போர் அடிக்குதா? புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம் எல்லாமும் அலுத்துப் போச்சா? இதோ கொஞ்சம் புது மாதிரியான சமையல். சாப்பிட்டுப் பாருங்க வாங்க.தினம் ஏதேனும் குழம்பு, ரசம்னு வைச்சால் மிஞ்சிப் போகிறது. மறுநாளைக்குச் சுட வைத்துச் சாப்பிடும் வழக்கமும் இல்லை. துவையல், பொடி, எலுமிச்சை சாதம்னு எல்லாம் அலுப்பாய்ப் போச்சா! சரினு புதுமாதிரியா இருக்கட்டும்னு புளியோகெரெ பண்ணினேன். எம்.டி.ஆருக்குத் தான் விளம்பரமா? நமக்கும் வேணுமில்ல? அதான் படம் எடுத்துப் போட்டாச்சு. படத்திலே பார்ப்பது புளியோகெரெ! கடுகோரைனும் சிலபேர் சொல்றாங்க.
ஒரு கர்நாடக சமையல்:
கடுகோரை:
தேவையான பொருட்கள்:
அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.
தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்
ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.
அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.
இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.
தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது. அது வாங்கிட்டு வந்தாங்க. அதிலே செய்தேன். பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்
ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.
எலுமிச்சை ரசம்.
பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம். அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம். பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.
பின்னிட்டீங்க போங்க.
ReplyDeleteஎன்னத்தைப் பின்னினேன் போங்க! :)))))
ReplyDeleteபடிச்சாச்சு !
ReplyDeleteநல்வரவு ப்ரியா, செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. எங்க வீட்டிலே ஓட்டுக் கிடைச்சுட்டது.
ReplyDeleteகடுகோரையையும் குறித்து வைத்துக்கொண்டேன், இப்போதுதான் இதைப் படிக்கிறேன்.
ReplyDeleteஆமாம். ஏழு வருடம் தாண்டிதான் வந்திருக்கிறேன்!!
Deleteலிங்க் கொடுத்த்துட்டம்லா...
Deleteபார்த்துச் சோதிச்சும் பார்த்துட்டேன். :)
Deleteஎலுமிச்சை ரசம் சாப்பிட்டு எவ்வளவு வருடங்களாச்சு...ம்ம்ம்
ReplyDeleteகடுகோரை ஒரு தடவை மனைவி செய்தார், நான் மட்டும் சாப்பிடவில்லை என்று நினைவு (கீதா ரங்கன் எழுதின பிறகு). திரும்பச் செய்யச் சொல்கிறேன்.
பதிவை ஸ்ரீராம் 7 வருஷம்தான் உள்வாங்கி பின்னூட்டம் எழுதியிருக்கிறார். நான் உள்வாங்க 10 வருடங்கள் நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொருத்தர் செய்முறையும் மாறும் நெல்லை. கை வாகும் காரணம். இன்னொரு முறை பண்ணிப் பாருங்க.
Deleteஎலுமிச்சை ரசம் வாரம் ஒரு நாளாவது இருக்கும் எங்க வீட்டிலே. அடை பண்ணினா அன்னிக்குக் காலம்பர எலுமிச்சை ரசம் து.பருப்புப் போட்டுப் பண்ணுவேன். பபருப்பும் சேர்ப்பேன். ருசி மாறும். தக்காளியைச் சாறாக எடுத்துத் தான் பண்ணுவேன். நறுக்கிச் சேர்ப்பதில்லை.
Delete