மிளகு குழம்பு செய்யலாமா இப்போ? இன்னிக்கு ஶ்ரீரங்கம் கோயில் அன்னதானத்திலே 16 விதமான சாப்பாடு வகைகள் போட்டிருந்தாங்க. அதைப் பார்த்ததுமே/கேட்டதுமே மிளகு குழம்பே இன்னிக்குப் போதும்னு தோணித்து. மிளகு குழம்பு ஏற்கெனவே பண்ணி வைச்சிருந்தேன். குளிர்சாதனப்பெட்டியிலே இருந்தது. அதைக் காலம்பரவே வெளியே எடுத்து மறுபடியும் நல்லாக் கொதிக்க விட்டேன். கூடவே தொட்டுக்கப் பருப்புத் துவையல். இரண்டையும் பார்க்கலாம்.
முதல்லே மிளகு குழம்பு. தேவையான பொருட்கள்: ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். இதற்கு வறுத்து அரைக்க
மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்; அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை. கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும் ஆற வைக்கவும். பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும்.
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.
கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும். வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும். தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம். நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.
பருப்புத் துவையல்: மி.வத்தல் 2 அல்லது மூன்று, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம், புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்/அல்லது கடலைப்பருப்பு/அல்லது இரு பருப்பும் கலந்து அவரவர் விருப்பம் போல். நான் துவரம்பருப்பு மட்டுமே போடுவேன். வறுக்க நல்லெண்ணெய்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், து.பருப்பு, மிளகு போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். பின்னர் கடைசியில் தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும். உப்பு, புளி சேர்த்துக் கொண்டு நைசாக மிக்சியில் அரைக்கவும். மிளகு குழம்போடு தொட்டுக்கொள்ள சைட் டிஷாக இது அருமையாக இருக்கும். ஜீரகம், மிளகு அரைத்துவிட்டுச் செய்யும் ரசத்தோடும் பருப்புத் துவையல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வாரம் ஒரு நாள் இப்படிச் சாப்பிடலாம். வயிறு லேசாகும்.
மைசூர்ப்பாகு, புளியோதரை எல்லாம் சாப்பிட்டீங்க இல்லை? இப்போப்பத்தியம்! :)))))

-ஏற்கெனவே செய்து வைத்த மிளகுக் குழம்பை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து உபயோகிப்போம் சரி... திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்தால் ஒரிஜினல் சுவை மாறி விடாதா?
ReplyDelete-ப. துவையலுக்கு நாங்களும் து.ப தான் போடுவோம்.
-மிளகுக் குழம்பில் நாங்கள் பூண்டு சேர்ப்போம். அதைத் தனியாகச் சேர்க்கவும் அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். என் mil பூண்டு சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு அதைச் செக்காமல் தனியாகக் கொடுத்து விட்டுப் பின்னர் பூண்டை சேர்த்து விடுவார்.
கோவிலுக்கு இன்று போயிருந்தீர்களா என்ன? கூட்டமாயிருந்திருக்குமே... இருபத்திநாலுமணி நேரமும் இ.உ என்பது தேவையா என்று தோன்றியது!
ReplyDeleteபொதுவா மிளகு குழம்பு சில நாட்கள் வரும்படிதான் எங்க வீடுகளிலே செய்வாங்க. கல்சட்டியிலே செய்வோம். ஆகவே வெளியிலே வைத்தால் கூட வீணாகாது. சாப்பிடுகையில் அதைச் சூடு செய்வது வழக்கம். இது பழக்கமானதால் சுவை மாறுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லையோ என்னமோ!!:)))))
ReplyDeleteபூண்டு பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் மிளகு குழம்பில், சின்ன வெங்காயம், பூண்டு போடுவார்கள் தான். ஆனால் எனக்குப் பூண்டே ஒத்துக்காது; பிடிக்கவும் பிடிக்காது. ஆகவே நோ பூண்டு. :))))) மாமனார் இருந்த வரைக்கும் மாசம் ஒரு முறையாவது பூண்டு ரசம் உண்டு. அன்னிக்கு மட்டும் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் நெஞ்செரிச்சல் அதிகம் ஆகிக் கஷ்டப் படுவேன். அதுக்கப்புறம் வேண்டவே வேண்டாம்னு சுத்தமா ஒதுக்கியாச்சு.
கோவிலுக்கெல்லாம் போய் இரண்டு மாசம் ஆகிறது. :)))) நேத்திக்குப் பிரதோஷத்துக்குக் கூடக் காவிரிக்கரை சிவன் கோயிலுக்குப் போகலை. :)))) இணைய உலா 24 மணி நேரம் இருக்க மாட்டேன். முக்கியமா வீட்டு வேலைகள் முடிந்தால் தான் உட்காருவேன். இப்படிக் காலை வேளையில் சில நாட்கள் அமருவது உண்டு. மின் தமிழ்க் குழுமத்தில் மாடரேட்டர் ஆக இருப்பதால் மடல்களைப் பார்த்து வெளியிடக் காத்திருக்கும். சில நாட்கள் அதுவும் முடியாது. அதோடு இங்கே பகல் வேளையில் மின்சாரம் மூன்று மணி நேரத்துக்கு ஒரு தரம்தான். ஆகையால் நேரம் ஒதுக்கிக் கொண்டு தான் இணையத்துக்கு வந்தாகணும். இன்னிக்குக் காலங்கார்த்தாலே மூன்றரை மணிக்குப் போன மின்சாரம் ஐந்தேகாலுக்குத் தான் வந்தது. ஒன்பது வரை இருக்கும். அதுக்குள்ளே எல்லாம் முடிச்சுக்கணும். :))))))
ReplyDelete//மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்
ReplyDeleteஆ!
வரும் சனிக்கிழமை மிளகு குழம்பு தான். உங்க தயவு. சிம்பிளா இருக்கும் போலிருக்கே?
தென்னமிரிக்கச் சமையிலில் பருப்புத் துவையலில் தக்காளி சேர்த்து அரைப்பார்கள். (துவையல்னு சொல்றதில்லே அவ்வளவுதான் :) அதுவும் ருசி.
@Appadurai, padathai mathungka, bayammmmmmmmmmmmmmmmmmmmmmmaa irukku!" :)))))))))
ReplyDeleteஎல்லாம் டிசம்பர் 22ஐ உத்தேசிச்சுத்தான்...:)
ReplyDeleteஎல்லாம் டிசம்பர் 22ஐ உத்தேசிச்சுத்தான்...:)//
ReplyDelete:P :P :P :P
கை மணக்க மணக்க இதை எழுதுறேன்.. வெறும் சூட்டுல வறுத்தேன்.. எண்ணையைப் பாதியாக் குறைச்சேன்.. still மிளகு குழம்பு பிரமாதமா வந்தது. no other takers - அதனால கையால பிசைஞ்சு கையால எடுத்து சாப்பிட்டேன், no spoon பிசினசு.. பாத்து பாத்து.. ஸ்க்ரீன் கிட்ட்ட்ட்டே உக்காந்தீங்கன்னா வாசனை வந்தாலும் வரும்..
ReplyDeleterecipeக்கு ரொம்ப தேங்க்ஸ். படு சிம்பிள் இது. ஆகா ஓஹோ பேஷ் பேஷ்!
(காலைலந்து இருந்த தலைவலி உபாதை மாயமாக மறைஞ்சு போச்சு. மி கு காரணமா தெரியாது... அதுக்கும் நன்றி:-)
டீ ஸ்பூனுக்கும் டேபிள் ஸ்பூனுக்கும் வித்தியாசம் புரியாம சட்டுனு பின்னூட்டம் போட்டுட்டேன்.. மறுபடி படிச்சப்புறம் தான் புரிஞ்சுது..
ReplyDeleteவெறும் சூட்டுல வறுத்தேன்.. எண்ணையைப் பாதியாக் குறைச்சேன்.. still மிளகு குழம்பு பிரமாதமா வந்தது. no other takers - அதனால கையால பிசைஞ்சு கையால எடுத்து சாப்பிட்டேன், no spoon பிசினசு.. பாத்து பாத்து.. ஸ்க்ரீன் கிட்ட்ட்ட்டே உக்காந்தீங்கன்னா வாசனை வந்தாலும் வரும்..
ReplyDeleterecipeக்கு ரொம்ப தேங்க்ஸ். படு சிம்பிள் இது. ஆகா ஓஹோ பேஷ் பேஷ்!//
நல்லவேளையா ஸ்க்ரீன் கிட்டே உட்காரலை! :))))
ரொம்ப நன்றி. ரொம்ப நாள் வைச்சுக்கணும்னா எண்ணெய் விட்டால் தான் குறைந்தது பத்துநாட்களாவது நிற்கும். பிரிசர்வேஷன் தான்! :))))
டீ ஸ்பூனுக்கும் டேபிள் ஸ்பூனுக்கும் வித்தியாசம் புரியாம சட்டுனு பின்னூட்டம் போட்டுட்டேன்.. மறுபடி படிச்சப்புறம் தான் புரிஞ்சுது..//
ReplyDeleteமுதல்லே நீங்க போட்ட பின்னூட்டத்திலேயே சந்தேகமா இருந்தது. ஆனால் தெரியாமலா இருக்கும்னு நினைச்சுட்டேன். :)))) மிளகு வயிற்றுக்கும் நல்லது தான். தலைவலி அதனால் கூடப்போயிருக்கும்.வயிறு அப்செட் ஆனால் கூடத் தலைவலிக்கும். :))))
என் ரெசிபி யும் இதே ரெண்டுத்துக்கும். நான் துகையலுக்கு 1 ஸ்பூன் வாசனைக்கு உளுத்தம் பருப்பும் வறுத் துவரம் பருப்போட போடறேன் இப்ப ரெண்டு தடவையா. அதும் நன்னாவே இருக்கு. கொஞ்சம் மாறுதலுக்கு.ஆனா தேங்காயை நிறுத்தியாச்சு.தோணித்துன்னா போடுவேன்
ReplyDeleteஸ்ரீராம் எழுதின மாதிரி மிளகு குழம்பில் பூண்டு வதக்கி போடறதும் உண்டு.பொதுவா குழந்தை பிறந்த பத்திய சமையலில் இருக்கும். ஆனா ரெகுலரா போடறதில்லை,
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, நன்றி. பத்தியத்தின் போது கூட நான் பூண்டு சேர்க்காத சாப்பாடுதான் சாப்பிட்டேன். சுத்தமா ஒத்துக்கலை. :))))
ReplyDeleteஎண்ணை preservationக்கா? ஆறினப்பிறகு மிதக்குற எண்ணையைப் பார்த்தாலும் taste செஞ்சாலும் ஒரு மாதிரி நாக்கைப் புரட்டும் எனக்கு. (ஊறுகாயே சாப்பிடாத காரணம் இது தான்..)
ReplyDeleteஒரு வாரம் பத்து நாள் எல்லாம் எங்கே.. நாலு நாள் வந்தா அதிகம். அதுலயும் இரண்டு பேர் வீட்டுல இருந்தாங்கன்னா ஒரே நாளில் காலியாயிடும்.. எத்தனை செஞ்சாலும்.
நாலஞ்சு நாள் வச்சுச் சாப்பிட்டாலும் சுகம்; ஒரே நாளில் சாப்பிட்டு அதை நாலஞ்சு நாள் நினைச்சு சந்தோஷப்பட்டாலும் சுகம்.
போட்டோவுடன் பதிவு போட்டிங்கன்னா இன்னும் பேஷா இருக்கும் :)
ReplyDeleteavvalavu enney vida kudathu appadurai. there is a limit. :)))))) urukay nanum sapidarathillai. anal pidikkum. BP fluctuation, athanale sappidarathillai. :)))))
ReplyDeleteWelcome for your first arrival Kavitha Bargav. Try to take photos. :)))))photos kuda sevai pannina post irukku parungka. :D arisi uppuma, kothsu kuda photo kuda irukkum.
ReplyDelete