புளிச்ச கீரைத் துவையல்!
ஒரு கட்டுப் புளிச்ச கீரைக்குத் தேவையான பொருட்கள்
மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப 10 அல்லது 15
கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவுக்கு
வதக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்
கடுகு, வெந்தயம், தேவையானால் ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், மஞ்சள் பொடி, பெருங்காயம்
கீரையை நன்கு ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக இலைகளை மட்டும் நறுக்கி வைக்கவும்.
கடாயில் முதலில் வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மி.வத்தல், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையையும் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, வெந்தயம் போட்டு நன்கு அரைத்த பின்னர் வதக்கிய கீரையையும் போட்டு நன்கு அரைக்கவும்.
மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம் தாளித்து மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும். வெளியே இருந்தால் கூடக் கெட்டுப் போகாது.
அடுத்து பிரண்டைத்துவையல்
பிரண்டைத்துவையல் நல்ல இளம் பிரண்டையாக வாங்கி அவற்றின் கணுவை நறுக்கி விட்டு மற்றதை எடுத்துக் கொள்ளலாம். பிரண்டைத்துண்டங்களைக் கையால் தொட்டால் அரிக்கும். ஆகவே கவனமாக எடுக்கவும். நறுக்கிய துண்டங்கள் இரண்டு கிண்ணம் இருந்தால் அதற்கு வேண்டிய சாமான்கள்
மிளகாய் வற்றல் 10 அல்லது 12, புளி ஒரு நெல்லிக்காய் அளவுக்கு, பெருங்காயம் ஒரு துண்டு, உப்பு தேவைக்கு. வதக்க நல்லெண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு வகைக்கு 2 டீஸ்பூன், தேவையானால் இத்துடன் தேங்காய்த் துருவலும், இஞ்சியும் சேர்க்கலாம். சிலர் எள்ளும் சேர்க்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைப் பொரித்து எடுக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை வறுத்துத் தனியாக வைக்கவும். மிச்சம் உள்ள எண்ணெயில் பிரண்டையைப் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்கவும். தேங்காய், இஞ்சி சேர்த்தால் அதையும் வதக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஆறவிட்டுப் பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மிளகாய் வற்றல், புளி, உப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி அரைத்த பின்னர் வதக்கிய பிரண்டை, வதக்கிய தேங்காய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அரைக்கவும். எள் சேர்த்திருந்தால் அதைக் கடைசியில் போட்டால் வாசனை தூக்கலாகத் தெரியும். பிரண்டை நன்கு அரைபட்டதும் கடுகு,உளுத்தம்பருப்பு சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி அரைக்கவும். இதோடு எள்ளையும் சேர்க்கலாம். வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்லது என்றாலும் ஒரு சிலருக்குப் பிரண்டை ஒத்துக்கொள்ளூவதில்லை. ஆகவே சாப்பிட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிரண்டைத் துவையலாவது நாங்கள் ஏதோ சில திவசங்களில் செய்ததுண்டு. சாதாரண நாட்களில் செய்ததில்லை, ரெகுலராக செய்வதுமில்லை. புளிச்ச கீரை செய்ததே இல்லை!
ReplyDelete?புளிச்ச கீரையும் கோங்குராவும் ஒன்று தானே?
Deleteஇரண்டுமே வயிற்றுக்கு நல்லது. இதை கோங்குராக்கீரைனும் சொல்லுவாங்க ஜேகே அண்ணா. ஒரு முறை வாங்கிப் பாருங்க ஸ்ரீராம். ஒரு வேளை கோங்குராக்கீரைங்கற பேரிலே வாங்கி இருப்பீங்க! என்னனு தெரிஞ்சிருக்காது!
Deleteபுளிச்ச கீரை சாப்பிட்டது நெய்வேலியோடு போயே போச்! பிரண்டைத் துவையல் அவ்வப்போது தமிழகம் வரும்போது சாப்பிட்டால் தான் உண்டு. இங்கே சுலபமாகக் கிடைப்பதில்லை. வளர்த்தால் தான் உண்டு. இங்கேயும் இதன் பயன்பாடு உண்டு என்றாலும் கிராமங்களில் மட்டுமே கிடைக்கிறது. தலைநகர் தில்லியில் பார்த்ததில்லை.
ReplyDeleteவடக்கே பிரண்டை கிடைப்பதாக என் நாத்தனாரும் சொல்லி இருக்கார். நாங்க பார்க்கலை. தாமரைக்கிழங்கு அதிகம் பார்த்திருக்கோம்.
Deleteஇதுக்கு மெதுவா வர்றேன்... பிரண்டைத் துவையல் எனக்குப் பிடிக்கும்.
ReplyDeleteமெதுவா வாங்க நெல்லை! இன்னும் ஓரிரண்டு மாதங்கள் வேலை மும்முரத்தில் இருப்பீர்கள்.
Delete