எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 16, 2017

உணவே மருந்து! மாங்காய்! 1

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாங்காயைப் பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். மாங்காய் முக்கனிகளில் முதன்மையானது. ஒரு சிலர் மா, பலா, வாழை என்கின்றனர். இன்னும் சிலர் வாழை, மா, பலா என்கிறார்கள். எப்படியோ இந்த மாங்காய், மாம்பழம் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒன்று. மாங்காய் காய்த்தது எனில் பருவம் மங்கும் எனவும், (வெயில் அதிகம் இருக்கும்) அதே புளி அதிகம் காய்த்தால் பருவம் பொங்கும் என்பார்கள். இப்படி நம் வாழ்வில் பருவங்களோடு கூடத் தொடர்பு உடையது மாங்காய்.

வேதங்களிலேயே " மா" பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்கின்றனர். மாம்பழங்கள் பற்றிய குறிப்புகள் கி.மு. 4000 ஆம் ஆண்டிலேயே இருந்ததாகக் கேள்விப் படுகிறோம். பழத்தை அப்படியே உணவாகவும், அதன் சாறைக் குடிப்பதன் மூலமும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  இது பெரும்பாலும் வெப்பப் பிரதேசங்களில் அதாவது புவிமையக்கோட்டுக்கு அருகே இருக்கும் பிரதேசங்களில் (ஹிஹிஹி, பூமத்திய ரேகை! இது வடமொழி என்பதால் புவிமையக்கோடு! )விளையும் கனி ஆகும். முக்கியமாய் இந்தியா, வங்காளம்(இப்போதைய பங்களா தேஷ், தென் ஆசியா ஆகிய பகுதிகளில் அதிகம் விளைகின்றன.  கோடைக்காலங்களிலேயே அதிகம் கிடைக்கும் இந்தப் பழத்தின் விளைச்சல், ஏற்றுமதி, தரம் எல்லாவற்றிற்கும் இந்தியாவே பெயர் பெற்ற நாடாக இருந்து வருகிறது.

1800 களில் ஆங்கிலேயர்களால் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறும் இந்தப் பழம் பின்னர் ஃப்ரெஞ்சு மற்றும் போர்ச்சுக்கீசிய வியாபாரிகளால் ஃபிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது.  மாமரம் சுமார் 35 அல்லது 50 மீட்டர் வரை உயரமாக வளரக் கூடிய தன்மை கொண்டது.  இலைகள் விரைவில் வாடாது. பசுமையுடனேயே காணப்படும். செம்பு நிறத்தில் வரும் இளந்தளிர் இலைகளை எடுத்து உலர்த்திப் பொடி செய்து சூரணமாக்கி தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும். இலைகளைத் தேன் விட்டு வதக்கிக்குடிநீரில் போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும். சுவாசக் கோளாறுகளுக்கும் இது அருமருந்தாகும்.

Image result for மாங்காய்

தீப்புண்களுக்கு மாவிலையைச் சுட்டுச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலோடு வெண்ணெயைக் கலந்து பூசி வந்தால் விரைவில் குணமாகும்.  மாம்பூவையும் நிழலில் உலர்த்திப் பொடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். மாம்பிசின் காலில் வரும் பித்தவெடிப்புக்கு அருமருந்து. மாமரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் நிரம்பியவை.  மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பு மிகவும் அதிகமான மருத்துவ குணம் கொண்டது. இதைக் குழம்பு அல்லது கஷாயம் போல் வைத்துச் சாப்பிடலாம். முக்கியமாய்ப் பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் பத்தியச் சாப்பாட்டில் மாங்கொட்டைப் பருப்பைப் போட்டு மிளகு சேர்த்துக் குழம்பு தயாரித்துக் கொடுப்பார்கள்.

Image result for மாங்காய்

படங்கள், நன்றி கூகிளார்
உலக மாம்பழத்தேவையில் பாதிக்கு மேல் இந்தியாவால் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதோடு மக்களால் உண்ணவும் படுகிறது. மாங்காயை வைத்த பல்வேறு விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஊறுகாய் வகைகள், பழச்சாறு வகைகள், ஜாம், ஜெல்லி வகைகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. முக்கியமாய் சாப்பாட்டில் தொட்டுக்கொள்ளப் பயன்படும் உணவுகளில் மாங்காய் ஊறுகாய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. "மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்!" என்னும் வழக்குச் சொல் இருக்கிறது. மாங்காயின் சக்தி அவ்வளவு பெரியது.

மாங்காய் தொடரும்!

18 comments:

  1. எல்லா விதங்களிலும் உபோகமாகும் மாங்காயும், அதன் மகத்துவங்களும். இலை,பூ,காய்,பழம், கொட்டை என உபயோகங்கள். தொடருங்கள். படிக்கிறேன்.அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. மாங்காயில் எத்தனை சிறப்பு. தொடரட்டும்....

    ReplyDelete
  3. எவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ளது இந்த மரம்...

    மாங்கொட்டை குழம்பு மாமியார் கையால் சாப்பிட்டது.. ரொம்ப வருஷம் ஆச்சு..:)

    ReplyDelete
    Replies
    1. இப்போ மாங்காய்ப் பருவம் தானே! மாங்கொட்டைக் குழம்பு செய்துடலாம்! :)

      Delete
  4. மாங்காயின் மருத்துவ குணங்கள் நான் அறியாதது. மாவடுவிலிருந்து தொடங்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொண்ணாய் வரும் ஶ்ரீராம். :)

      Delete
  5. மாங்காய் - எனக்கு ரொம்பப் பிடித்தமானது. எங்க பார்த்தாலும் நிச்சயம் வாங்காமல் விடமாட்டேன். அதுவும் புது மாங்காய் ஊறுகாய் போட்டால், எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாங்காய் படத்தைப் பார்க்கும்போதும் 'அடடா இவையெல்லாம் மிஸ் செய்கிறேனே' என்ற வருத்தம் வரும்.

    என்னா. வடு சீசன் போய், மாங்காய் சீசன் போய், மாம்பழ சீசனும் அநேகமாக முடிவடையும் தருணத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.

    முக்கனி என்பது மா, பலா, வாழை - இந்த வரிசைதான். (இயல் இசை நாடகத் தமிழ் என்பதுபோல). இதிலென்ன சந்தேகம்?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் புது மாங்காய் ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும். அதுக்காகவே மோர் சாதம் சாப்பிடுவேன். முன்னெல்லாம் இரண்டு தரம் கூட மோர்சாதம் சாப்பிடுவோம். இப்போல்லாம் ஒரு தரமே முடியறதில்லை. :)

      Delete
  6. எங்க வீட்டு மாங்காய்க்கும் இதே குணாம்சங்கள் இருக்கணுமேன்னு பெருமாளை வேண்டிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கும் உண்டு துளசி! :)

      Delete
    2. Thulsi veetileya? I donot think so.

      Delete
  7. Super ma!!! Neraya thagavalgal eppadi segarikkureenga?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கண்ணன், உங்களுக்குத் தெரியாததா?

      Delete
  8. பயனுள்ள தகவல்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete