பஸ்ஸிலே சப்பாத்திக்குத் தொட்டுக்க பீட்ரூட் தான் அருமையான இணை உணவுனு நம்ம அநன்யா அக்கா சொல்லி இருக்கிறதை எல்லாரும்/சிலர்?? ஆமோதிக்கிறாங்க. என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய். அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை. எல்லா ஹோட்டலிலும் தினம் போடும் ஒரு கறியில் பீட்ரூட் தமிழ்நாடு பூராவும் அநேகமாய் எல்லா ஹோட்டல்களில் தினமும் பீட்ரூட் கறி இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். நாம போரடிச்சா பீட்ரூட்டைக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கலாம், என்னிக்கோ. அது கூட அன்னிக்குனு பார்த்து சாப்பாடே வேண்டாம்னு உங்க வீட்டிலே எல்லாரும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும். இருந்தாலும் முதல்லே பீட்ரூட் கறியை வெங்காயம் சேர்த்தும், சேர்க்காமலும் எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாம். இது சப்பாத்திக்கெல்லாம் இல்லை. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் அடுத்துத் தரேன் பாருங்க. என்ன வெங்காயம்?? பூண்டு?? அதெல்லாம் எதுக்கு வேண்டாம். அது இல்லாமலேயே.
பீட்ரூட் கால் கிலோ: போதுமானு கேட்காதீங்க. இதைச் சாப்பிடவே நீங்க வாசல்லே போர்டு வைக்கணும். வெங்காயம் சேர்த்தால் பெரிய வெங்காயம் இரண்டு. பொடிப் பொடியா நறுக்கி வைங்க. நினைவா ரங்க்ஸை வெங்காயம் உரிச்சு நறுக்கி வைக்கச் சொல்லுங்க. எதுக்குனு சொல்லவேண்டாம். சமையல்லே பீட்ரூட்னு தெரிஞ்சா எங்கேயானும் வெளியே சாப்பாடுனு ஓடிட சான்ஸ் இருக்கு. பச்சை மிளகாய், இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப. கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்க எண்ணெய். இந்தப் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை மிக்சியிலோ அம்மியிலோ கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதைத் தனியா வச்சுக்கோங்க.
இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும். வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன். அப்புறம் தோலை உரிச்சா உ.கி. தோல் மாதிரி வந்துடும். இப்போ நறுக்கிக்குங்க. வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவுக்கு ஊற்றினால் போதும். கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் போடலை என்றால் நறுக்கி வைச்ச பீட்ரூட்டைப் போட்டு உப்புப் பொடியைச் சேர்க்கவும். மூடி வைச்சுக் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் கரகரப்பாய் அரைச்ச ப.மி. இஞ்சி, தே,து, சேர்க்கவும். நன்கு கிளறவும். ஒரு ஐந்து நிமிஷம் விடாமல் கிளறியதும் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
இதை விட்டால் பீட்ரூட்டைத் துருவிப் பால் சேர்த்தோ, சேர்க்காமலோ அல்வா பண்ணலாம். ஜாம் மாதிரிக் கிளறி வைச்சுக்கலாம். முகத்துக்கு அழகு சாதனமாய்ப் பயன்படுத்தலாம்.
எங்கம்மா வழக்கமா பண்ணறது அல்வாதான். இப்பல்லாம் வீட்டிலே இலையில விழறதை கமெண்ட் இல்லாம சாப்பிட பழகியாச்சு!
ReplyDeleteபதிவுக்கு நன்றி ;செய்து பார்த்தா போச்சு !
ReplyDeleteஅது என்ன "பஸ்ஸிலே" என்பதற்கு அர்த்தம் கீதாம்மா
அட திவா, இங்ங்ங்ன்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏ?? பீட்ரூட்னா ரொம்பப் பிடிக்குமா? வரவுக்கு நன்றி. ஹிஹிஹி, கமெண்ட் சொல்றதில்லையா? ஓகே, ஓகே. அப்படித்தான் இருக்கணும்! :))))))
ReplyDeleteவாங்க ப்ரியா. செய்து பாருங்க, குழந்தைங்க ஓரளவுக்கு விரும்பிச் சாப்பிடலாம்.
ReplyDeleteகூகிள் ஜிமெயிலிலே Buzz அப்படினு ஒரு ஆப்ஷன் இருக்கு. யார் வேண்டுமானாலும் அதாவது நம்முடையகாண்டாக்ட் லிஸ்டில் இருப்பவங்க போடும் விஷயத்தை நாம் பார்க்கலாம். அங்கேயே கமெண்டலாம். பதிவுகளைக் கூட பஸ்ஸில் விளம்பரம் செய்யலாம். :)))))) உங்க கிட்டே ஜிமெயில் அக்கவுண்ட் இல்லைனு நினைக்கிறேன். அதான் புரியலை. :D
நன்றி கீதாம்மா
ReplyDeleteநான் அதிகம் சிபி மெயில் தான் பயன் படுத்துகிறேன்
ஆனால் ஜிமெயில் அக்கௌன்ட் உம் இருக்கு
நீங்க சொன்ன பிறகு தான் கவனித்தேன்
நான் பஸ் என்றால் பேருந்து என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்
ஹி ஹீ .,அப்புறம் அப்பாவிக்கு இந்த மேட்டர் தெரிய வேண்டாம் !
அவங்க ஏற்கனவே செய்த damage போதும் .,ரகசியம் கீதாம்மா ! ஹ ஹா
இனி buzz உபயோகபடுத்தி பார்த்து விடுகிறேன்
maami same procedure podimas thaan panni irundhen.. without vengaayam.. i love thsi version.. thanks for sharing
ReplyDeleteநன்றி ப்ரியா, ஜிமெயிலும் பயன்படுத்திப் பாருங்க. அங்கே எல்ல்லாருமே பஸ்ஸிலே தான் கொட்டம்! :)))))))
ReplyDeleteவாங்க அ.அக்கா, நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும் பஸ்ஸிலே கொடுத்த விளம்பரத்துக்கும். :))))))
ReplyDeletebeetroot pachaiyaa saappidanumnu sollittu, இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும். வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன்.appadeennu solli irukkeengale? enna oru contradiction? :P:P:P
ReplyDeleteashwinji idhellaam gavanikkaradhillaiyaa neengal?
ஓ அநந்ஸ்!
ReplyDelete// என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய். அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை.//
சரியா படிக்கணும். :-)))
//வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு//
ReplyDeleteஆனா வேக வெச்சா ஒரு மாதிரி வெம்பல் வாசனை வந்து டேஸ்டே மாறிடுதே மாமி... துருவி வதக்கற டேஸ்ட் மாதிரி இல்லையே... நாட் ஜோகிங்... சீரியஸ் டவுட் ....:)))
//நான் அதிகம் சிபி மெயில் தான் பயன் படுத்துகிறேன்//
ReplyDeleteசிபியோட மெயில் நீங்க பயன்படுத்தினா அப்ப சிபி உங்க மெயில் பயன்படுத்துவாங்களா... சும்மா ஒரு டவுட்... நோ டென்ஷன் ப்ரியா...:))
//நான் பஸ் என்றால் பேருந்து என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்//
Ofcourse , எங்க ஊர்லயும் பஸ் என்றால் பேருந்து தான்...:)))
//ஹி ஹீ .,அப்புறம் அப்பாவிக்கு இந்த மேட்டர் தெரிய வேண்டாம்//
ஹா ஹா... தெரிஞ்சாச்சு...:)))
சாலட்ல ஒண்னு ரெண்டு துருவல்னா சாப்பிட்டு விடுவேன் . முழுக்க ஒரு பீட்னா முழி பிதுங்கி விழுந்துடும். அப்புறம் விழியை எடுத்துதான் மாட்டிக்கணும்:)).
ReplyDeleteநம்ப கறி -தோல் சீவ், கட் க்யூப் , மைக்ரொவேவ் 5 மினிட்ஸ் . தாளிச்சு கொட்டிங்க், வெங்காயம் வதக்கிங்க், பீட் ஆடிங்க் , டாஷ் ஆஃப் லெமென் ரெண்டு திருப்பு திருப்பிங் , அப்புறம் என்ன !!! டட்டடாண் கிராண்ட் ஸ்வீட் வத்தக்குழம்பு பொடி போடிங் , கொ. மல்லி / கறிவேப்பலை போடிங்க் . 2 திருப்பிங்க் ... சாப்பிடிங்க் சாதத்தோட or பிடா ப்ரெட்ஓட !!low carb ஆ வெறும்ன தயிரோட !!
அ.அக்கா, கண்ணிலே வி.எ. ஊத்திட்டு இல்லை வரீங்க எல்லாரும்?? :P
ReplyDelete@திவா, மேலே உள்ள பதில் உங்களுக்கும் சேர்த்து. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
துருவி வதக்கியே பண்ணுங்க. இங்கே பீட்ரூட்டில் நீங்க சொல்றாப்போல் வாசனை எல்லாம் வரலை. அதனால் நான் இரண்டு முறையிலும் பண்ணுவேன். பொதுவாத் துருவிட்டா சாலட் தான்! :)))))))
ReplyDelete//ஹி ஹீ .,அப்புறம் அப்பாவிக்கு இந்த மேட்டர் தெரிய வேண்டாம்//
ReplyDeleteஹா ஹா... தெரிஞ்சாச்சு...:)))//
ஹாஹா, ப்ரியா, இப்போ என்ன சொல்லுவீங்க? இப்போ என்ன சொல்லுவீங்க?? இப்போ என்ன சொல்லுவீங்க???? :P
ஜெயஸ்ரீ, கிடைச்சதைக் கிடைச்ச இடத்திலே சாப்பிடணும்னு தான் தோணும், ஆனால் இங்கே தான் எல்லாம் செய்ய வசதி, வாய்ப்பு இருக்கே! :))))
ReplyDeleteவந்ததுக்கு நல்ல்ல்ல்லா நாலு வைச்சு அனுப்புங்க கீதாம்மா !
ReplyDeleteஇன்னைக்கு எங்க வீட்டில பீட்ருட் பொரியல் தான்
பீட்ருட் சட்னி செய்து பாருங்க சூப்பர் ஆ இருக்கும் கீதாம்மா
ப்ரியா, பீட்ரூட் சட்னி இல்லை, இன்னிக்குப் பிரண்டைத் துவையல் செய்தேன், அதை எழுதறேன் பாருங்க. :))))
ReplyDeleteபீட்ரூட் நன்றாக இருந்ததது நன்றி
ReplyDeleteவாங்க க்ளைவ், (எனக்குப் பிடிக்காத பேரு) :))))
ReplyDeleteஅது சரி அது என்ன unnormal?? ubnormal னு இருக்க வேண்டாமோ? :)))))