எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 20, 2009

ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!

வருஷக் கணக்காச் சிதம்பரம் போயும் இன்னமும் அங்கே சம்பாசாதமும், கத்தரிக்காய் கொத்சும் சாப்பிட்டதில்லை. ஆனால் செய்முறை தெரியும். இப்போப் போனவாரம் போயிருந்தப்போவும் தீக்ஷிதர் வீட்டிலேயே கேட்டும் உறுதி செய்து கொண்டேன். அதன்படி எழுதறேன். முதலில் சம்பாசாதம். சாம்பார் சாதம்னு நினைச்சுடாதீங்க. சிதம்பரத்திலே இது ஹோட்டல்களில் கூட பிரபலமாக்கும்.



நல்ல அரிசியாக வாங்கி வெண்கலப்பானையில் சாதம் வடித்துக் கொள்ளவும். வெண்கலப் பானை இல்லைனா என்ன? தீபாவளிக்கு வஸ்த்ரகலா வாங்காத கோபத்தில் உங்க முகமே வெங்கலப்பானை மாதிரித் தானே இருக்கும்? அதனால் பரவாயில்லை, குக்கரில் வைச்சுடுங்க. பொலபொலனு இருந்தாப் போதும். குக்கரும் வைக்கமாட்டீங்களா? ரங்ஸ் எதுக்கு இருக்கார்? வஸ்த்ரகலா கிடைக்காத கோபத்தைக் காட்டினால், தன்னாலே வச்சுடுவார் குக்கரை.ஒரு தாம்பாளத்தில் அதைக் கொட்டிச் சுடச் சுட இருக்கும்போதே நெய்யையும் ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து கொள்ளவும். வேறொரு கடாயில் நெய் விட்டு அதில் ஒரு டீஸ்பூனுக்குக் குறையாமல் மிளகு போட்டு, இரண்டு டீஸ்பூன் ஜீரகமும் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை அம்மி இருந்தால் நல்லது அல்லது மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். நெய்விட்டுக் கலந்த சாதத்தில் இதைப் போட்டுக் கிளறி வைக்கவும். இதற்குத் தொட்டுக்கத் தான் கத்தரிக்காய் கொத்சு.



நல்ல கத்தரிக்காயாக அரை கிலோவுக்குக் குறையாமல் வாங்கிக்கணும். பொதுவாய் கொத்சுக்குக் கத்தரிக்காய் வாங்கினால் பெரிய கத்தரிக்காய் வாங்கிச் சுட்டுத் தான் கொத்சு பண்றது வழக்கம். ஆனால் சிதம்பரம் கொத்சில் அப்படி இல்லை என்பதே அதன் தனித் தன்மை. கத்தரிக்காயை நாலாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கத்தரிக்காயை வதக்க வேண்டும். சுருள வதக்க வேண்டும். சுருள வதங்கின கத்தரிக்காயை ஒரு மத்தினால் மசிக்கவேண்டும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம் நன்கு வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.



எலுமிச்சம்பழ அளவுப் புளியை எடுத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். உப்பு மட்டும் சேர்க்கவேண்டும், மஞ்சள் தூள்(தேவையானால்) சேர்க்கலாம். அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கருகப்பிலை தேவையானால் சேர்க்கலாம். தாளிதம் ஆனதும், மசித்த கத்தரிக்காயைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொண்டு அடுப்பில் கடாயில் உள்ள எண்ணெய்த் தாளிதத்தில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியைப் போடவும். உடனே இறக்கவும், கருகப்பிலை, கொத்துமல்லி அலங்காரங்கள் எல்லாம் உங்கள் விருப்பம். இது சம்பாசாதத்தோடு மட்டுமின்றி அரிசி உப்புமா, பொங்கல் போன்றவற்றோடும் சாப்பிடலாம். சிதம்பரம் கொத்சில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை, என்பதும் கையாலேயே மசிக்கவேண்டும் என்பதுமே அதன் தனித் தன்மையாக்கும்.

உங்களாலே மத்தாலே மசிக்கமுடியலையா? கவலையே படாதீங்க, உங்களுக்கு மசியாத ரங்ஸும் இருப்பாரா என்ன? அவரை மசிச்சுடுங்க, சேச்சே, மசிக்கச் சொல்லுங்க. உங்களை அவர் பக்கம் மசிய வைக்கிறதா நினைச்சுட்டு, (நினைப்புத் தானே, போனால் போகட்டும்) நல்லா மசிச்சுக் கொடுத்துடுவார். வர்ட்டா?? அடுத்துக் கண்டந்திப்பிலி ரசமும், பருப்புத் துவையலும். பத்தியமா சமைப்போமா?





வெங்காயம் சேர்க்கவேண்டுமென்றால் கத்தரிக்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் நன்கு வதக்கிக் கொண்டு அம்மியில் கொஞ்சம் கரகரப்பாகவே அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதைப் புளிக்கரைசலில் சேர்த்து மற்றதெல்லாம் மேற்சொன்ன மாதிரியே தான். கும்பகோணம் பக்கம் கல்யாணங்களில் இன்றும் இந்த கத்தரிக்காய், வெங்காயம் சேர்த்த சிதம்பரம் கொத்சு மூன்று நாட்களில் ஒரு நாள் காலை டிபனுக்குக் கொடுப்பார்கள். பல கல்யாணங்களிலும் சாப்பிட்டது தான். இன்னும் சிதம்பரம் தீக்ஷிதர்கள் வீட்டில் சாப்பிடலை, அதுவும் சாப்பிட்டுடணும்.

13 comments:

  1. சம்பா சாதம் நல்ல வேளை முழிச்சு பாக்கற red rice இல்ல!! மிளகு ஜீரகமா? interesting. ஏன் தீக்ஷதருக்கு special?
    கொத்ச்!! ம்.. நாம்ப செய்யறது தான். ஆ..கண்டந்திப்பிலி ரசம்!! Again ... இங்க கிடைக்காது:(((

    ReplyDelete
  2. அட ராமா.... இது சிதம்பர(ரகசிய) கொத்சுன்னு தெரியாமலேயே ரொம்ப வருஷமா இதே முறையில் செஞ்சுக்கிட்டு இருக்கேனே!!!!

    எங்கூர்லே கத்தரிக்கா வாங்கிட்டு அதை ஃப்ரீஸ் பண்ணி வைக்கன்னு எண்ணெயில் நல்லா வதக்கிட்டுச் சின்னச் சின்ன அளவு எடுத்துப் ப்ரீஸ் பண்ணிக்குவேன்.

    தேவையானப்ப ஒரு பொட்டலம் எடுத்து ப்ளெண்டர்லே போட்டு மசிச்சுட்டு மத்ததெல்லாம் நீங்க சொன்னது போல்!

    சம்பா சாதம்தான் இன்னும் பண்ணலை. செஞ்சுருவோம்!


    நன்றி கீதா.

    ReplyDelete
  3. ஹிஹிஹி, வாங்க துளசி, என்ன இருந்தாலும் ரங்ஸ் செய்த கொத்சுனு போட்டதும் வரத் தோணிருச்சு பாருங்க! :P

    ReplyDelete
  4. ஏன் தீக்ஷிதருக்கு ஸ்பெஷல்?? எல்லாரும் கேட்டிருக்காங்க, தீக்ஷிதரையே கேட்டுடறேனே ஜெயஸ்ரீ. கொஞ்சம் பொறுங்க.

    அதுசரி, துளசி, நம்பிக்கையிலே பார்க்கலை, கொத்சு, கண்டந்திப்பிலி ரசம் இரண்டும்??? ஆன்மீகம் மட்டும் பார்ப்பீங்க போல! நாங்க கத்திரிக்காய் கொத்சிலும், கண்டந்திப்பிலி ரசத்திலும் ஆன்மீகத்தைப் பார்த்துட்டோமில்ல! :))))))))

    ReplyDelete
  5. i tried this. samba sadham was excellent. so was kotsu. but i think they do not go well together. with pongal gotsu will be great. otherwise both were tasting great. thanks for the recipe.

    ReplyDelete
  6. தீக்ஷிதர் தெரிந்தவரா?

    சின்ன எலுமிச்சை அளவு புளியா? பெரிய எலுமிச்சை அளவா? :)))

    மிளகாய் வற்றல் ஒரு நான்கைந்து போதுமா? தனியா, வ்ன்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு?

    குறித்து வைத்துக் கொண்டுள்ளேன். மிளகுபொடி சாதம் என்று நாங்கள் சாப்பிடுவோம். இது அதற்குத் தொட்டுக் கொள்ளவா? நாங்கள் சாதாரணமாக இதை வெண்பொங்கலுக்கு மட்டுமே செய்து வழக்கம்!


    ReplyDelete
    Replies
    1. எலுமிச்சை அளவுன்னா மீடியம் சைஸ் தான்! மி.வத்தல் அவங்க, அவங்க காரத்துக்கு ஏற்றாற்போல் போட்டுக்கலாம். தனியா ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு. (நான் பெருங்காயம் போடுவேன். அங்கே கோயிலுக்குச் செய்வதால் பெருங்காயம் சேர்ப்பதில்லை)

      Delete
  7. தீக்ஷிதர் கிட்டத்தட்ட குரு. நம்ம ரங்க்ஸ் அங்கே தானே ஆறுமுக நாவலர் பள்ளியில் படிச்சவர். அப்போதிலிருந்தே பழக்கம். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகக் கட்டளை இருக்கு எங்களுக்கு. இப்போ பையர், பொண்ணு எல்லோருக்குமே கட்டளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கோம். ஆகவே போனால் அங்கேயே தங்கிக்கலாம் தான்! சாப்பாடு, காஃபி உட்படக் கொடுப்பாங்க. ஆனால் எப்போவானும் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோம். ஹோட்டலில் தங்கிப்போம். அவங்களே அறை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துடுவாங்க. :)))))

    ReplyDelete
    Replies
    1. புளியஞ்சாதமும் கோயில் மாதிரி வேணும்னா புளியைக் கெட்டியாகக் கரைத்து உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவிட்டுப் பேஸ்ட் மாதிரி எடுத்துக்கணும் . சாதத்தைப் பொல பொலவென வடித்துக் கொண்டு, நல்லெண்ணெய், உப்புச் சேர்த்துக் கலக்கணும். உப்பு சாதத்துக்குத் தேவையானது மட்டுமே சேர்க்கவும். சமைத்த சாதம் 2 கிண்ணம் என்றால் ஒரு டீஸ்பூன் மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அதைப் போட்டுக் கலந்து கொண்டு புளிப் பேஸ்டையும் தேவையான அளவு போட்டுக் கலக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு இதில் சேர்க்கவும். வேர்க்கடலை தேவை எனில் போடலாம். கோயில் பிரசாதத்தில் போடுவதில்லை. நன்கு கலந்து கொண்டு பின் பரிமாறவும்.மி.வத்தலோ, பெருங்காயமோ இதில் போடக் கூடாது. :))))

      Delete
  8. இதையும் குறித்துக் கொண்டேன். :)))

    ReplyDelete
    Replies
    1. பெரிசா எல்லாவற்றையும் குறித்துக் கொண்டதோடு சரி!!! ஆச்சு ஆறு வருஷம்!

      Delete
    2. இன்று இந்தக் கொத்ஸு செய்து ருசித்தோம்.

      Delete
    3. நான் நேற்றுப் பொங்கலுக்கு இந்த கொத்சு செய்தேன்.

      Delete