எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 10, 2017

உணவே மருந்து! மாங்காய்! 7

மாம்பழத்தில் கஸ்டர்ட் சேர்த்தும் செய்யலாம்.  இதற்கு மாம்பழம் நல்ல தித்திப்பானதாக இருக்க வேண்டும்.  ஒரு நடுத்தர அளவுப் பழத்தில் முதலில் செய்து பர்த்து விட்டுப் பின்னர் தேவை எனில் நிறையச் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-
நல்ல சாறுள்ள கதுப்பு மாம்பழம்  பெரிதானால் ஒன்று நடுத்தர அளவெனில் 2

எடுத்துத் தோல் சீவிக் கொண்டு கதுப்பை நன்கு மசிக்கவும். அல்லது மிக்சி ஜாரில் போட்டு அடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

பால் ஒரு லிட்டர் சுண்டக் காய்ச்சியது அல்லது மில்க் மெயிட் இரண்டு டேபிள்ஸ்பூன் கரைத்துக் கொள்ளவும்.

இன்னொரு அரை லிட்டர் பால் காய்ச்சாமல் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

கஸ்டர்ட் பவுடர் வித விதமான ருசிகளில் கிடைக்கிறது. மாம்பழ வாசனையில் கிடைக்கிறதாகத் தெரியவில்லை. பொதுவாக நான் இதற்கு வனிலா கஸ்டர்டே எடுத்துப்பேன். வனிலா கஸ்டர்ட் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி தேவையானால்!

சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்

வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது க்ரீம் ஒரு டேபிள் ஸ்பூன். நான் வெண்ணெய் தான் சேர்ப்பேன்.

மேலே அலங்கரிக்க பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். டுட்டி ஃப்ரூட்டி பிடிக்குமெனில் அதையும் போடலாம்.

அரை லிட்டர் காய்ச்சாத பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டு நன்கு கலக்கவும். சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் இருந்தால் நல்லது) அதைக் கொட்டி ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயையும் சேர்த்துக் கிளறவும். கிளறக் கிளறக் கெட்டியாக ஆகும். நன்கு கெட்டியானதும் நிறுத்திவிட்டுச் சுண்டக் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். எல்லாப் பாலையும் விட்டுக் கிளறியதும் தேவையானால் ஏலப்பொடி சேர்த்து அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்த்து ஆற விடவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அடிக்கவும். மிகவும் மிருதுவாக வந்திருக்கும். இப்போது ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் மாம்பழக் கதுப்புக் கலவையைப் போட்டுத் திரும்ப ஒரு தரம் அடிக்கவும். கொஞ்சம் மாம்பழத்தைத் துண்டுகள் போட்டு தனியாக வைத்திருக்கவும்.

Image result for கஸ்டர்ட்

படம் : இணையத்தில் கூகிளார் உதவியுடன்!

கலவையை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறுகையில் கிண்ணங்களில் கஸ்டர்ட் கலவையை  விட்டதும் மேலே ஓரிரண்டு மாம்பழத் துண்டங்களையும், பாதாம், முந்திரி, பிஸ்தா நறுக்கி வைத்திருப்பதையும் போட்டு அலங்கரித்துக் கொடுக்கவும்.  அல்லது டுட்டி,ஃப்ரூட்டி மட்டும் போட்டுக் கொடுக்கலாம்.

அடுத்து மாம்பழத்தில் ஶ்ரீகண்ட்

இது மஹாராஷ்டிரம், குஜராத் பக்கம் ரொம்பவே பிரபலம். வெறும் தயிரிலேயே ஶ்ரீகண்ட் செய்வார்கள். மாம்பழப் பருவங்களில் மாம்பழ ஶ்ரீகண்ட் செய்வார்கள். இதற்குத் தேவை நல்ல கொழுப்புச் சத்துள்ள பால் சுமார் ஒரு லிட்டர்

கொழுப்புச் சத்துள்ள பால் ஒரு லிட்டர். நன்கு காய்ச்சி  ஆற வைத்து உரை ஊற்றவும். மேலே ஏடு படிய வேண்டும். பால் அவ்வளவு நல்ல பாலாக இருந்தால் நல்லது. எதற்கும் க்ரீம் இரண்டு டேபிள் ஸ்பூன் வைத்துக் கொள்ளவும்.

நல்லப் பழுத்த மாம்பழங்கள் 2 தோல் சீவி நறுக்கிக் கொண்டு துண்டங்களில் கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு மிச்சத்தை நன்கு கூழாக்கிக் கொள்ளவும்.

தயிரை எடுத்து ஒரு மஸ்லின் துணியில் கட்டி ஒரு மணி நேரம் வைக்கவும். தயிரில் நீர் இருந்தால் அனைத்தும் துணி வழியே வெளியேறிவிடும். பின்னர் துணியைப் பிரித்துத் தயிரைச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மத்தினால் கூடக் கடையலாம். வாசனைக்குக் குங்குமப் பூக் கிடைத்தால் சேர்க்கலாம். அது கிடைப்பது அரிது என்பதால் ஏலக்காய் சேர்க்கலாம்.

நன்கு கடைந்த தயிருடன் தேவையானால் க்ரீம் சேர்க்கவும். மாம்பழக் கலவையையும் சேர்க்கவும். நன்கு கரண்டியாலேயே கலக்கவும். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறும்போது நறுக்கியதில் எடுத்து வைத்த மாம்பழத் துண்டங்களோடு தேவையானால் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவையும் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.


மாம்பழ குல்ஃபி! :

நல்ல பாலாக ஒரு லிட்டர் பால்! பால் கொழுப்புச் சத்து இல்லை எனில் இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் தேவை. ஒரு மாம்பழம் இருந்தால் போதும். சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் அல்லது எஸ்ஸென்ஸ் அரை டீஸ்பூன் அளவுக்கு.  கொழுப்புச் சத்துள்ள பால் எனில் கஸ்டர்ட் சேர்க்க வேண்டாம்.

பாலைக் காய்ச்சி அரைலிட்டராக்கிக் கொள்ளவும்.  தேவையானால் கஸ்டர்ட் பவுடர் தனியாக ஒரு கிண்ணம் பாலில் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கெட்டியானதும், அரை லிட்டராக ஆன பாலில் கலக்கவும். மாம்பழத்தையும் அடித்துச் சேர்க்கவும். சர்க்கரை தேவையானால் சேர்க்கவும். ஆற வைத்து ஏலப்பொடி அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். இதற்கு மேலே அலங்கரிக்க எதுவும் தேவை இல்லை.  சற்று ஆற விட்ட பின்னர் இதை அப்படியே குல்ஃபி மோடில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் உறைய வைக்கவும். தேவையான போது எடுத்து வைத்துத் தின்னலாம்.

Kulfi mode.jpg      Kulfi.jpg


மாங்காய் இன்னும் வரும்! :)

6 comments:

  1. படித்துக்கொண்டேன். இதை எல்லாம் எங்கே செய்யப்போகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் என்ன சொல்லவறார்னா, கீ.சா மேடம்.. நீங்க செய்து போட்டோ எடுத்து தி. பதிவுக்கு அனுப்புங்கன்னு சொல்றார். 'செய்வீர்களா நீங்க செய்வீர்களா?'

      Delete
  2. மாம்பழ கஸ்டர்ட் - என் ஹஸ்பண்ட் பழ கஸ்டர்ட் இங்க பண்ணுவா. அதுல மாம்பழம் போட்டாத்தான் அதன் சுவை அலாதியா இருக்கும். ம்.ம். அந்த நாளும் வந்திடாதோன்னு பாடவேண்டிருக்கு.

    மாம்பழத்தில் ஸ்ரீகண்ட் - வாவ். எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்னால அமுல் ஸ்ரீகண்ட் வாங்கி (அது பயங்கர வெயிட் போடவைக்கும்னு தெரியாம) நிறைய சாப்பிட்டிருக்கேன்.

    குல்ஃபி - அதுல இன்டெரெஸ்ட் இல்லை. ஐஸ்க்ரீம் போன்ற வஸ்துக்கள் ஒரு ஆயுசுக்குமேல் சாப்பிட்டுவிட்டேன்.

    ReplyDelete
  3. மாம்பழ கஸ்டர்ட்.... சாப்பிட்டதுண்டு. மாம்பழ ஸ்ரீகண்ட் அதுவும் ருசித்திருக்கிறேன்.

    ReplyDelete