முன்பெல்லாம் ஒரு வாரமாவது தீபாவளி பக்ஷணம் பண்ணுவோம். அப்படியும் எங்க மாமியார் ரொம்பக் குறைச்சலாப் பண்ண வேண்டி இருக்குனு வருத்தப் படுவாங்க. இப்போ அநேகமா எல்லாரும் ஆர்டர் கொடுக்கிறாங்க. இல்லைனா கொஞ்சமாப் பண்ணறாங்க. நான் தீபாவளிக்கு விநியோகம் பண்ணறதுக்குனு கொஞ்சமாக பக்ஷணங்கள் பண்ணுவது உண்டு. தேன்குழல், ஓமப்பொடி கொஞ்சம் போலப் பண்ணிட்டு மிக்சரைக் கொஞ்சம் கூடப் பண்ணுவேன். தேன்குழல், ஓமப்பொடி பத்து அல்லது பனிரண்டுக்குள் தான் பண்ணுவேன். அதையே சாப்பிடணுமே! ஸ்வீட் எப்படியும் இரண்டாவது இருக்கும். போன வருஷம் ஹூஸ்டனில் பையர் எதுவுமே பண்ணக் கூடாதுனு கண்டிப்பாய்ச் சொல்லி அப்புறம் எண்ணெய் வைக்கணும்னு சாஸ்திரம்னு சொன்னதும் உளுத்த மாவுத் தேங்குழல் மட்டும் கொஞ்சம் போலப் பண்ணச் சொன்னார். ஸ்வீட்டுக்குப் பாயசம் போதும்னு சொல்லிட்டார். நீ அடுப்படியிலே வெந்தது எல்லாம் போதும்னு அவரோட கட்சி.
இந்த வருஷமும் இங்கே அதிகம் பண்ணலை. இன்னிக்குக் கொஞ்சமா உளுத்தமாவுத் தேன்குழலும், முள்ளுத் தேன்குழலும் பண்ணினேன். நாளைக்குக் கொஞ்சம் போல மைசூர்பாகு. அவ்வளவு தான். இதையே மைசூர்பாகை நான் தான் சாப்பிட்டாகணும். ரங்க்ஸுக்குச் சாப்பிட முடியாது. :( ஆகையால் இப்போல்லாம் வீட்டில் ஸ்வீட்டே யாரானும் வந்தால் பண்ணறதோடு சரி. இப்போ உளுத்த மாவுத் தேன்குழல் எப்படிப் பண்ணறதுனு பார்ப்போமா! இதை இருவிதமாகப் பண்ணலாம். பாரம்பரிய முறை ஒண்ணு. நாங்களாய்க் கண்டு பிடிச்ச முறை இன்னொண்ணு. இந்த இன்னொரு முறையிலேயே இன்னிக்குப் பண்ணினேன்.
பாரம்பரிய முறையில் அரிசியை ஊற வைத்துக் களைந்து கொஞ்ச நேரம் நிழலில் உலர்த்திப் பின்னர் மெஷினில் மாவாக்கி/அல்லது இடித்து/(இடித்துப் பண்ணி இருக்கேன்) அல்லது மிக்சியில் அரைத்து, உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மாவாக்கி அதையும் போட்டுப் பண்ணுவாங்க.
இப்போப் பண்ணுவது ஒரு கிலோ அரிசிக்கு ஒரு ஆழாக்கு/200கிராம் உளுந்தை அதிலேயே போட்டு மிஷினில் அரைத்துக் கொண்டு வந்துவிடுகிறோம். அதிலே தேன் குழல் பண்ணினாலும் நன்றாக வருகிறது. மாவு மீந்து போனாலும் கவலையில்லை. இன்னொரு நாள் பண்ணிக்கலாம். அல்லது ரவா தோசை, கோதுமை தோசை, கேழ்வரகு தோசைகளுக்குப் போட்டுக்கலாம். இனி அடுத்த பதிவில் செய்முறை பார்க்கலாம். ஹிஹிஹி, இது கதையாக நீண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். :)))))))

கேள்வியை மாத்திக் கேட்டிருக்கணும் - 'தீபாவளிக்கு என்ன பக்ஷணம் சாப்பிடப் போறீங்க?'
ReplyDeleteஇங்கேயும் ஆயிண்டே இருக்கு. எப்பவுமே போல லட்டு, தேன்குழல், ரிப்பன், முள்ளு முறுக்கு (எனக்கு ரொம்ப பிடிச்சது) மாலாடு. முடிஞ்சா கொஞ்சம் மிக்சர் பண்ற ஐடியா இருக்கு. பெரிய பையன் அடுத்த வருஷம்லேந்து தீபாவளிக்கு கூட இருப்பானான்னு தெரியாது. அதனால அவனுக்கு இதெல்லாம் பிடிக்கும். மேலும் பண்ணும்போதே ஆசையா சாப்பிடுவான். இங்க பசங்களால பெருசா தீபாவளி எல்லாம் கொண்டாட முடியறதில்லை. இன்னும் சொல்லபோனா பசங்க விவரம் தெரிஞ்சு நம்ப ஊர்ல தீபாவளியே கொண்டாடினது இல்லை. அதிலும் சின்னவனுக்கு தீபாவளி பத்தி ஒண்ணுமே தெரியாது. அதனால அவங்களுக்கு பிடிச்ச பட்சணமாவது பண்றதுல ஒரு நிறைவு. அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடறதை பாக்கும்போது சந்தோஷம். அவ்வளவுதான் இந்த தீபாவளி.
ReplyDeleteநானே உங்ககிட்ட ஒண்ணு கேக்கனும்னு இருந்தேன். நான் பண்ற லட்டு டேஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா சூட்டோட பிடிச்சா கூட அவ்வளவு சரியா பிடிக்க வரல. என்னால முடிஞ்சா வரைக்கும் அழுத்தி பிடிச்சாலும் ஓரளவுதான் பிடிக்க முடியறது. எங்க தப்பு பண்றேன்னு தெரியல. இங்க சில பேர் முதல் நாள் பண்ணி வெச்சுட்டு மறுநாள் பிடிச்சா கூட பிடிக்க வரதுன்னு சொல்றா. ஆனா எனக்கு வரல. பாகுல ஏதாவது வித்யசாமா இல்லை அளவுல எதவாது வித்யசமான்னு தெரியல. எனக்கு பால் தெளிச்சு பிடிக்கறதுல விருப்பம் இல்லை. அதனால உங்களுக்கு முடிஞ்சா போது எனக்கு அழகா உருண்டையா எப்படி பிடிக்கறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க. நன்றி!
இங்கும் தேன் குழல், முள்ளு முறுக்கு, ரவா மற்றும் மாலாடுகள் ரெடி! மெல்ல, 'செய்யணுமா' என்ற ஆயாசத்துடன் தொடங்கும் வேலைகள் போகப் போக சூடு பிடிப்பது வாடிக்கை! இப்பவும்! மை.பா, ரிப்பன், பர்பி பாக்கி! பெரும்பாலும் மை.பா என் வேலை! லட்டுல்லாம் பிடித்துக் கஷ்டப்படறதில்லை! மிக்சரும் பொறுமை இல்லை. :))
ReplyDeleteமனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்.
மீனாக்ஷி.. உங்களுக்கும் SG மற்றும் இரண்டு பையன்களுக்கும் கூட எங்கள் மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்.
அப்பாதுரை உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.
அட! மை.பா. உங்க வேலையா! சூப்பர்!
ReplyDeleteஅதென்னவோ எங்க அம்மா லட்டு இல்லாமா தீபாவளி பட்சணமே பண்ணினது இல்லை. அதனால நானும் அப்படியே பண்ண ஆரம்பிச்சுட்டேன். இந்த லட்டு, மை.பா. மாலாடு இனிப்பு எல்லாம் பண்ண ஆரம்பிச்சதே பசங்க கொஞ்சம் பெருசா ஆன அப்பறம்தான். அதுக்கு முன்னாடி எல்லாம் வெறும் தேன்குழல், மு.மு., குலாப்ஜாமுன், செவென் கப் கேக் மட்டும்தான். பெரிய ஐட்டம் எல்லாம் பண்ண அப்ப நேரம் கிடைக்காது.
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஆஹா, எல்லாரும் இங்கே கூடிப்பேசிட்டு இருந்தீங்களா? காலம்பரலே இருந்து வரவே முடியலை. :))) நான் இந்த வருஷம் சிம்பிளாகத் தேன்குழலும், மைசூர்ப்பாகும் மட்டும் பண்ணினேன். மற்றபடி ஸ்ரீராம் சொன்னாப்போல நம்ம ரங்க்ஸ் இந்த பக்ஷண வேலைக்கு எல்லாம் கிட்டேக் கூட வர மாட்டார். டேஸ்ட் பார்த்துச் சொல்லத் தான் வருவார். :))))
ReplyDeleteமீனாக்ஷி.. உங்களுக்கும் SG//
ReplyDeleteஅது யாரு எஸ்.ஜி?? மீனாக்ஷியோட ரங்கமணியா? நிறையத் தெரிஞ்சுக்கணும் போலிருக்கே. ஏற்கெனவே மூவார் முத்துக்கு மண்டைக் குடைச்சல் தாங்கலை. :))))))
மூவார் முத்து... ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களை RRR என்று அழைப்பார்கள். எனவே, 3 R = மூவார். முத்து என்பது முத்தே தங்கமே கோமேதகமே என்பது போல! எனவே மூவார் முத்து.. ஓகே யா!
ReplyDelete//மற்றபடி ஸ்ரீராம் சொன்னாப்போல நம்ம ரங்க்ஸ் இந்த பக்ஷண வேலைக்கு எல்லாம் கிட்டேக் கூட வர மாட்டார்.//
நான் எங்கே அப்படிச் சொன்னேன்.... ! :)))
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், விளக்கத்திற்கு நன்றி.
ReplyDelete//மற்றபடி ஸ்ரீராம் சொன்னாப்போல நம்ம ரங்க்ஸ் இந்த பக்ஷண வேலைக்கு எல்லாம் கிட்டேக் கூட வர மாட்டார்.//
நான் எங்கே அப்படிச் சொன்னேன்.... ! :)))//
ஹிஹிஹி, நீங்க உதவி செய்வேன்னு சொன்னாப்போல நம்ம வீட்டிலே உதவிக்கு எல்லாம் வர மாட்டார். :))) அதைச் சொன்னேன். அ.வ.சி. :))))))