எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, February 16, 2013

நீங்க மலையாளமா? தமிழா?

என்னோட அப்பா வீட்டிலே ஆந்திராவிலே இருந்து அப்பாவின் கொ.தா. வந்த கதையைப் போன ஏப்ரல் புத்தாண்டுக்குப் போட்ட பதிவிலே பார்த்திருப்பீங்க.  ஆகவே எங்க வீட்டிலே யுகாதி, தமிழ் வருஷப் பிறப்பு, விஷுனு எல்லாமுமே கொண்டாடுவாங்க.  சமையல்லேயும் அவியல், எரிசேரினு பண்ணறது உண்டு.  இப்போ நாம எரிசேரியை எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாமா?

கல்யாணம் ஆகித் தலைப் பொங்கல்!  மாமியார் வீட்டிலே இருக்கோம்.  போகி ஆச்சு.  மறுநாள் பொங்கலுக்குத் தனிக்கூட்டுனு மாமியார் சொல்லவும், அந்தப் பெயரே புதுசாக இருந்தது எனக்கு.  அது எப்படிச் செய்யறதுனு கேட்டுத் தெரிஞ்சுண்டேன்.  அப்போ அவங்க கேட்டாங்க, எரிசேரி உங்க வீட்டிலே கிடையாதானு! எரிசேரி என்றதும் நாக்கைத் தீட்டிக் கொண்டு, "சேனைக்கிழங்கிலேயும், வாழைக்காயிலும் செய்வாங்களே." என்றேன்.  தனிக்கூட்டுக்கும் சேனை, வாழை சேர்ப்பதால் மாமியாரும் அதே தான் என்றார்.  மற்ற விபரங்கள் தெரியாததால் நானும் மறுநாள் எரிசேரிக்குக் காத்திருந்தேன்.  சாப்பிடும்போது தனிக்கூட்டு மட்டுமே பரிமாறப் பட்டது.  எரிசேரியைக் காணொம்.  இதோ வரும், அதோ வரும்னு காத்திருந்தது தான் மிச்சம்.  வரலை.  அப்புறமா மெல்ல என் கடைசி நாத்தனாரைக் கேட்டேன்.  எரிசேரி பண்ணலையானு.  அவளோ, ராத்திரிக்கு என்றாள்.  ராத்திரியும், மிச்சம் இருந்த கூட்டை எல்லாம் ஒன்றாக்கி, மேலும் காய்களை நறுக்கிப் போட்டு ரசத்தையும் அதோடு சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொண்டிருந்தனர்.  எரிசேரி பண்ணறாப்போல் தெரியலை.  திரும்பவும் மாமியாரிடம் கேட்டேன்.  "எரிசேரிக்கு நான் வேணாக் காய்கள் நறுக்கவா? " மாமியாரோ, "எதுக்கு?  அதான் கொதிக்கிறதே அடுப்பில்!" என்றார்.  இது எரித்த குழம்பு னு நான் சொல்ல, அதான் எரிச்சேரி என அவர் அழுத்தம் கொடுத்துச் சொல்ல, மயக்கமே வந்துடுச்சு எனக்கு.  நான் "இது எரிசேரி இல்லைனு சொல்ல, "பின்னே, எப்படிப் பண்ணுவாங்க" னு அவங்க கேட்க நானும் விவரித்தேன்.  ஐய,  அதெல்லாம் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க.  அப்புறமா நான் எரிசேரி பண்ணிக் காட்டி அவங்களையும் சாப்பிட வைச்சது தனிக்கதை!

எரிசேரி எப்படிப் பண்ணறது பார்க்கலாம் அடுத்து!

14 comments:

  1. ஹிஹி.... நான் தமிழ்தான்! எரிசேரிக்கு முன்னோட்டமா... மிஞ்சிய குழம்பு கூட்டு ரசம் எல்லாவற்றையும் ஒன்றாய்ப் போட்டுக் கொதிக்க வைப்பதற்கு தஞ்சாவூர்ப் பக்கம் 'தொச்சு' வோ என்னவோ சொல்வார்கள்! சரியாக நினைவில்லை.

    ReplyDelete
  2. இதுல கூட சஸ்பென்ஸா?
    எரிசேரில தஞ்சாவூர் வகை திருநெல்வேலி வகைனு ரெண்டு வெர்ஷன் இருக்குனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. தமிழ் மலையாளத்துக்கும் எரிசேரிக்கும் என்ன சம்பந்தம்? அடுத்த பதிவுல சொல்வீங்களா? எல்லாரும் வைகோ மாதிரி ஆயிட்டாங்க. ஹ்ம்ம்.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், "தொச்சு" கடுகு எழுதற நகைச்சுவைத் தொடரிலே கமலாவோட தம்பி. :)))) இங்கே எங்க மாமியார் வீட்டிலே எரிச்சேரி அல்லது எரிச்ச குழம்புனு சொல்றாங்க. :))) எரிச்சேரிதான்

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ மின்சாரம்! :(

    ReplyDelete
  5. அட? பின்னூட்டம் போயிருக்காதுனு நினைச்சேன். :))))))

    ReplyDelete
  6. பாதியிலே விட்டது!

    எரிச்சேரினா இதான்னு அழுத்தம் திருத்தமாச் சொல்வாங்க. இப்படியான ஒரு குழம்பைப் பொங்கல் சமயம் செய்வாங்க என்பதே எனக்குக் கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும். :))))

    ReplyDelete
  7. சஸ்பென்ஸெல்லாம் இல்லை அப்பாதுரை, எழுத ஆரம்பிச்சா வளவளனு கதை மாதிரி நீண்டுடுது!:) அதான் சுருக்கமா இருக்கட்டும்னு! :)

    ReplyDelete
  8. தமிழ் நாட்டிலே பொதுவா எரிசேரியெல்லாம் பண்ணிப் பார்க்கலை. மதுரை, திருநெல்வேலிக்காரங்களைத் தவிர! அதான்!:)))))

    ReplyDelete
  9. எங்கம்மா அவியல், எரிசேரி எல்லாமே பண்ணுவார்.

    மாமியார் வீட்டில் அவியல் உண்டு, எரிசேரி செய்வதில்லை...:)

    ReplyDelete
  10. வாங்க கோவை2தில்லி,

    முதல் வரவுக்கு நன்றி. கோவைப்பக்கம் பாதி மலையாளச் சமையல் தானே. வாழைக்காயில் ஒரு கறி பண்ணுவாங்க, சூப்பரா இருக்கும். :))))

    ReplyDelete
  11. வாழைக்காய் மிளகூட்டலா?

    ReplyDelete
  12. ஸாரி.. 'தொஸ்ஸு' என்று சொல்லணுமோ....!

    ReplyDelete
  13. ஹிஹி, தொஸ்ஸு இல்லை, நீங்க கொத்சுவைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். சிலர் அதை கொஜ்ஜுனு உச்சரிப்பாங்க. அதுக்கு இப்படி எல்லாக் காய்களும் போட்டுப் பண்ணுவதுண்டு. அதாத் தான் இருக்கும்.

    ReplyDelete
  14. மிளகூட்டலா??? சரியாத் தெரியலை கோவை2தில்லை. சாப்பிட்டதின் பெயர் நினைவில் இல்லை. :))))

    ReplyDelete