்கலாகவோ, தேங்காய், பருப்புப் போட்ட கறியோ கூட்டோ இருக்கலாம். கூடப் பச்சடி ஏதேனும் ஒன்று பண்ணலாம். வற்றல் குழம்புடன் கூடப் பருப்புசிலி பண்ணலாம் பரவாயில்லை. அல்லது மோர்க்கூட்டு, அவியல், எரிசேரி என்று பண்ணிக்கலாம்.ஆனால் வற்றல் குழம்பு, சாம்பார் ஆகியவற்றோடு கூட்டையும் புளி விட்டுப் பண்ணக் கூடாது. ஒரு சிலர் ரசவாங்கி என்னும் பெயரில் பண்ணும்  புளிவிட்ட கூட்டை சாம்பார், வற்றல் குழம்பு, வெறும் காய்கள் மட்டும் போட்டப் புளிக் குழம்புடன் பண்ணுகின்றனர். புளி விட்ட கூட்டெல்லாம்   மோர்க்குழம்புடன் நன்றாக ஒத்துப் போகும். குழம்பும் புளி விட்டு, கூட்டும் புளிவிட்டு எனில் சமையல் ருசிக்காது.

எங்க வீட்டில் கூட்டில் புளிவிட்டால் அன்று குழம்பு கட்டாயம் மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு.  ரசத்தில் கொஞ்சமாய்ப் பருப்பு சேர்ப்போம்.  எப்போவுமே பருப்பு ரசம் என்றால் பருப்புக் கரைத்த நீர் விட்டுத் தான் ரசத்தை விளாவுவோம். பருப்பு அடியில் தங்கும்படி போடுவதில்லை. அதே போல் பருப்பில்லாமலும் கூட்டுப் பண்ணலாம். பொரிச்ச கூட்டு எல்லாவற்றிற்கும் பருப்பு தேவை இல்லை. கூட்டில் பருப்புப் போட்டுப் பண்ணினால் (பொரிச்ச கூட்டு மாதிரி)  புளிவிட்ட குழம்பு ஏதேனும் பண்ணலாம். பொதுவாய்ப் பாலக்காடு பக்கம் பருப்புப் போட்ட கூட்டுவகைகளை (2,3 காய்கள் போடுவார்கள்) மிளகுஷ்யம், அல்லது மொளகூட்டல் என்பார்கள். அங்கே அது பிசைந்து சாப்பிடவும் பயன்படும் என்பதால் தொட்டுக்கப் புளிப்பச்சடி அல்லது புளிவிட்ட கறி  ஏதேனும் இருக்கும். இங்கே நாம் தொட்டுக்க அந்தக் கூட்டைப் பண்ணுவதால் புளிவிட்ட குழம்பு சரியாக வரும்.

பிட்லை எல்லாம் எங்க வீட்டில் கூட்டு மாதிரித் தொட்டுக்கப்பண்ணுவதால் அன்னிக்குக் கட்டாயமாய் மோர்க்குழம்பு உண்டு. அதே மாமியார் வீட்டில் சாம்பார் தான் பிட்லை என்பதால் தொட்டுக்கப் பச்சடியும் தேங்காய், பருப்பு சேர்த்த கறியும் பண்ணுவார்கள். கீரை எனில் அது வத்தல் குழம்புடன் ஒத்துப் போகும் என்றாலும் சாம்பாரும் சரிதான். மோர்க்கீரை, அரைச்சு விட்ட கீரை(இது நான் 2,3 விதங்களில் அரைச்சு விடுவேன்.) வெறும் தேங்காய், பச்சைமிளகாய் அரைச்சுவிட்டுக் கொஞ்சம் நீர்க்க இருந்தால் மாவு கரைத்துவிடுவேன். இன்னொன்று தேங்காய், ஜீரகம், ஒரே ஒரு மிவத்தல் வைத்து அரைத்துவிடுவது. இன்னொரு முறையில் துவரம்பருப்பைக் கொஞ்சம் ஊற வைத்துக்கொண்டு தேங்காய், ஜீரகம், மிவத்தலோடு சேர்த்து அரைத்து விடுவது. இதற்கு மாவு கரைத்துவிட வேண்டாம். இதைத் தவிர்த்துப் பயத்தம்பருப்பு அல்லது துவரம்பருப்புப் போட்டுக் கீரைக்கு மி.வத்தலோடு, தேங்காய் தூக்கலாக வைத்து ஜீரகம் சேர்த்து அரைத்து விட்டால் அதான் மொளகூட்டல். இதுக்குத் தொட்டுக்கத் தனியாய்ப் பண்ணுவார்கள். கீரையைப் பிசைந்து சாப்பிட வைத்துக் கொள்வார்கள்.

இதைத் தவிரவும் புளி விட்ட கீரை பருப்புப் போட்டுப் பிசைந்து சாப்பிடப் பண்ணுவார்கள். புளி விட்ட கீரை பருப்புப் போடாமல் பண்ணினால் அது பொரிச்ச குழம்போடு தொட்டுக்கப் பண்ணுவார்கள்.  துவையல் அரைத்தால் அன்று பச்சடி ஏதேனும் ஒன்று இருக்கும். பொரிச்ச கூட்டுக் கூடச் சிலர் பண்ணுகிறார்கள்.  பிசைந்த சாதம் எனில் மோர்க்குழம்பு அல்லது அவியல் அல்லது மோர்க்கூட்டு ஏதேனும். எது எப்படியானாலும் சாம்பார், வத்தக்குழம்பு/வெறும் குழம்பு இவற்றோடு புளிவிட்ட கூட்டை மட்டும் பண்ணாதீங்க! அதோடு இல்லாமல் கூட்டுக்குக் கொஞ்சம் தெரியறாப்போல் காய் நறுக்கணும். ரொம்பவே வெந்து குழைந்து விட்டால் அது என்ன காய், என்ன கூட்டுனே தெரியாமல் போகும். இது எல்லாம் நம் தென்னிந்தியச்  சாப்பாட்டு முறைக்கு மட்டுமே சொல்லுகிறேன்.

எங்க வீட்டில் கூட்டுக் குழம்பு என்னும் தான்கள் நிறையப் போட்டுப் பண்ணும் குழம்பிற்குத் தொட்டுக்கொள்ள அப்பளம் பொரிப்பார்கள். இப்போல்லாம் கூட்டுக் குழம்புன்னா என்னனு தெரியுமா சந்தேகமே! வாழைப்பூ, வாழைக்காய், கொத்தவரைக்காய், அவரைக்காய்னு சில குறிப்பிட்ட காய்களில் இது நன்றாக இருக்கும். காய்களைப் பொடியாக நறுக்கிக் கொண்டு கொஞ்சம் மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு நீர்க்கப் புளி கரைத்துவிட வேண்டும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றை தே. எண்ணெயில் வறுத்து அரைத்து விட வேண்டும். அல்லது சாம்பார்ப் பொடி போட்டுவிட்டுத் தாளிதத்தில் தேங்காயை வறுத்துக் கொட்டலாம். எப்படிச் செய்தாலும் கொண்டைக்கடலை, மொச்சை, காராமணி என்னும் தட்டாம்பயறு ஆகியவற்றையும் ஊற வைத்தோ அல்லது எண்ணெயில் வெடிக்கவிட்டோ குழம்பு கொதிக்கையில் சேர்க்கலாம். இதற்குத் தாளிதத்தில் குழம்புக் கருவடாமும் போடலாம். நன்றாக இருக்கும். இது காய்களை நிறையப் போட்டுப் பண்ணுவதால் தொட்டுக்கொள்ள அப்பளம், வடாம் போதும். ரசம் தேவை என்பவர்கள் ரசம் வைத்துக் கொள்ளலாம்.

28 comments:

  1. நாம பாரம்பர்யமாக பண்ணும் சமையலை கவனித்தாலே நீங்கள் சொல்வது எல்லாம் கவராயிருக்கும்.

    மோர்க்குழம்புக்கு ருசிக்கும் பருப்புசிலி, சாம்பார்/குழம்பு சாதத்திற்கு ருசிக்காது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே, கருத்துக்கு நன்றி

      Delete
  2. குழம்பில் புளி என்றால், புளிக்கூட்டு சாப்பிடமுடியாது. காரணம் ஒன்றும் இல்லை. புளி அதிகமாயிடும் (பாயசத்துக்கு மாங்காய் பச்சிடி தொட்டுக்கொள்வதைப்போல).

    எங்க வீட்டில் கத்தரி புளிக்கூட்டு, வாழை புளிக்கூட்டு என்றாலே அன்று மோர்க்குழம்புதான். தேங்கா சீரகம் அரைத்துவிட்ட கூட்டு என்றால் சாம்பாருக்கு நன்றாக இருக்கும், மோர்க்குழம்புக்கு நன்றாக இருக்காது

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, இந்த விஷயத்தில் மாமாவுக்கும் எனக்கும் வாக்குவாதம் வரும். பொரிச்ச குழம்பு பண்ணிட்டு முட்டைக்கோஸ் தேங்காய், பருப்புப் போட்ட கறியோ அல்லது கொத்தவரை, அவரை தேங்காய் பருப்புப் போட்ட கறியோ பண்ணு என்பார். இப்போ3,4 மாசமா முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாது என்பதால் வாங்கலை. சாப்பிட்ட சமயங்களில் முட்டைக்கோஸ்+வெங்காயம்+பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிடுவேன். அல்லது பொரிச்ச குழம்பு பண்ணி ஏதேனும் காயை வதக்கிடுவேன். என்னோட விருப்பம் பொரிச்ச குழம்பு எனில் புளிவிட்ட கீரைதான்! ஆனால் அது இங்கே பண்ண முடியாது!

      Delete
    2. நம்மைப்போல் இன்னொரு ஜீவன் - நினைக்கவே சந்தோஷமா இருக்கு.

      நான் சமையலில் மூக்கை நுழைத்து இது இது பண்ணலாம் இன்னைக்குன்னு சொல்லிடுவேன் (காய்கறிகளைப் பொறுத்தும் பசங்களுக்குப் பிடித்த மாதிரி ஒன்று இருக்கணும் என்பதையும் நினைத்து).

      அவள் சொல்லுவா, நான் நிறைய வெரைட்டிகளை பண்ண விடுவதில்லை என்று. (வெண்டைனா எனக்கு கரேமது, பச்சிடி. வருஷத்துக்கு ஒரு முறை வெண்டை பாசிப்பருப்பு கூட்டு என்பேன். ஆனா மறந்தும் மனைவி விரும்பும் வெண்டை புளிக்கூட்டு என்று சொல்லிட மாட்டேன்..எனக்கு அது பிடிக்காது. ஹா ஹா)

      இரண்டு நாட்கள் முன்பு, மனைவி, சப்போட்டா கேசரி செய்யப்போகிறேன் என்று சொன்னதும், வெறும் கேசரி செய்துவிடு என்று சொல்லிட்டேன். என்னைக் கேட்காமலிருந்தால் ஒன்றுமே சொல்லியிருக்கமாட்டேன்.

      Delete
    3. சப்போட்டா நல்ல சப்போட்டா எனில் செக்ந்திராபாதில் தான் சாப்பிட்டோம். அடுத்து ராஜஸ்தான், குஜராத்தில் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு மில்க் ஷேக் தான்! கேசரி எல்லாம் பண்ணினேன் என்றால் வீட்டில் இருக்க முடியாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வெண்டைக்காய்ப் புளி விட்ட கூட்டு இன்னமும் அவருக்குத் தெரியாது. என் பிறந்த வீட்டில் தான் அடிக்கடி பண்ணுவாங்க. அந்தக் கல்சட்டி மணமும், கூட்டின் சுவையும் இப்போக் கூட நினைத்துக் கொள்வேன். சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள்!

      Delete
  3. வத்தக்குழம்புக்கும் பருப்புசிலி நன்றாக இருக்கும். (எனக்கு பருப்பு சாத்துமதுக்கும் பருப்புசிலி பிடிக்கும்)

    நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு பாயிண்டும் முக்கியம்தான். நல்லா யோசிச்சு எழுதியிருக்கீங்க. பாராட்டுகிறேன் (ஆனால் பாயசத்திலிருந்து சடக் என்று வேறு சப்ஜெக்டுக்குத் தாவினதுதான் ஒரு மாதிரி இருக்கு..ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. பாயசம் இன்னும் முடியலை, வரும். அதுக்குள்ளே ஒரு அவசரம். அதான் உடனே இதை எழுதினேன்.

      Delete
  4. இப்படி காம்பினேஷன் பார்த்து செய்ய முடிவதில்லை என்றாலும், இரண்டு புளி போட்ட ஐட்டங்களை ஒரே நேரம் செய்து, ஒன்றுக்கு இன்னொன்றைத் தொட்டுக்கொள்வது சரி வராதுதான்.

    ReplyDelete
    Replies
    1. புளி போட்ட கூட்டு எனில் வெறும் ரசம் மட்டும் வைத்து அப்பளம் பொரிக்கலாம் ஸ்ரீராம். அது போதும்! குழம்பு வேறே எதுக்கு?

      Delete
  5. பிட்லை சாப்பிட்டு நாளாச்சு.   வர்ற வண்டியில் பாகற்காய் இருப்பதில்லை.  மற்ற காயில் செய்து சாப்பிடப்  பிடிப்பதில்லை.  முள்ளங்கி வாங்கவே ரொம்ப காத்திருக்க வேண்டியிருந்தது.  இப்போது கொத்துமல்லி கிடைப்ப்பதே இல்லை.  பத்து ரூபாய்க் கட்டு நூறு ரூபாயாம்.

    ReplyDelete
    Replies
    1. பாகல்காய் இல்லைனா என்ன்? கத்திரிக்காய்ப் பிட்லை சாப்பிடலாம். சேனைக்கிழங்கு+காராமணிக்காய்(பயத்தங்காய் என விற்பது) இரண்டும் சேர்த்துப் போட்டு சம்பங்கி பிட்லை எனப் பண்ணிச் சாப்பிடலாம்.

      Delete
    2. கொத்தமல்லி நூறு ரூபாயா? (நமக்கு ஒரு விரலில் பலத்த அடி பட்டிருக்கிறதே என்று வருந்தும்போது பக்கத்து வீட்டுக்காரருக்கு இரண்டு விரல் அடிபட்டிருக்கிறது என்று கேட்டதும், நம்ம துன்பம் கம்மிதான் என்று மனம் மகிழ்வதைப் போல)... இங்க நல்ல சைஸ் கட்டு 40 ரூபாய், 30 ரூபாய்னு விலை. சென்னைல 100 ரூபாயா?

      பழமுதிர்ச்சோலை மாதிரி, புடலை, செளசெள, சேப்பங்கிழங்கு நன்றாக இங்கு கிடைப்பதில்லை. ஆனால் பொதுவா காய்கறிகள், பழங்கள் சென்னையை விட இங்கு விலை மலிவு.

      Delete
    3. சௌசௌ அங்கே நிறையக் கிடைக்கணுமே நெல்லைத்தமிழன்? ஆனால் இங்கே கொத்துமல்லி இன்னமும் தேவைக்கேற்ப ஐந்து ரூபாய்க்கோ பத்து ரூபாய்க்கோ வாங்குகிறேன். பத்து ரூபாய் எனில் ஒரு சின்ன சுமாரான கட்டு. "பெண்"களூரில் எல்லாப் பழங்களுமே நன்றாக இருக்கும்

      Delete
    4. கொத்துமல்லி கிடைப்பதே இல்லை.  கிடைத்தால் விலை அதிகம்.  மாதவரத்தில் விலை அதிகம் என்பதாலேயே வியாபாரிகள் வாங்காது வந்து விடுகிறார்கள்.  மிகச்சில இடங்களில் அங்கு விளைவதை அப்படியே எடுத்து வந்து விற்கும் இடங்களில் சகாயமாக கிடைக்கும்!

      Delete
    5. புடலை சாப்பிடுவதே இல்லை.  சௌசௌவும் அப்படியே!  செம்பு அலுத்து விட்டது!  என்னதான் செய்ய!

      Delete
    6. பழங்கள்... நிஜமா இங்கு நிறைய வெரைட்டி சீசனைப் பொறுத்து கிடைக்குமு.

      மார்ச் கமலா ஆரஞ்சு, மார்ச் ஏப்ரல் மே - வாட்டர் மெலன், மஸ்க் மெலன் இன்னொரு மெலன், பைனாப்பிள் - 10-20 ரூபாயில், பலாப்பழம், மாம்பழம் இப்போ கிலோ 40-50 இன்று மல்கோவா 70 ரூ, சப்போட்டா, சாத்துக்குடி என்று வெரைட்டியா கிடைக்குது. எல்லாவித வாழைப்பழமும் 50 ரூ க்கும் குறைவு (கற்பூரவல்லி, நேந்திரம், எலாக்கி, கோழிக்கோடு, செவ்வாழை..).

      காயகறிகளும் மலிவு. கொரோனா என்பதால் முழு வெண் பூசனி வாங்க வேண்டியிருக்கு கிலோ 25 ரூ. இப்போ தக்காளி கிலோ 10 ரூ, வெண்டை 20 ரூ, போனவாரம் கோவைக்காய் 10 ரூ, இன்று பீட்ரூட் 20 ரூ. சௌசௌ சிறியதா இருக்கு. சென்னை மாதிரி பெருசா கிடைக்கலை.

      திருவானைக்காவில் கள்ளன் எடுத்து பூ ஷேப்பிலேயே இருக்கும் ஒரு வாழைப்பூ 10 ரூபாய்க்குப் பார்த்தது நினைவுக்கு வருகிறது

      Delete
    7. நேத்திக்கு மிச்சம் கொடுக்க வேண்டிய ரூபாய்க்காகக் கொத்துமல்லி வாங்கி வந்தார். கணிசமாக இருக்கிறது. நெல்லிக்காய் கிலோ 50 ரூ தான். மாங்காய் ருமானி கிலோ 20 ரூக்கு விற்றது. இப்போக் கொஞ்சம் ஏறி இருக்கு. ஒட்டு மாங்காய் (கல்லாமை) அரைக்கிலோ 15 ரூபாய்.

      Delete
  6. எத்தனை எத்தனை காம்பினேஷன்....

    ReplyDelete
  7. வாங்க வெங்கட், கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. காம்பினேஷன் அருமை. :)

    ReplyDelete
  9. கீதாக்கா ஆமாம் புளி விட்டுக் குழம்பு செய்தா தொட்டுக் கொள்வதில் புளி இருக்காதுதான்.

    நீங்கள் சொல்லியிருக்கும் கூட்டுக் குழம்பு உ.ப மி மி வ வறுத்து தேங்காய் போட்டு அரைத்துச் செய்வதுண்டு.

    இப்படி மிளகுக் கூட்ட்டிற்கும் செய்வாங்க...

    இதிலேயே நிறைய வேரியேஷன்ஸ் உங்களுக்கும் தெரியும்..எங்க வீட்டு உறவினர்களிடையே செய்வதில் வேறுபடும்.

    இதைத்தான் நான் மிளகுசியம் குறிப்பு திங்கவுக்கு அனுப்பியதில் சொல்லியிருக்கிறேன்...

    அக்கா பாலக்காட்டில் மொளகூட்டல் என்பது தேங்காய், ஜீரகம் வமி அரைச்சு விடறது இல்லையா....எங்க வீட்டில அப்படித்தான் சொல்லுவாங்க.

    மிளகுஷியம் மிளகு மட்டும் போட்டு செய்யறது...நம் வீட்டில்/பாலக்காட்டில்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நாங்க உ.பருப்பு, மிளகு,மிளகாய் வற்றல் வறுத்துத் தேங்காயும் சேர்த்து அரைத்துவிட்டால் அது பொரிச்ச குழம்புக்கு. புளி சேர்க்க மாட்டோம். இன்னொரு முறை மிளகாய்ப் பொடியும், மிளகு பொடியும் போட்டு மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்துக் காய்களை வேகவிட்டுக் கொண்டு ஜீரகம், தேங்காய் மட்டும் அரைத்துச் சேர்த்துவிட்டுக் கொதிக்கவிட்டுப் பின்னர் தேங்காய் எண்ணெயில் தாளிப்பு. இதுவும் ஒரு வகைப் பொரிச்ச குழம்பு. வெறும் மிளகும், உளுத்தம்பருப்பும் மட்டும் வறுத்துப் பொடி செய்து போடுவோம், தேங்காய் சேர்க்காமல். பத்தியப் பொரிச்ச குழம்பு.

      Delete
    2. மிளகுஷ்யம் என்றால் மொளகூட்டலையும் சொல்வாங்கனு தான் கேள்விப் பட்டேன். மிளகு மட்டும் போடுவதா?

      Delete
    3. மி பொடி, மிள்கு பொடி போட்டு மஞ்சள் செர்த்து தேங்காய் ஜீ அரைத்துவிட்டு யெஸ் யெஸ் இதுவும் செய்வதுண்டு...நம் வீட்டில் அதாவது பிறந்த வீட்டில்/..குறிப்பா என் பாட்டி இப்படி மாறி மாறி செய்வார். பெயர்தான் எனக்குத் தெரியவில்லை. தெரிந்ததை வைத்துச் சொல்லுகின்றேன்...நானும் வீட்டில் இதைச் செய்வதுண்டு.

      கீதா

      Delete
  10. ஒரு புளி சேர்த்தது இருந்தால் இன்னொன்று புளி போட்டு செய்யக்கூடாது என்பது எழுதாத
    சட்டம்:)
    விவரங்கள் மிக அருமை கீதா மா.
    இங்கே சௌ சௌ ஒண்ணு ஒரு டாலர்.
    எனக்காக பொண்ணு ஆர்டர் செய்யட்டுமானு கேட்டதும்,
    ஜெரிக்கவே ஜெரிக்காதுன்னு சொல்லி விட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் கேட்கறீங்க வல்லி, அரைச்சு விட்ட சாம்பார், பிட்லை பண்ணிட்டு இம்மாதிரிப் புளிவிட்டு அதே அரைத்த கலவையைச் சேர்த்துக் கூட்டுப் பண்ணுகிறார்கள்! :))))) சௌசௌ நம்ம வீட்டில் அவருக்குப் பிடிக்காத ஒன்று. எப்போவாவது வாங்குவோம். காடரிங்கில் அநேகமாய் முட்டைக்கோஸ், பீட்ரூட், சௌசௌ தான் அதிகம் கொடுப்பார்கள். முட்டைக்கோஸ், பீட்ரூட் பண்ணினால் அன்னிக்குக் காய் ஏதானும் நானே பண்ணிக்கும்படி ஆகும். சௌசௌ பரவாயில்லைனு வாங்கிப்போம்.

      Delete