மாங்காய்த் தொக்குப் போலவே தான் மாங்காய் ஜாமும்! ஆனால் இதில் கொஞ்சம் சிட்ரிக் ஆசிட் சிலர் சேர்க்கின்றனர். உணவுப் பொருளில் சேர்க்கும் நிறமும் சேர்க்கின்றனர். எஸ்ஸென்ஸ் சேர்ப்பவர்களும் உண்டு. என்றாலும் மிகவும் எளிமையாக மாங்காய் ஜாம் செய்வதெனில் நல்ல கிளி மூக்கு மாங்காய் (கல்லாமை அல்லது ஒட்டு என்னும் ரகம்) வாங்கிக் கொள்ள வேண்டும். பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல் அரைக்காயாக இருந்தால் நல்லது.
இரண்டு மாங்காய் தேவை. அல்லது செய்யும் அளவுக்கேற்ப அவரவர் விருப்பம் போல் எடுத்துக்கலாம். நான் இரண்டு மாங்காய்க்கான அளவே சொல்லப் போறேன்.
ஒரு கிண்ணம் சர்க்கரை
நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
மாங்காயைத் துருவிக் கொண்டு ஒரு கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரம் ஒன்றில் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு துருவிய மாங்காயைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். உப்பைச் சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். சர்க்கரை கரைந்து நீர் விட்டுக் கொள்ளும். அது சேர்ந்து வரும் வரை வதக்க வேண்டும். விருப்பம் இருந்தால் ஏலத்தூள் சேர்க்கலாம். இது ஒரு எளிமையான முறை. ப்ரெட், சப்பாத்தி, பூரி போன்றவற்றோடு சேர்த்து உண்ணலாம்.
அடுத்து இன்னொரு முறை
அதே போல் மாங்காய் வாங்கித் துருவிக் கொள்ளவும்.
உப்பு ஒரு டீஸ்பூன், கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அல்லது லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்த பொடி ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு கிண்ணம், மாங்காய்/மாம்பழ நிறம் கொடுக்க உணவுப் பொருளில் சேர்க்கும் வண்ணம் திரவமாக இருந்தால் ஒரு சொட்டு, பொடியாக இருந்தால் ஒரு சிட்டிகை. நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
மாங்காயை முன் சொன்னது போல் நெய்யில் வதக்கிக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்க வேண்டும். பின்னர் சர்க்கரையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் பொடித்த மசாலாப்பொடியைச் சேர்க்கவும். மாங்காய்/மாம்பழ வண்ணம் கொடுக்கும் உணவுச் சேர்க்கையையும் சேர்க்கவும். ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
மாம்பழ ஜூஸ் ஒரு மாம்பழத்திலிருந்து மூன்று பேருக்கு ஜூஸ் தயாரிக்கலாம்.
மாம்பழம் நல்ல சாறுள்ள பழுத்த பழம் ஒன்று
சர்க்கரை (தேவையானால்) நான் பொதுவாகப் பழச்சாறுகளில் சர்க்கரை சேர்ப்பதில்லை.
ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் ஏலப்பொடியானால் ஒரு சிட்டிகை, எஸ்ஸென்ஸ் எனில் கால் டீஸ்பூன்
பால் அரை லிட்டர்
முதலில் பாலைக் கொழுப்புச் சத்துள்ள பாலாக வாங்கி நன்றாகக் காய்ச்சி ஆற விடவும். பாலை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அதே ஜாரில் மாம்பழத்தைத் தோலைச் சீவி நறுக்கித் துண்டங்களாகப் போட்டு நன்கு அடிக்கவும். மாம்பழத்துண்டங்கள் தெரியாமல் விழுதாக வரும்வரை அடிக்கவும். பின்னர் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சர்க்கரை விருப்பமானால் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் சேர்த்து ஒரே தரம் மிக்சியில் சுற்றிவிட்டுப் பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும். ஐஸ் சேர்த்தால் மாம்பழச் சாறு நீர்த்து விடும். ஆகையால் எப்போது பரிமாறணுமோ அதற்கு 2,3 மணி நேரம் முன்னரே தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த அளவுக்கு மூன்று பேர் தாராளமாக ஒரு கிளாஸ் மாம்பழச் சாறு சாப்பிடலாம்.
மாங்கோ லஸ்ஸி
இதற்கும் நன்கு பழுத்த மாம்பழங்கள் வேண்டும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு மாம்பழம் எனில் அரை லிட்டர் தயிர் தேவை. சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன். மாம்பழ எஸ்ஸென்ஸ் கால் டீஸ்பூன்
மாம்பழங்களைத் தோல் நீக்கிக் கொண்டு துண்டங்களாக்கி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும். புளிக்காத கெட்டித் தயிரை அதன் மேல் இருக்கும் ஆடையை நீக்காமல் அப்படியே மிக்சி ஜாரில் போட்டு சர்க்கரை, உப்புச் சேர்த்து அடிக்கவும். இதோடு மாம்பழக் கலவையைப் போட்டுக் கலந்து கொண்டு மாம்பழ எஸ்ஸென்ஸையும் விட்டு ஒரு தரம் மிக்சிஜாரில் சுற்றவும் பின் பரிமாறவும். தேவையானால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறலாம்.
மாங்காய்ப் பச்சடி
இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதோடு மாங்காய்ப் பருவத்தில் இது செய்யாத வீடே இருக்காது! (எங்க வீடு தவிர்த்து) ரங்க்ஸ் அவ்வளவா ரசிப்பதில்லை. ஆனால் மாமனார் வீட்டில் அனைவரும் மாங்காய்ப் பச்சடியைப் பெரிய கல்சட்டியில் செய்தாலும் போதாது என்பார்கள்.
புளிப்பான மாங்காயாக இருந்தாலும் பச்சடி செய்யலாம்.
மாங்காய் ஒன்று
உப்பு அரை டீஸ்பூன்
அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
வெல்லம் அரைக்கிண்ணம்
ஏலக்காய் தேவையானால்
மாங்காயைத் தோல் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். மாங்காய்த் துண்டங்கள் நன்கு வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வெல்ல வாசனை போகும் வரை கொதித்ததும் ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வருகையிலேயே அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்த் தூள் விரும்பினால் சேர்க்கலாம்.

மாங்காய்ல எல்லாத்தையும் போட்டுத் தாக்குறீங்க. ஜாம் நான் இதுவரை செய்ததில்லை.
ReplyDeleteஆமா.. இன்னமும் மாங்காய் கிடைக்குதா? இங்க மாம்பழ வரத்து அனேகமாக முடியப்போகுது. இப்போ பாகிஸ்தான் பங்கனப்பள்ளி வெரைட்டி வந்துக்கிட்டிருக்கு.
மாங்காய் முடியப் போகிறது. சுமாராகக் கிடைக்கிறது.
Deleteமாம்பழ லஸ்ஸி! :)
ReplyDeleteமற்றவையும் சுவை.....
எனக்குப் பிடித்தது மேங்கோ ஜெல்லி - இதை ஆந்திராவில் மாவடித்தண்ட்ர என்று சொல்வார்கள். நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் விஜயவாடாவில்.
மேங்கோ ஜெல்லிக்கு நானும் ஒரு காலத்தில் ரசிகன். (ஆனால் பிராண்டட்). அதுக்கு அப்புறம் அதுல எவ்வளவு ஜீனி சேர்ப்பாங்கன்னு தெரிந்ததும் சாப்பிடுவதை நிறுத்தினேன்.
Deleteமாங்கோ ஜெல்லி செய்ததும் இல்லை; சாப்பிட்டதும் இல்லை. மற்ற ஜெல்லிகள் செய்திருக்கேன்! :)
Deleteமாங்காய்ல இம்பூட்டுவகை செய்வாங்களா! அட!
ReplyDeleteஇன்னும் இருக்கே! :)
Delete