எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 28, 2012

கத்தரிக்காய்ப் பிரியர்களே, வாங்க, சாப்பிடலாம்!

கத்தரிக்காய் சாதம்: நானும் இது போணியாகறதுக்காகப் பொண்ணு, பையர் ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லிப் பார்த்தேன். கத்திரிக்காய்ப் பிரியர்களான அவங்க ரெண்டு பேரும் கத்திரிக்காய் சாதமா? போர்னு சொல்லி என் மனசை உடைச்சுட்டாங்க. வேறே வழியில்லாமல் பேசாமல் இருந்துட்டேன். இப்போ ஸ்ரீராம் கேட்டதும் கொஞ்சம் சாந்தி கிடைச்சது.

நான்கு பேருக்குத் தேவையான அளவு பொருட்கள்:

அரிசி பாஸ்மதி அல்லது நல்ல பழைய அரிசி ஒரு கிண்ணம். நன்கு உதிர் உதிராக வேக வைத்துக் கொண்டு அரை ஸ்பூன் உப்புச் சேர்த்து நெய் ஊற்றி ஆற வைக்கவும்.

கத்தரிக்காய் அரைகிலோ ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கழுவி நீள வாட்டில் வெட்டிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடிதடவி வைக்கவும்.

மிளகாய் வற்றல் 8ல் இருந்து 10 வரை

தனியா/கொத்துமல்லி விதை மூன்று டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு அரை டீஸ்பூன்

வெந்தயம் அரை டீஸ்பூன்

கொப்பரைத் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

எள்(வெள்ளை) இரண்டு டீஸ்பூன்

இலவங்கப் பட்டை ஒரு துண்டு

ஏலக்காய் பெரியது இரண்டு

சோம்பு இரண்டு டீஸ்பூன்

மராட்டி மொக்கு கொஞ்சம்

உப்பு தேவையான அளவு, புளி கரைத்த நீர் ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் ஒரு சிறு துண்டு.

மஞ்சள் பொடி ஒரு சின்ன ஸ்பூன்

2 வெங்காயம் நீளமாக நறுக்கியது

தாளிக்க எண்ணெய், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை

மசாலா சாமான்கள் எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிதம் பிடிக்குமெனில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது தேவையில்லை எனில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கத்தரிக்காய்களைச் சேர்த்துக் கொண்டு, சற்று வதக்கிப் பின்னர் புளிக்கரைசலைச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும், மசாலாப் பொடி, வெல்லத் தூள் சேர்க்கவும். சாதத்தில் கொட்டிக் கிளறவும். சற்று நேரம் சாதத்தோடு ஊறவிட்டுப் பின்னர் காரட் தயிர்ப்பச்சடி, அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடி அல்லது வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.

9 comments:

  1. முதற்கண் நன்றி. எப்பவோ அம்மா செய்து, சாப்பிட்டது. இப்போ கத்தரிக்காய் பிடிச்ச ஒரே ஆள் நான் என்பதால் (யாரும் சாப்பிட் மாட்டார்கள் என்பதாலும் கூட) சிறிய அளவில் செய்யச் சொல்ல வேண்டும்! .செய்முறை சிம்பிளா இருக்கு. தேவைப் படும் லிஸ்ட் பெரிசா இருக்கு. ஒரு படம் போடக் கூடாதோ..! சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. மராட்டி மொக்கு...அப்படீன்னா...? எங்கே கிடைக்கும். அது இல்லாமலேயே செய்ய வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்??? மராட்டி மொக்கு என்று சொல்லித் தான் பழக்கம். நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது சென்னையில் இருந்தால் டவுனில் வட இந்திய மசாலாப் பொருட்கள் விற்கும் கடையில் கேட்டுப் பார்க்கலாம். பூ மாதிரி இருக்கும். கொஞ்சம் கத்திரிக்காய்க் கலரிலேயே இருக்கும். அது இல்லாமலும் செய்யலாம். வேண்டுமானால் தேஜ்பத்தா போட்டுக்கொள்ளுங்கள்.

      Delete
    2. தேஜ்பத்தர் என்றால்....? ஹி..ஹி...தெரியாத பேரா சொல்லி பயமுறுத்தறீங்க...எதாவது ஒண்ணு போட்டுத்தான் ஆகணுமா?

      Delete
    3. மசாலா இலைனு சொல்லிக் கேளுங்க. கிடைக்கும். இலையாகக் காய்ந்தது கிடைக்கும். தாளிக்கையில் இதை முதலில் போட்டுவிட்டுப் பின்னர் ஒவ்வொன்றாகச்சேர்க்கவேண்டும். :)))))

      Delete
  3. ஒருத்தருக்கென்றால் நான்கு கத்தரிக்காய் போதும். :)))))

    ReplyDelete
  4. இதைக் கோடா மசாலா என்று சொல்வார்கள் மராட்டியில். கூகிள் பண்ணிப் பார்க்கிறேன், மராட்டி மொக்கு படம் கிடைக்குதானு.

    ReplyDelete
    Replies
    1. அன்னாசி மொக்கு என்றும் சொல்வதாய் கூகிளார் மூலம் அறிந்தேன்.

      Delete
    2. இப்போ சமீபத்தில் கத்தரிக்காய் சாதம் பண்ணலை ஸ்ரீராம், பண்ணினதும் படம் எடுத்துச் சேர்க்கிறேன்.

      Delete