ஒரே இட்லியாய்ச் செய்துட்டு இருக்கியே? போர் அடிக்கலை?
நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்?
அது சரி! ஆனால் இட்லியால் அடிச்சால் எப்படி?
என்னது? இட்லியால் அடிச்சேனா? நானா? இருங்க, இருங்க நிஜமாவே இட்லியால் அடிக்கிறேன். நாளைக்குக்காஞ்சிபுரம் இட்லிதான் செய்யப் போறேன்.
கடவுளே, காப்பாத்து!
***************************************************************************************
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்
பச்சை அரிசி ஒரு கிண்ணம்
முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்
மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.
சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.
தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.
ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)
இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.
இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.
கொத்சு:
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.
அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்.
டூ மச் வொர்க்கு.
ReplyDelete:))))))))
ReplyDeleteநான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்?//
ReplyDeleteஇதை இதை தான் எதிர்பார்த்தேன் :))
இட்லி ஜூஸ் க்கு ஏடிஎம் காப்புரிமை வாங்க போறதா கேள்வி
காஞ்சிபுரம் இட்லி பதிவுக்கு நன்றி
ம்ம்ம்ம் இதையாவது கட்டாயமாச் செய்து பாருங்க ப்ரியா! இதுக்கு உங்க ரங்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்னு நம்பறேன். :))))))
ReplyDeleteஇந்த அத்தியாயம் 75 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,
ReplyDeleteஅடை தோசைக்கே ஆயிரம் தடவை மூஞ்சை சுளிப்பார் கீதாமா :))
வேண்டியதெல்லாம் தோசை ,ஊத்தப்பம் ,பணியாரம் தான் :)
கொசுறாக கொத்சு செய்வதற்கும் சொல்லிக் கொடுத்துவிட்டீர்களே! பேஷ், பேஷ். பாராட்டுக்கள்
ReplyDeleteவாங்க வியபதி, இட்லின்னா தொட்டுக்க சைட் டிஷ் வேண்டாமா! :))))))
ReplyDelete//நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்//....grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteஆஹா.... எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணினேன்... ஆனா எனக்கு காஞ்சிபுரம் வேண்டாம், அந்த ஊரு பட்டு மட்டும் போதும்... எங்க ஊரு இட்லி ரெசிபி போடுங்க... BTW நேத்திக்கி தான் ஏதோ டிவில chef தாமு அவர்களோட ரவா பொங்கல் ரெசிபி பாத்தேன்... அடுத்த வாரத்துல ஒரு நாள் சோதனை பண்ணிட வேண்டியது தான்...;)
//இதை இதை தான் எதிர்பார்த்தேன் :))//
I dedicate "why this kolaveri" song to u....grrrrrr
//நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்//....grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteஹிஹிஹி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ஏடிஎம்முக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
இட்லி ரெசிபியும் கொடுத்துடுவோம்! :)))))))
ReplyDeleteப்ரியா, இதை ஏற்கெனவே உங்க கிட்டே சொல்லாததில் இருந்து அவங்க எனக்கு அணுக்கத்தொண்டர்னு பிரியுதா ஏடிஎம்??? ஹாஹாஹாஹாஹாஹாஹா
ReplyDeleteகூகிள் பஸ், கூகிள்+ னு எதிலே எழுதினாலும் ப்ரியாவை என்னிடமிருந்து பிரிக்க முடியாத்த்த்த்த்த்த்த்த்!!!!
(ப்ரியா, பார்த்து ஜால்ராவைத் தட்டுங்க)
ஏற்கெனவே கொலவெறி பாட்டு வேறே ஓடுது! :)))))
அப்பாவி !
ReplyDeleteவேண்டாம்....................... அப்புறம் நான் சிரிச்சுடுவேன் :))
@கீதாம்மா
ஜாலிலோ ஜிம்கானா :))
அப்படியே என்னை எப்போ நமது கட்சி தலைவியாக்கி
அழகு பார்க்க போறீங்கன்னு எல்லோரும் கேட்கிறாங்க :))