எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 28, 2012

சாலட் வகைகள்---தொடர்ச்சி.

வெள்ளரிக்காய் சாலட்: நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் 2, தக்காளி சிவப்பாகப் பழுத்தது ஒன்று, வெங்காயம் ஒன்று. வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள், பச்சைக் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன். எலுமிச்சைச் சாறு அரை மூடி, சர்க்கரை ஒரு டீஸ்பூன்.

வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். வேர்க்கடலையை வறுத்துச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்துக் கொண்டு பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

வெள்ளரிக்காய்க்குப் பதிலாக வெள்ளை முள்ளங்கி, பப்பாளிக்காய் போன்றவற்றை வைத்தும் மேற்சொன்ன முறையில் சாலட் செய்யலாம். அடுத்துப் பார்க்கப் போவது பாஸ்தா சாலட்.


இதற்குப் பாஸ்தா ஒரு பாக்கெட் வேண்டும். காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை, முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கியது. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், சாலட் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன்.(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)

பாஸ்தாவை நன்கு கழுவி வெந்நீரில் மெதுவாக ஆகும் வரை வேக வைத்துப் பின் குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டி வைக்கவும். அடுப்பில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை கிளறிவிட்டுப் பின் அடுப்பை அணைத்துக்கொண்டு முதலில் முட்டைக்கோஸைப்போட்டுக் கிளறிப் பின்னர் காரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி சேர்த்துக்கொண்டு உப்பு, சர்க்கரை சேர்க்கவும். பின்னர் ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்க்கவும். தேவை எனில் சாலட் ஆயில் விட்டுக் கிளறி வைக்கவும். இது குளிர்ந்தாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும். எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியலை.

No comments:

Post a Comment