எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, August 25, 2012

வெறும் அரிசி அடை(வித் முருங்கைக் கீரை) :))))

இது தென் மாவட்டங்களில் செய்யப் படும் ஒன்று.  அதிகம் மதுரை தாண்டிப் பார்க்க முடியாது.  இதற்குத் தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது கால் கிலோ, ஒரு மூடித் தேங்காய்த் துருவல், உப்பு.  ஒரு கட்டு முருங்கைக் கீரை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும்.  பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை, கொ.மல்லி தேவையானால்.  எண்ணெய் அடை வார்க்க.  தேங்காய் போட்டு அரைப்பதால் அதிக எண்ணெய் தேவைப்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நன்றாய் இருக்கும்.  பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் ஏதேனும் அவரவர் வழக்கம் போல்

புழுங்கலரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும்.  தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து, நறுக்கி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளவும்.  நன்கு கலக்கி அரைமணி நேரம் வைக்கவும்.  பின்னர் தோசைக்கல்லில் மாவை லேசாக நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு அடை போல் கனமாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள ஏதேனும் சாம்பார் தான் நல்ல காம்பினேஷன் என்றாலும் தக்காளி, வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும்.


இதையே காரம் வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டும் முருங்கைக் கீரை போட்டுப் பண்ணலாம்.  இரண்டுமே நன்றாக இருக்கும்.  முந்தாநாள் செய்தேன்.  படம் எடுக்கணும்னோ, பதிவு போடணும்னோ தோணலை.  :))) இன்னிக்கு வேறொருத்தர் கேட்டதில் இதையும் போடலாம்னு தோணித்து. :)))

2 comments:

  1. முருங்கைக் கீரை... சுலபமாகக் கிடைப்பது, ஆனால் சுலபத்தில் வீட்டில் வாங்காதது! துவட்டல், பொரியல், பொரிச்ச குழம்பு, எல்லாம் பிடிக்கும்.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், உங்க ஷுகர் பிரச்னைக்கு இது ரொம்பவே நல்லது. எப்படி வேணாலும் சாப்பிடலாம். நானும் எல்லாமே பண்ணுவேன்.

    ReplyDelete