எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, August 26, 2012

ஸ்ரீராமுக்காக மீள் பதிவு, பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி! :))))

பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு. பெருங்காயம்(தேவை எனில்)


கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம். கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.

அடுத்து இனிப்புச் சட்னி: அவசரமாகப் பண்ண இது வசதி. பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும். இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும். மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும். இது பல நாட்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.


ஸ்ரீராம், என்னடா இதிலே கொடுத்திருக்கேனேனு நினைக்காதீங்க.  இதிலே தானே கேட்டிருந்தீங்க? அதோட இங்கே பேல்பூரி பதிவையும் படிங்க. அதையும் சொல்ல வசதியா இருக்கும்னு தான் இங்கேயே கொடுத்திருக்கேன். :))))))

6 comments:

  1. பூண்டு போட்டால் பெருங்காயமோ, பெருங்காயம் சேர்த்தால் பூண்டோ தேவை இல்லை இல்லையா? நன்றி, குறிப்பாக என் பெயர் சொல்லிப் பதிவிட்டமைக்கு. குறித்துக் கொண்டேன்! பெல் பூரி எனக்குப் பிடித்தமில்லை!

    ReplyDelete
  2. அடச்சே...பேல் பூரி பெல் பூரி ஆகி விட்டது! பேல் பூரி என்றே படிக்கவும்! :))

    ReplyDelete
  3. பேல் பூரி கலந்த உடனே சாப்பிட வேண்டும். நீங்க ஊறிப் போய்ச் சாப்பிட்டிருப்பீங்க. :))))) பானி பூரியும் அப்படித் தான் பானியை அதிலே விட்டதும் விழுங்கணும். பசங்களுக்குப் பிடிக்கும். அவ்வளவு தான். அவங்களுக்குச் சாப்பிடும் முறையும் தெரியும்.

    பூண்டு நான் சேர்ப்பதே இல்லை. ஆகையால் பெருங்காயம் தான். :))))))

    ReplyDelete
  4. பூண்டு/பெருங்காயம் mutually exclusiveஆ? ஏன்? பூண்டு காய்கறி வகை. பெருங்காயம் என்னவென்று இதுவரை தெரிந்து கொண்டதில்லை :)

    ReplyDelete
  5. பூண்டு, வெங்காயம் போன்றவற்றோடு பெருங்காயம் சேர்த்தால் அதன் ஒரிஜினல் வாசனை தெரியாது என்பார்கள். ஆகையால் பூண்டோடயோ, வெங்காயத்தோடயோ பெருங்காயம் சேர்ப்பதில்லை. :)))) பெருங்காயம் மரப் பிசின் சேகரம் செய்யப்பட்டு அதோடு கோதுமை மாவு போன்றவை சேர்க்கப் பட்டு பயன்படுத்தப் படுகிறது. இது நம் நாட்டைச் சேர்ந்தது இல்லை. பெருங்காயம் சேகரிக்கப் பட்டதை அப்படியே பயன்படுத்தினால் கசக்கும். பால் பெருங்காயம் என்பதும் கொஞ்சம் மாவு கலந்து தான் இருக்கும். இந்தியாவில் பெருங்காயத்தை முதன் முதல் அறிமுகம் செய்தது குஜராத்தியர் எனச் சொல்வார்கள். :))))) நம் வீடுகளில் நாள், கிழமைகளுக்குச் சமைக்கையில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. (இப்போதும், எப்போதும். அதே போல் சுவாமி நிவேதனப் புளியோதரை என்றால் மிளகாய்க்குத் தடா. ஒன்லி மிளகு. வடைக்கும் மிளகு தான். :))))))

    ReplyDelete
  6. வாவ்! இவ்ளோ சமையல் விஷயங்கள் சூட்சுமங்களா!

    ReplyDelete