இந்தப் பக்கத்திலே தினம் தினம் பதிவு வரவில்லை என நெல்லைத் தமிழரும் ஜேகே அண்ணாவும் சொல்கின்றனர். தினமெல்லாம் எழுதுவது இப்போதைய நிலைமையில் எனக்குச் சிரமம்.நேரம் கிடைக்கும் போது எழுதினாலே பெரிய விஷயம்! அதோடு நெல்லைத் தமிழரே எல்லாவற்றுக்கும் படங்கள் எதிர்பார்க்கிறார். காலை வேளையில் நான் சமைக்கும்போது நினைவாகப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்க முடியுமா? முதல்லே நினைவே வராது. என்னிக்காவது நினைவு வந்தால் அன்னிக்குப் படம் எடுக்கிறேன். ஆகவே எழுதுவதில் இருக்கும் வசதி படங்கள் எடுப்பதில் இல்லை. இந்தக் கடந்த வாரங்களில் படம் எடுக்கும்படியான சூழ்நிலையோ, சமையலோ அமையவில்லை. ஆகவே இன்னும் சில பொடிவகைகளை முதலில் பார்ப்போம்.அரைத்து விட்ட சாம்பாருக்கு இன்னமும் நேரம் வரவில்லை. வரும்போது நான்படமும் எடுத்தாகணும்! படிக்கிறவங்க படிக்கட்டும்; இன்னும் விரிவாகத் தேவைப்படுபவர்களுக்கு ஏமாற்றம் வந்தால் என்ன செய்ய முடியும்!
இப்போது இன்னும் சில பொடி வகைகள்:- இவற்றைச் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். என்னிக்கானும் சாம்பார் வைக்கவில்லை என்றாலோ அல்லது மற்றக் குழம்புகளும் தேவை இல்லை என்றாலோ இதைப் போட்டுச் சாப்பிட்டுக்கலாம். முதலில் பருப்புப் பொடி.
பருப்புப் பொடி: தேவையான பொருட்கள். முக்கியமாய்த் துவரம்பருப்பு. சிலர் பாதி அளவுக்குக் கடலைப்பருப்பும் சேர்க்கின்றனர். இது அவரவர் வசதிக்கு ஏற்ப!
நான் துவரம்பருப்பு மட்டுமே சேர்ப்பேன்.
ஒரு கிண்ணம் துவரம்பருப்பு எனில் நான்கு அல்லது ஐந்து மிளகாய் வற்றல்கள், பெருங்காயத் துண்டு, மிளகு இரண்டு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. கருகப்பிலை விருப்பம் இருந்தால்.
எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு (உப்பையும் வறுக்கலாம்.) ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். இதைச் சூடான சாதத்தில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடலாம்.
இதையே அரைக்கிண்ணம் துவரம்பருப்பு+அரைக்கிண்ணம் கடலைப்பருப்புச் சேர்த்தும் பண்ணலாம். இதில் கடலைப்பருப்புப் பருப்புப் பொடியின் காரத்தைக் குறைக்கும்.
அடுத்துக் கொத்துமல்லிப் பொடி அல்லது தனியாப்பொடி
கொத்துமல்லி விதை ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்
மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை எனில் பத்து வேண்டும்.
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் விரும்பினால் அல்லது பொடிக்கையில் பவுடரைச் சேர்த்துக்கலாம்.
மிளகு இரண்டு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு. இதில் கொஞ்சம் போல் புளியையும் நன்கு காய்ந்ததாக எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் போட்டுப் பிரட்டிப் பின்னர் பொடி செய்கையில் சேர்த்துப் பொடி பண்ணினால் அதன் ருசி தனியாக இருக்கும்.
கருகப்பிலைப் பொடி
கருகப்பிலைப் பொடி! கருகப்பிலை சுமார் 100 கிராம். நன்கு காய வைக்கவும்.
மி.வத்தல் 5 அல்லது ஆறு
உப்பு,
ஓமம் அல்லது பெருங்காயம் அல்லது இரண்டுமே.
ஓமம் இரண்டு டேபிள் ஸ்பூன் வரை போடலாம். ஒரு சிலருக்கு அந்தக் காரம் ஒத்துக்கொள்ளாது. அப்போது ஓமம் போடாமல் உளுத்தம்பருப்பு, மிளகு வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு மொறுமொறுவென வறுக்கப்பட்ட கருகப்பிலையுடன் சேர்த்துப் பொடிக்கவும். இதை மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
படங்களுக்கு நன்றி கூகிளார்.

பருப்புப்பொடி ஆதியிலிருந்தே எனக்குப் பிடிக்காது. கரிவேப்பிலைப்பொடி எப்போதாவது போட்டுக்கொள்வதுண்டு!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், நாங்க இதெல்லாம் தாத்தா வீட்டில் அல்லது பெரியப்பா வீட்டில் தான் சாப்பிட்டிருக்கோம். எங்க அப்பாவுக்குப் பிடிக்காது. அதோடு இதெல்லாம் எண்ணெய்/நெய் தேவைப்படும் சமாசாரங்கள்! ஆகவே இதெல்லாம் எங்க வீட்டில் கிடையவே கிடையாது. எங்க மாமியார் வீட்டில் இதெல்லாம் ஏழைகளுக்கான சாப்பாடு! இதெல்லாம் சாப்பிட்டால் அவங்களுக்குச் சிரிப்பு வரும்! :))))) எல்லாம் நேர்மாறாக இருக்கும்.
Deleteபருப்புப் பொடி, எள்ளுப் பொடி ஆகியவை செய்து வைத்துக் கொண்டால் கொஞ்சம் வசதி. நேரம் இல்லாதபோது விரைவாக ஒரு சாதம் மட்டும் வைத்துக் கொண்டு பொடியுடன் சாப்பிடலாம். நான் இங்கே செய்வதில்லை. முன்பெல்லாம் ஊரிலிருந்து எடுத்துக் கொண்டு வருவேன். இப்போது எடுத்து வருவதும் இல்லை, செய்வதும் இல்லை. சாப்பிடுவதும் இல்லை!
ReplyDeleteகருவேப்பிலைப் பொடி - எனக்குப் பிடித்த பொடி...
கருகப்பிலைப் பொடி மோர் சாதத்துக்கு நன்றாக இருக்கும் வெங்கட். பருப்புப் பொடி செய்தது எங்க வீட்டில் இன்னமும் இருக்கு! இதெல்லாம் எங்க வீட்டில் இப்போ சீசனல் உணவு! :)))) எள்ளுப் பொடி சனிக்கிழமைகளில் எப்போதேனும் பண்ணுவது உண்டு.
Delete'தனியா' (separateஆ) எங்கே அழகுக் குறிப்புகள் கொடுத்திருக்கீங்க படத்தில் சொல்லியுள்ளதுபோல?
ReplyDeleteஅதான் படத்திலே போட்டிருக்குனு சொல்லிட்டீங்களே நெல்லைத்தமிழரே!
Deleteபருப்புப் பொடியோ இல்லை மற்ற பொடி சாதங்களோ எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏதோ பஞ்சை வைத்து அடைத்த மாதிரி இருக்கும். அப்படி ஒருவேளை சாப்பிட நேர்ந்துவிட்டால், கூட்டு இல்லாமல் சாப்பிடமாட்டேன்.
ReplyDeleteஎங்க இரண்டு பேருக்கும் பொடி சாதம் எனில் நான் தனியாக டாங்கர் பச்சடி, அல்லது பச்சை மோர்க்குழம்பு அல்லது வெள்ளரிக்காய்ப் பச்சடினு பண்ணிடுவேன். கூட்டு அல்லது கறி எதுவானாலும் தொட்டுப்போம். சில சமயங்களில் அப்பளம், வடாமோடு நிறுத்துவதும் உண்டு.
Deleteஎல்லாவற்றிர்க்கும் படங்கள் போடணும்னு இல்லை. செய்முறையை தெளிவா எழுதினாலே போதும் (இப்போது எழுதுவது போல). நான் நீங்கள் எழுதுபவைகளைச் செய்துபார்க்கிறேன் (சிறிய அளவில்)
ReplyDeleteசெய்முறையை எப்போதுமே தெளிவாகவே எழுதி வருகிறேன். புரிஞ்சுக்கறது அவரவர் சௌகரியம்! :)
Delete// அல்லது பொடிக்கையில் பவுடரைச் சேர்த்துக்கலாம்.// - கட்டிப் பெருங்காயத்தை வறுத்துக்கொண்டு, பொடி பண்ணும்போது சேர்த்தால் இன்னும் வாசனையாக இருக்கும் (பெருங்காயப்பொடியைச் சேர்ப்பதைவிட)
ReplyDeleteஇப்போதெல்லாம் கட்டிப் பெருங்காயம் பயன்படுத்துவோர் அதிலும் பெருங்காயம் பயன்படுத்துவோர் குறைவு!
Delete