எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, August 20, 2012

எம் எல் ஏ, பெசரட் வேணுமா?

எம் எல் ஏ, பெசரட் தோசை பத்திப் பார்க்கலாமா இப்போ!

நேத்திக்கு ஜி+ ல வா.தி. பெசரட் சாப்பிட்டேன்னு சொன்னாலும் சொன்னார்.  அப்போலேருந்து அதே நினைப்பு.  சாப்பிட முடியலைனாலும் எழுதியானும் வைச்சுக்கலாம்னு ஒரு எண்ணம்.  அதான் எல்லாரோடயும் பகிர்ந்து கொள்ளலாம்னு வந்தேன்.


இதுக்குத் தேவையான பொருட்கள்:  பச்சைப் பயறு ஒரு ஆழாக்கு.  பச்சரிசி அரை ஆழாக்கு. பச்சை மிளகாய்  4 இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் மூன்று பொடிப் பொடியாக நறுக்கியது. கருகப்பிலை, கொத்துமல்லி(தேவையானால்) உப்பு.  தோசை வார்க்க எண்ணெய், தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தவா.


  ஊறினால் நிறைய ஆகிடும்.  அதான் இது போதும்னு சொல்றேன்.  குறைஞ்சது ஆறு மணி நேரம் ஊறணும்.  .  இரண்டையும் சேர்த்தே கூட ஊற வைங்க.  இதுக்கு நான் இருவிதமாக சாமான்கள் போடுவேன். ஒண்ணு சோம்பு, கிராம்பு, மிளகு, சீரகம் ஊற வைத்து அரைக்கும்போது சேர்க்கிறது.  இன்னொண்ணிலே சோம்பும் கிராம்பும் போடாமல் மிளகு, சீரகம் ஊற வைத்துப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து அரைக்கிறது.  இப்போ நாம் பச்சைமிளகாய் நான்கோடு இஞ்சி ஒரு துண்டையும், அரை டீஸ்பூன், மிளகு, ஒரு டீ ஸ்பூன் சீரகத்தோடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு பாசிப்பருப்பையும் அரிசி ஊற வைத்ததையும் அரைக்க வேண்டும்.  ஒரு சிலர் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும் அரைக்கையிலேயே சேர்க்கிறார்கள்.  அது நம்ம இஷ்டம்.

நறுக்கிய வெங்காயத்தைக் கொஞ்சம் வதக்கி வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு தடவி விட்டு மாவை ஊற்றவும்.  மேலே வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.  திருப்பிப் போடாமல் அப்படியே மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.  பின்னர் தொட்டுக்கொள்ளக் கொத்துமல்லிச் சட்னியோடு சாப்பிடலாம்.  இது ஒரு வகை.

இன்னொன்று தான் எம் எல்.ஏ பெசரட்.  அதுக்குக் கோதுமை ரவையில் உப்புமா செய்து கொள்ள வேண்டும்.  உப்புமா செய்யும் முறை தேவையில்லைனு நினைக்கிறேன்.  :))))) இந்த உப்புமாவை அந்தத் தோசையின் மேலே ஒரு கரண்டி வைத்து அப்படியே மூடிக் கொடுக்க வேண்டும்.  ஒரு தோசை முழுசாகச் சாப்பிட்டால் நீங்க சாப்பாட்டு ராமர் அல்லது ராமி.   நான் செய்யறச்சே படம் போடறேன்.

8 comments:

  1. பெசெரெட்டு தோசை என்பது அடியின் இன்னொரு வடிவம் என்று எண்ணியிருந்தேன். ஒரு முறை முயற்சித்துப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  2. enjoy!!!!!! but very heavy! half sapidalam. :))))))

    ReplyDelete
  3. சாப்பாட்டுராமன்னு ஏன் சொல்றோம்? சாப்பாட்டுபீமன்னு சொன்னா அர்த்தம் இருக்கு.. ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க.

    ReplyDelete
  4. ராமர் காட்டு வாசம் முடிஞ்சு, ராவண வதம் முடிஞ்சு திரும்பி வரச்சே, பாரத்வாஜர் ஆசிரமத்து விருந்திலே கலந்து கொண்டார். அங்கே நந்திகிராமத்தில் பரதன் எப்போ வேணாத் தீக்குளிக்கலாம்ங்கற நிலைமை; என்றாலும் ராமர் சாவகாசமா அனுமனை முன்னாடி அனுப்பிச்சுட்டு விருந்து முடிஞ்சே நந்திகிராமம் கிளம்பினார். அதனாலேயோ என்னமோ! சாப்பாட்டு ராமன் அப்படிங்கற பேர். ஹிஹிஹி, எப்போவோ சின்ன வயசிலே ஒரு கதாகாலக்ஷேபத்தில் கேட்டது.

    ReplyDelete
  5. இருக்கலாம்.
    interesting. thanks.

    ReplyDelete
  6. பெசரட்டு அசத்தலாக இருக்கின்றது.

    ReplyDelete
  7. ஸ்டஃப் பண்ணாம செஞ்சு சாப்படறதுண்டு. :) நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்துடறேன்....

    ReplyDelete