எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 5, 2010

வயிறு வலிக்குதே!

தீபாவளி பட்ச்ணங்களை ஒரு பிடி பிடிச்சா வயிறு வலிக்கத் தான் செய்யும்.

க்ர்ர்ர்ர், யாரு சாப்பிட்டாங்க பக்ஷணங்கள் எல்லாம்??? இருந்தாலும் வயிறு வலிக்குது!

சரி, சரி, இப்போ என்ன? மருந்தைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாயிடும்.

அந்த மருந்தும் நானே தான் கிளறிச் சாப்பிடவேண்டி இருக்கு. :(

சரி, சரி எனக்குச் சொல்லிக் கொடு, நான் கிளறுகிறேன்.

வேண்டாம்பா சாமி, அன்னிக்கு அல்வா கிளறினாப்போல் ஆயிடும். அப்புறமா அது சொத்தை, இது நொள்ளைனு என்னைச் சொல்லுவீங்க.

ரெண்டு பேருமாச் சேர்ந்து தானே அல்வா கிளறினோம்??

அது என்னமோ சரிதான். ஆனால் சரியா வரலைனதும், எனக்கு அல்வா கொடுத்துட்டீங்க! நானே மருந்தைக் கிளறிக்கறேன்.

சரி, சாமான்கள் என்னனு சொல்லு, அதையாவது எடுத்து வைக்கலாம்.

வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.

சுக்கு
மிளகு,
ஜீரகம்,
சோம்பு,
கசகசா,
கிராம்பு,
ஏலக்காய்,
கருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை,
சித்தரத்தை,
திப்பிலி,
தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்

இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும். அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை. பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்

இனி பச்சையாய் அரைக்க
இஞ்சி 50 கிராம்
கொத்துமல்லி விதை 100 கிராம்
இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச் சாறு எடுத்துக்கொள்ளவும். மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.

கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.

நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். விடாமல் கிளறவும். நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும். கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.

18 comments:

 1. தீபாவாளிக்கு எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்! :-))

  ReplyDelete
 2. தீபாவளி பட்சணம் தீரும் வரைக்கும் வேற பேச்சே கிடையாதுன்னு ஒரு பக்கம் பேசிண்டே, இன்னொரு பக்கம் தீபாவளி மருந்தா?
  நடக்கட்டும்.. நடக்கட்டும்...
  :))))))

  ReplyDelete
 3. வாங்க திவா, நான் செய்யற பட்சணங்களை விடவும், இந்த மருந்து தான் எல்லாரும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க. :))))))))) அப்பா வழிக் குடும்பத்தில் இதிலே நிபுணர்கள்னு அம்மா சொல்லுவா! :))))))))))) ம்ம்ம்ம்ம் எங்க தலைமுறைக்குத் தான் எதுவுமே தெரியாமல் போயிட்டது! :(

  ReplyDelete
 4. ஹிஹிஹி, வாங்க அஷ்வின், முதல் வருகைக்கு முதலில் நன்னியோ நன்னி!
  அப்புறம் பட்சணம் ஒரு பக்கம் உள்ளே போகும்போது மருந்தையும் சாப்பிடணும் இல்ல?? அதான்! இந்தச் சின்ன டெக்னிக் கூடப் புரிஞ்சுக்காமல் அப்பாவியாய் இருக்கீங்க போங்க! :))))))))))

  ReplyDelete
 5. இப்ப எல்லாம் யாருக்கு இதை பற்றி தெரியது

  ReplyDelete
 6. தீபாவளி வாழ்த்து(க்)கள் கீதா.

  இதுவரை நான் செஞ்சதில்லை. போனவருசம் க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் பண்டிகை ஸ்பெஷலில் கிடைச்சது.

  ReplyDelete
 7. geetha
  deepavali marundhudhaan enakku pidichcha sweet(maththathellaam saappitta piragu)
  ungal seymurai vilakkam arumai

  ReplyDelete
 8. //priya.r said...
  ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் வருது

  ஏதோ தீபாவளி மருந்தாமே ;ஸ்வீட்ஸ் சாப்பிடுட்டு அதை சாப்பிட்டா

  அஜீர்ணம் உட்பட எந்த பிரச்னையும் வராதாமே

  எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா மேடம்

  November 3, 2010 4:46 AM


  geethasmbsvm6 said...
  varen, varen.

  November 5, 2010 6:41 AM//
  என்ன கொடுமை சார் (மேடம்) இது !!

  ஏனுங்க இப்படி!க்ர்ர்ர்ர்ர்

  வரேன் வரேன் ன்னு சொன்னவங்க அதே தேதில பதிவும் போட்டதை

  கொஞ்சம் தெரிய படுத்த வேண்டியது தானே !

  சரி சரி இனி வரும் பண்டிகைக்கு பயன்படுத்த

  குறித்து வைத்து கொள்கிறேன்.

  பதிவுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 9. வாங்க கலா, முதல் வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.

  ReplyDelete
 10. ப்ரியா, போஸ்ட் போட்டதே பெரிய விஷயமாக்கும்! :))))) எங்கே இணையப்பக்கமே வரமுடியலையே! தீபாவளிக்கு மட்டும் தான் இந்த மருந்து செய்யணும்னு எல்லாம் இல்லை. எப்போ வேணாப் பண்ணி வச்சுட்டுச் சாப்பிட்டுக்கலாம். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் பலன் தெரியும்.

  ReplyDelete
 11. நன்றி கீதாம்மா
  என் பையன்(ர்) களுக்கு தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது
  சொல்லி கொடுப்பதை மறக்காமல் பரிட்சையில் எழுத
  எதாவது மார்க்கம் (மருந்து,மந்திரம் etc )இருந்தால் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 12. வல்லாரைக் கீரையைச் சமைத்துக் கொடுங்க. உடனே எல்லாம் பலன் அளிக்கணும்னு எதிர்பார்க்க முடியாட்டாலும், நினைவாற்றல் மேம்படும். வல்லாரைத் துவையல், வல்லாரைக் கூட்டு, பாசிப் பருப்பு, தேங்காய் சேர்த்துப் பண்ணிக் கொடுக்கலாம்.

  பொதிகையில் வியாழன் அன்று மாலை நான்கு மணி அளவில் கிஷோர் என்பவர் நடத்தும் சமையல் நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். நிறைய விஷயங்கள் சொல்லுவதோடு, மூலிகைக்கீரைகளாய்த் தேர்ந்தெடுத்துச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பார்.

  ReplyDelete
 13. குறிப்புக்கும் தகவலுக்கும் மிகவும் நன்றி கீதாம்மா
  வல்லாரை லேகியம் மருந்து கடைகளில் கிடைக்கிறது
  அதன் பலன் சுமார் தான்.
  நீங்கள் சொல்லியபடி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. வல்லாரை லேகியம்லாம் பயன்படுத்திப் பார்க்கலை. பொதுவா இவற்றில் உடனடி பலனையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நண்பர் ஒருவரின் தாயாருக்கு அமீபயாசிஸ் இருந்ததை வல்லாரைக்கீரை குணப்படுத்தியதாயும் கேள்விப் பட்டிருக்கேன். பொதுவாய்க் கீரை வகைகளே உடலுக்கு நல்லது. ஆனால் கூடிய வரையில் நன்கு சுத்தம் செய்யவும்.

  ReplyDelete
 15. where is my comment? en comment mattum release panradhe illa...avvvvvvv....

  ReplyDelete
 16. @ ATM
  இந்த ப்ளோக்ல கமெண்ட்ஸ் போட்டா உடனே பப்ளிஷ் ஆகுமே !
  இங்கே தான் போட்டா யா !
  எதற்கும் வல்லாரை சாப்பிட்டு திரும்பவும் யோசி அப்பாவி !
  ஒருவேளை காக்காய் தூக்கிட்டு போய் இருக்குமோ!

  ReplyDelete
 17. ஒவ்வொரு இடுகையிலும் நல்ல பயனுள்ள தகவல்கள் நிறைந்து கிடக்கிறது.. நன்றி.. பாராட்டுக்கள்..! நான் உங்க பாலோவர் ஆயிட்டேன்.. அப்படியே நம்ம பிளாக்கையும் பாலோ பன்னலாமே..!!

  ReplyDelete
 18. வாங்க தங்கம் பழனி, என்னைத் தொடருவதற்கு மிக்க நன்றி. நானும் உங்களைப் பின் தொடருகிறேன்.

  ReplyDelete