எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 31, 2012

நீங்க நல்லாச் சாப்பிட ஒரு குறிப்பு!

புது வருஷத்துக்கு ஒரு புது டெசர்ட் பார்ப்போம்,  டெசர்ட்னதுமே அது பழங்களால் ஆனதுனு தெரிஞ்சிருக்குமே. முதல்லே இதுக்குத் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

கேக் சாப்பிடறவங்க கடையில் விற்கும் ப்ளம் கேக் வாங்கிக்குங்க.  பெரிசா இருக்கட்டும். கடையிலே கேக் சாப்பிடமாட்டேனு சொல்றவங்க வீட்டிலேயே மில்க் மெயிடினால் செய்யப்பட்ட கேக்கை வாங்கிக்கலாம்.  இல்லைனா ஹாட்சன் மஹாதேவன் கடையிலே எக்லெஸ் கேக் கிடைக்கும் அதை வாங்கிக்குங்க.  இது முக்கியமா வேணும் சரியா?

அடுத்து ஜெல்லி க்ரிஸ்டல் பவுடர் வாங்கி அதிலே சொல்லி இருக்கும் முறையில் ஜெல்லியைத் தயார் செய்து, ஒரு பவுலில் ஊற்றி, அதிலே பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகளைக் கலந்துக் குளிர வைக்கவும்.  ஜெல்லி கெட்டியாக ஆனதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

இப்போது பழங்கள் எல்லாவகையும் வகைக்கு

ஆப்பிள் நடுத்தரம் ஒன்று, ஒரு மாதுளை, ஆரஞ்சு இரண்டு, கொய்யாப் பழம் நடுத்தரம் ஒன்று,  வாழைப்பழம் கனிந்ததாக பெரிதாக இருந்தால் ஆறு, இல்லை எனில் பத்து, பேரிச்சம்பழம் கொட்டை நீக்கியது 50 கிராம், பச்சை திராக்ஷை 50 கிராம், பன்னீர் திராக்ஷை 50 கிராம், முந்திரிப்பருப்பும் கிஸ்மிஸும் தேவை எனில் சேர்க்கலாம்.  சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை.

பால் சுண்டக் காய்ச்சியது அரை லிட்டர், கஸ்டர்ட் பவுடர் வெனிலா வாசனையில் இரண்டு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்.

வெனிலா ஐஸ் க்ரீம்  குடும்ப பாக்கிங்கில் உள்ளது.(தேவையானால்)

பழங்களை நன்கு கழுவி நறுக்கி ஒன்றாகக் கலந்து ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.

சுண்டக்காய்ச்சிய பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும் கெட்டிப்படும்போது வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கி ஆற வைக்கவும்.  மிக்சியில் போட்டு அடித்து வைத்துக்கொள்ளவும்.



இப்போது கலக்கும் முறை :

முதலில் ஒரு பெரிய பவுலில் கேக்கை வைக்கவும்,  அதன் மேல் ஜெல்லியைப் பரவலாகக் கொட்டவும்,  பின்னர் அதன் மேல் பழங்களைப் போடவும்.  அதன் பின்னர் அதன் மேல் அடித்து வைத்த கஸ்டர்டைச் சேர்க்கவும்.  விருப்பமுள்ளவர்கள் இதை அப்படியே ஃபோர்க்கால் எடுத்துத் தட்டில் எல்லாவற்றோடு சேர்த்துப் போட்டுக்கொண்டு வெனிலா ஐஸ்க்ரீமோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  சேமியா பாயசம் இருந்தாலும் அதோடு சாப்பிடலாம். ரொம்பவே ரிச்சானது!

நாங்க ராஜஸ்தான், குஜராத்திலே இருந்தப்போ இது அடிக்கடி பண்ணுவேன். எல்லாப் பழங்களும் இல்லாட்டியும் இருக்கிற பழங்களை வைத்துச் செய்வோம்.  கேக் நான் வீட்டிலேயே செய்துடுவேன்.  அதனால் அதிகம் செலவாகாது. மேலும் அங்கே பழங்கள் எல்லாவிதமானவையும் கிடைக்கும் என்பதோடு சுவை, ருசி, விலை எல்லாமும் ஏற்கும்படியாக இருக்கும்.

4 comments:

  1. ஹிஹி.... இதைச் செய்ய எனக்குத் தெரியாது, பொறுமை இல்லையென்றாலும்,
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் 'எங்கள்' இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். :)))

    ReplyDelete
  2. ஃப்ரூட் சாலட் வித் கஸ்டர்ட், அல்லது ஜெல்லி அல்லது ஐஸ்க்ரீம் செஞ்சுருக்கேன். புது இணைப்பாக கேக்?... செஞ்சுருவோம் :-)))

    ReplyDelete
  3. வாங்க ஸ்ரீராம், பார்க்கப் போனால் இது அதிகச் செலவும் இல்லை. அதிக நேரமும் பிடிக்காது. செய்முறையைப் பார்த்துட்டு பயப்படறீங்க போல! :)))))

    சேமியா பாயாசம், குலாப் ஜாமூனோடு சாப்பிட்டிருக்கீங்களா? அதுவும் காலா ஜாமூனோட! அதோட கூட, இந்தப் பழ சாலட், வெனிலா ப்ளேவர் ஐஸ்க்ரீம் எல்லாமும் கலந்து சாப்பிட்டால் அது ஒரு டேஸ்ட்! :))))))

    ReplyDelete
  4. வாங்க அமைதி, கேக் ப்ளம் கேக்கா இருக்கணும். கூடவே நட்ஸோ, டுட்டி ப்ரூட்டியோ போட்டிருந்தால் டபுள் ஓகே! :))))

    ReplyDelete