எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 8, 2012

ஓடு, ஓடாய் ஒரு பக்கோடா!

சரி, இப்போ நாம ஓட்டு பக்கோடா செய்யலாமா?"

" என்னது?  ஓட்டிலே பக்கோடாவா?  யார் திங்கறது?"

"ஹிஹிஹி, நீங்க தான் திங்கணும்."

"அதெல்லாம் முடியாது."

"பயப்படாதீங்க.  ஓட்டு பக்கோடான்னா ரிப்பன் பக்கோடா."

 "என்ன ரிப்பனில் பக்கோடாவா?"

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., கொஞ்சம் பொறுமை தேவை. தஞ்சை ஜில்லாவில் நாடாத் தேன்குழல்னு சொல்வாங்க.  அதையே தென் மாவட்டங்களில் ரிப்பன் பக்கோடானும், மதுரையிலே ஓட்டு பக்கோடானும் சொல்வாங்க. "

"அப்பாடி, பிழைச்சேன். சரி, சரி, சீக்கிரமாப் பண்ணித்தாங்க."

இது காரம் போட்ட தேன்குழல்.  அதனால் மிளகாய்த்தூள் வேண்டும் அல்லது சிவப்பு மிளகாய் வற்றலை ஊற வைச்சு அரைச்சுக்கணும்.  இப்போ முதல்லே மாவு தயாரிப்புப் பார்க்கலாம்.  இதுக்குக் கொஞ்சம் வித்தியாசமா மாவு தயாரிக்கணும்.

ஊறவைத்துக் களைந்து காய வைத்த அரிசி நான்கு கிண்ணம், துபருப்பு ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம்.  எல்லாவற்றையும் சேர்த்தும் அரைக்கலாம்.  ஊறவைச்ச அரிசியைப் போடாமல் ஊற வைக்காத வறட்டு அரிசியிலும் மேற்சொன்ன சாமான்களைப் போட்டுச் செய்யலாம்.  மாவு தயார் ஆனதும் தேவையான மாவை எடுத்துக்கவும்.

இரண்டு கிண்ணம் மாவு, நெய் விழுது  இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் அல்லது கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அந்த நீரை விட்டுக்கலாம்.  மிளகாய்த்தூள் அல்லது அரைத்த மிளகாய் விழுது இரண்டு டீஸ்பூன்.  பிசையத் தேவையான நீர்.   பொரித்து எடுக்க சமையல் எண்ணெய்.

எப்போவும் சொல்றாப்போல் முதலில் மாவில் நெய்விழுதைப் போட்டுக் கொண்டு  உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் விழுதைப் போட்டு நன்கு கலக்கவும்.  எடுத்த எடுப்பில் நீர் விட்டுப் பிசைய வேண்டாம்.  மாவோடு உப்பு, காரம் நன்கு கலக்கவேண்டும்.  பின்னர் நீர் விட்டுப் பிசையவும்.  சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு வந்ததும்,  அடுப்பில்  கடாயை வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  நாடாத் தேன்குழலின் அச்சு இருவிதமாக இருக்கும். ஒன்று ப்ளெயினாக இருக்கும்.  இன்னொன்று முள் முள்ளாக இருக்கும்.  இரண்டில் எது வேண்டுமோ அதைப் போட்டுக் கொண்டு மாவைக் குழலில் அடைத்து எண்ணெயில் பிழியவும்.  பரவலாகப் பிழியவும்.  சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி.

9 comments:

  1. நாங்க அரிசி மாவு, கடலை மாவு மட்டும்தான் போடுவோம்(னு பாஸ் சொல்றாங்க). நன்றாக வரும்! நீங்கள் சொல்லியிருப்பது போலவும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், பழைய முறை அதாவது ட்ரெடிஷனாக அப்படித்தான். ஒரு முறை மாவுக் கலப்பில் ஏதோ கோளாறு வர சவுக்குனு போயிடுச்சு. அதனால் அதுக்கப்புறம் இம்முறைதான். பலருக்கும் சொல்லி எல்லாரும் பாஸ் இல்லை டிஸ்டிங்க்ஷனே கொடுத்துட்டாங்களாக்கும். :)))))

    ReplyDelete
  3. படிக்கிறதுக்கே சிரமமா இருக்கே..

    ReplyDelete
  4. என்ன ஆச்சு அப்பாதுரை? :))))))

    ReplyDelete
  5. ஊற வச்சு களைஞ்சு காயவச்சு .. இல்லே.. இதையெல்லாம் எப்படி என்னிக்கு செஞ்சு.. பக்கோடாவை கண்ணால பாக்கறதுக்கு முன்னால நாமளே ஒழைச்சு ஓடாப்போயிடுவோம் போலிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட் செம காமெடி.
      .... ஹா ஹா ஹா

      Delete
  6. ரிப்பன் பக்கோடால துவரம் பருப்பா? இப்பதான் கேள்விபடறேன். எங்க வீட்ல அரிசி மாவு, கடலை மாவு, கொஞ்சமா பயத்தம் மாவு போட்டுதான் பிழிவாங்க. நீங்க சொன்னா நல்லாதான் இருக்கும். இந்த முறைல பண்ணி பாக்கறேன். எனக்கு இங்க மிஷின் எல்லாம் இல்லாததால மிக்ஸ்சில அரைச்சு சலிசுக்கறேன். பருப்பை எல்லாம் லேசா வெதுப்பிக்கனுமா? இல்லை நல்லா வருத்துக்கனுமா?
    நான் இந்த முறை தீபாவளிக்கு நாலு அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு போட்டு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி சேத்து ரிப்பன் பண்ணினேன். கரகரன்னு ரொம்ப நல்லா வந்துது.

    ரசபொடி ரெசிபி ப்ளீஸ். தினம் பண்ற தக்காளி ரசபொடிதான் முக்கியமா வேணும். அரைச்சு விட்ட ரசம் நீங்க பண்ணுவீங்களா? முடிஞ்சா அதையும் சொல்லுங்க. நீங்க இதெல்லாம் சொல்றதுக்கு கரண்ட் பகவான் அநுக்ரஹம் கிடைக்கனும்னு வேண்டிக்கறேன். :)
    உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேனா? சாரி! :)

    ReplyDelete
  7. அப்பாதுரை, ஊற வைச்சுக் களைஞ்சு காய வைச்சுப் பண்ணாமல் வெறும் வறட்டு அரிசியிலேயே இந்த து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு போட்டுச் செய்யலாம். நல்லாவே வரும். :)))))

    ReplyDelete
  8. மீனாக்ஷி, அமெரிக்காவிலே எல்லாம் இந்தத் து.பருப்பை, க.பருப்பை மிக்சியிலே அரைப்பது ரொம்பக் கஷ்டம். சாம்பார் பொடிக்கு வறுத்து அரைக்கிறதே கொஞ்சம் கொர கொரனு தான் வரும். ஆகவே நீங்க இப்போச் செய்யற முறை தான் அங்கே சரியானது. அங்கே இருந்த இரண்டு தீபாவளிகளிலும் நானும் இப்படித்தான் செய்தேன். அரிசிமாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு மட்டும் வீட்டில் மிக்சியில் பொடி செய்து கொண்டேன். அதுவே நன்றாக வரும். இங்கே மிளகாய்த்தூள் அப்படி ஒண்ணும் நல்லா இல்லைங்கறதாலே நான் அரை கிலோ மிளகாய் வாங்கிக் காய வைச்சு அரைச்சு மொத்தமா வைச்சுப்பேன். அங்கே தரமான மிளகாய்த் தூள்கிடைக்குது. இல்லைனாலும் மி.வத்தலை நீரில் ஊற வைச்சு அரைச்சும் போட்டுக்கலாம்.

    ReplyDelete