இன்னிக்குக் குல்ஃபி ஐஸ் பத்தி ஜி+இல் ஒருத்தர் எழுதி இருந்தாரா! உடனே நான் குல்ஃபி ஒரு காலத்தில் விழுந்து விழுந்து பண்ணினதும், குல்ஃபி மோட் எல்லாம் இப்போ எங்கே இருக்குனே தெரியாம இருக்கிறதும் நினைவில் வந்து சோகமாயிடுச்சு! சரி குல்ஃபி செய்யும் முறையையாவது பகிர்ந்துப்போமேனு தோணிச்சு. அதான் வந்தேன்.
ஹிஹிஹி, ரொம்ப காஸ்ட்லியான ஐடம். நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருக்கிறச்சே பாலையோ, மோரையோ, தயிரையோ, வெண்ணெயையோ என்ன செய்யலாம்னு மண்டையைக் குழப்பிக்கணும். ஒன்றரை லிட்டர் பாலுக்கு அவ்வளவு ரிச்னெஸ் இருக்கும். ஒரிஜினல் பால். நமக்கு நேரே கறந்த பால். ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விடாத பால். இந்த மிச்சம் பாலை எல்லாம் சேர்த்துச் சேர்த்து நன்றாய்க் காய்ச்சிக் குறுக்கி வைச்சுப்பேன். தேவைப்படும்போது காரட் அல்வாவுக்கோ, அல்லது பால் கேக்குக்கோ அல்லது குல்ஃபிக்கோ பயன்படுத்திப்பேன். ஆகவே இதற்கு நான் உத்தேசமாத் தான் திட்டம் சொல்ல முடியும். (எவ்வளவு பெரிய பில்ட் அப் பண்ண வேண்டி இருக்கு!)
நல்ல சுத்தமான பாலாக மூன்று லிட்டர், பாதாம் பருப்பு ஐம்பது கிராம், பிஸ்தா ஐம்பது கிராம், முந்திரிப்பருப்பு ஐம்பது கிராம். ஏலக்காய், தேவை எனில் வனிலா எசென்ஸ் அல்லதுபாதாம்/பிஸ்தா எசென்ஸ் ஏதேனும் ஒன்று. பாலில் ரிச்னெஸ் கம்மியாக இருந்தால் கஸ்டர்ட் பவுடர் வெனிலா ஃப்ளேவரில் வாங்கவும்.
மேலே தூவ பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு சீவி இரண்டு டேபிள் ஸ்பூன் வைச்சுக்கவும். இது தனி மேலே சொன்னது தனி.
நாளைக்குக் குல்ஃபி தயாராக இருக்கணும்னா இன்னிக்கே பாதாம், பிஸ்தா, முந்திரியை நீரில் ஊற வைச்சுக்கவும். மறுநாள் மூன்று லிட்டர் பாலையும் நன்கு காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கவும். அல்லது குறைந்த பக்ஷமான முக்கால் லிட்டருக்குள் குறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை நன்கு அரைத்துப் பாலில் கலக்கவும். சர்க்கரை சேர்க்கவும். எசென்ஸ் ஏதேனும் ஒன்று சேர்க்கவும். எசென்ஸ் சேர்த்தால் ஏலக்காய் வேண்டாம். ஆனால் ஏலக்காயே நன்றாக இருக்கும். பின்னர் கலந்த பாலை நன்கு ஆற வைத்து குல்ஃபி மோடில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் வைக்கவும். அநேகமாய் இரண்டு மணி நேரத்தில் தயாராகி விடும். இல்லை எனில் உங்களுக்கு என்று தேவையோ அதற்கு முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வெளியே எடுத்து இரண்டு நிமிடத்தில் குல்ஃபிக்களை அப்படியே வெளியே எடுக்கலாம்.
கஸ்டர்ட் சேர்த்துச் செய்வது. பாலைக் காய்ச்சிக் குறுக்கும் முன்னர் அரைக் கிண்ணம் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டுக் கலக்கவும். பின்னர் ஒரு கிண்ணம் பாலைத் தனியாக அடுப்பில் வைத்து அதில் இந்தக் கஸ்டர்ட் கலவையைப் போட்டுக் கொஞ்சம் வெண்ணெயும் (ஒரு டேபிள் ஸ்பூன் போல)போட்டுக் கிளறவும். கெட்டியாக ஆகும். இதை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இப்போது கீழே இறக்கிக் குறுக்கி வைத்திருக்கும் பாலில், அரைத்த பருப்புக்களோடு கலக்கவும். பின்னர் குல்ஃபி மோடில் ஊற்றவும். இதற்கு வனிலா ஃப்ளேவர் இருப்பதால் ஏலக்காயோ, வேறு எசென்சோ சேர்க்க வேண்டாம். எனினும் ருசியில் மாறுபாடு இருக்கும்.

மின்வெட்டு நேரம். எப்படியும் செய்யப் போவதில்லை! படித்து வைத்துக் கொள்ளலாமே என்று படித்துக் கொண்டேன்! :))
ReplyDeleteநானும் இந்தியாவில் இருந்தபோது ஐஸ் கிரீம் மிக்ஸ் வாங்கி, அதில் ஐஸ் கிரீம் செய்து இது போன்ற குல்பி மோட்களில் (ஆஹா! இதே கலர்தான் என்கிட்டேயும் இருந்துது) விட்டு ஃப்ரீசரில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிறேன். உங்கள் ரெசிபி பிரமாதமா இருக்கும்னு படிக்கும்போதே தெரியறது. பண்ணி பாத்துட வேண்டியதுதான். ஆனா இதுல பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாம் போடணும்னு நினைக்கும்போதே எனக்கு இன்னும் ரெண்டு பவுண்டு கூடின மாதிரி ஒரு பீலிங் வரதே. :))
ReplyDeleteஅருமையாக இருக்கின்றது.
ReplyDeleteகுல்ஃபிக்கள் ஜில் ஜில் .....
ReplyDeleteவாங்க மீனாக்ஷி, ஐஸ்க்ரீம் மிக்ஸ் வாங்கிப் பண்ணியதில்லை.பாதாமுக்கெல்லாம் எடை போடாதுனு சொல்வாங்க. இருந்தாலும் என்னிக்கோ சாப்பிடப் போறது தானே. அதுக்கப்புறமா யோகா, எக்சர்ஸைஸ் அல்லது நடைப்பயிற்சினு பண்ணிக் கலோரியை எரிக்கலாம். :)))))
ReplyDeleteவாங்க மாதேவி, வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, குல்ஃபி டேஸ்ட் பிடிச்சதா?
ReplyDelete