எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, November 15, 2012

அப்பாதுரைக்காக மசூர்ப் பருப்பும், து.பருப்பும்!

து. பருப்பு நிச்சயமாத் தெரிஞ்சிருக்கும்.  கீழே இருப்பது து.பருப்பு.  மேலே இருப்பது மசூர் தால் எனப்படும் மசூர்ப் பருப்பு.  துவரம் பருப்புப் போலவே ஆனால் நிறம் நல்ல ஆரஞ்சு நிறத்தில் சிறியதாக இருக்கும். இதையும் போட்டு சாம்பார் வைக்கிறார்கள்.  ஆர்மி ரேஷனில் துவரம்பருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்துவார்கள்.  உடம்புக்கு நல்லது என்பார்கள்.  நாங்க சப்பாத்திக்கு தாலாகச் சமைத்திருக்கிறோம். ஒண்ணும் வித்தியாசம் தெரியாது.

4 comments:

  1. ஐ.. கலர் துவரம்பருப்பா?

    நீங்க சொன்ன மைசூர் அரண்மனை டைப்புலயே பண்ணலாம்னு ஒரிஜினல் பருப்பு வாங்க இந்தியக் கடைக்குப் போகலாம்னு இருக்கேன். கடைக்காரர் திருநெல்வேலிக்காரர். சாதாரணமாவே இஷ்டத்துக்குப் பேசுவாரு. அதுல நான் இந்தப் பருப்பைக் கேட்கப் போய் 'யாரைப் பாத்துலே மசூருன்றே?'னு பருப்புக்குப் பதிலா செருப்பை எடுத்துட்டாருனு வையுங்க.. அவ்ளோ தூரம் போனது வேஸ்டாயிரும். கன்பர்ம் பண்ணிக்கத் தான் கேட்டேன். படத்துக்கும் விவரத்துக்கும் பகுத்து சுக்குரியா.

    ReplyDelete
  2. ஹிஹிஹி, வட இந்தியர்களால் நடத்தப்படும் இந்தியக் கடைக்குப் போய்க் கேளுங்க. அங்கே தான் அதிகம் பயன்பாடு. தமிழ்நாட்டில் அவ்வளவு இல்லை. அதனால் திருநெல்வேலிக்காரர் என்ன சொல்வாரோ/செய்வாரோ! :))))))

    ReplyDelete
  3. நான் ஏற்கெனவே டைப் பண்றதுல கில்லாடி! இதுல இந்த பருப்பை கொஞ்சம் அஜாக்கிரதையா டைப் செய்தால் போச்! :))

    ReplyDelete
  4. ஆகா! இதுபற்றி நானும் போட நினைத்திருந்தேன்.

    நம் ஊர் சமையல் பற்றி பின்பு தருகின்றேன்.

    ReplyDelete