எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 5, 2019

ஊறுகாய்ப் பருவம் வந்தாச்சா?

மஞ்சளில் ஒரு ஊறுகாய் 1 மாங்காய் இஞ்சி 2
இந்தச் சுட்டிகளில் முந்தைய செய்முறைகளைப் பார்க்கலாம். அவ்வப்போது சேர்க்கும் பொருட்களுக்கு ஏற்பக் கொஞ்சம் மாறலாம்.
ஏற்கெனவே இரு முறை இந்த ஊறுகாய் செய்முறை பார்த்தாச்சு. இந்த முறையும் பண்ணினேன். அதில் படங்கள் அதிகம் எடுத்தேன். கூடியவரை எடுத்த படங்களைச் சேர்க்கிறேன். ஊறுகாய் செய்முறை:

பச்சை மஞ்சள், பொங்கலுக்கு வாங்கியதிலே இருப்பதே போதும்.

இஞ்சி 50 கிராம். அதுவே ஜாஸ்தி. ரொம்பக் காரம் வேண்டாம்

பச்சை மிளகாய் குட்டையான நாட்டு மிளகாய் எனில் ஓர் 5 ரூக்குக் கொடுப்பது போதும். நீளமான மிளகாய் எனில் 5 அல்லது 6 எண்ணிக்கைகள். மூன்றாக வகிரலாம்.

மாங்காய் இங்கே கிடைக்கிறது. நான் ஒரு கால் மாங்காய் தான் எடுத்துக் கொண்டேன்.

எலுமிச்சை நல்ல சாறு உள்ள பழமாக ஐந்து அல்லது ஆறு. மூன்று பழங்களின் சாறைப் பிழிந்து கொள்ளவும். அதிலே ஊற வைக்க வசதியாக இருக்கும். மற்றப்பழங்களை நறுக்கி அப்படியே சேர்க்கலாம். சாறு பிழிந்த பழங்களின் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

பச்சைப்பட்டாணி ஒரு கைப்பிடி. இந்த வருஷம் மலிவாக் கிடைச்சதால் ஒரு கிலோ வாங்கி உரிச்சு ஃப்ரீசரில் வைச்சிருக்கேன். அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்.

வேர்க்கடலை பச்சையாக ஒரு கைப்பிடி. இவை தேவைனா போடலாம். அதே போல் காரட்டும் தேவை எனில் சேர்க்கலாம். காரட் என்னிடம் இருக்கு என்றாலும் நான் சேர்க்கவில்லை. மாங்காய் இஞ்சி கிடைத்தால் அது ஓர் ஐம்பது கிராம். நான் இம்முறை வாங்கவில்லை.

எலுமிச்சை, அதிலேயே கொஞ்சம் மாங்காய்த் துண்டுகளும் இருக்கு.  பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் நறுக்கியவை.

பெருங்காயப்பொடி, மிளகாய்ப்பொடி, வறுத்த ஜீரகப்பொடி, பின்னால் கடுகு, வெந்தயப்பொடி




கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இருக்கேன். ஊறுகாயைப் பச்சையாகவே போடலாம் என்றாலும் இம்முறை பச்சைமிளகாய், மஞ்சள், இஞ்சி போன்றவற்றை மட்டும் வதக்கிக்கலாம் என எண்ணெய் வைச்சிருக்கேன். மற்றவற்றைப் பச்சையாகச் சேர்க்கலாம். 


பச்சை மிளகாய் வதங்குகிறது.


மஞ்சள் வதங்குகிறது


இஞ்சி வதங்குகிறது.


எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி இருக்கேன். வேர்க்கடலை படம் எடுக்க மறந்து போச்சு. ஆகையால் அதைக் கலக்கும் முன்னர் படம் எடுத்திருக்கேன். மேலே கடுகு,வெந்தயப்பொடியும், மஞ்சள் பொடியும் உப்பு, சர்க்கரையும் சேர்த்திருக்கேன்.  பச்சைப்பட்டாணியும் சேர்த்தேன்.





மாங்காய்த் துண்டங்கள் இதிலே தெரிகின்றன. மிளகாய்ப் பொடி தேவையான அளவுக்குச் சேர்க்கணும். சர்க்கரை இரண்டு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் இந்த அளவுக்குச் சேர்க்கலாம். ஜீரகம் வறுத்த பொடியும் சேர்க்கலாம்.


எல்லாவற்றையும் போட்டுக் கலந்திருக்கேன்.


மேலே பச்சை நல்லெண்ணெய் ஊற்றினேன். கடுகு எண்ணெய் வட மாநிலங்களில் விடுவார்கள். இதை ஒரு வாரம் வரை வெளியே வைத்திருந்து கிளறிவிட்டுப் பின்னர் கட்டாயமாய் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தணும். அல்லது வினிகர் விட்டால் வெளியே வைக்கலாம். வினிகர் ருசி எங்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகையால் விடுவதில்லை. White cooking Vinegar என்று கேட்டு வாங்கவும். எங்க பெண் வீட்டில் வினிகர் சேர்ப்பார்கள். சீக்கிரம் செலவு செய்து விடுவேன். ஆகையால் தேவைப்படும்போது  வினிகர் சேர்க்காமலேயே கொஞ்சமாகப் போட்டுக்கலாம். 


19 comments:

  1. படத்தோட ரொம்ப அழகா வெளியிட்டிருக்கீங்க. பார்க்க அழகா இருக்கு.

    எனக்கு எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களைத் தவிர வேறு எதிலும் விருப்பம் இருந்ததில்லை. ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ஏற்பாடாகப் படம் எடுக்கணும்னு நினைவு வைச்சுட்டு எடுத்தால் தான் உண்டு. எனக்குப் பெரும்பாலும் சமையல் செய்கையில் கவனம் அதிலே தான் இருக்கும். படம் எடுக்கணும்னு தோணாது. முடிச்சப்புறமோ அல்லது பாதியிலேயோ நினைச்சுப்பேன். இம்முறை நறுக்கும்போதே படங்கள் எடுத்து வைச்சுட்டேன். :)))) நாம என்ன ஷோவா நடத்தறோம்னு ஒரு எண்ணம் அவ்வப்போது வரும்.

      Delete
    2. கீசா மேடம்... என் மனைவி அல்லது பெண் ஏதேனும் ஸ்பெஷலா செய்தா, ஏன் என்கிட்ட சொல்லலை, படங்கள் எடுத்து எ.பிக்கு அனுப்புவேனே என்று சொல்வேன்.

      ஓரிரு வாரங்களுக்கு முன்பு என் பெண் பாவ் பாஜி செய்தாள். என் மனைவி கத்தரி உபயோகப்படுத்தி ஒரு சாதம் செய்தாள் (ரொம்ப நல்லா இருந்தது). ஆனால் அதை என் பெண்ணின் டிபன் பாக்சுக்கு காலை 5 மணிக்கு அவசர அவசரமாகச் செய்ததால் படமும் எடுக்கலை, உங்களையும் எழுப்பலைன்னுட்டா.

      Delete
  2. இதேதான் தில்லியில் அப்போ என் நாத்தனார் இருந்ததால் அவரிடம் கற்றேன். இதே போன்றுதான் செய்திருந்தார். நானும் அப்படிச் செய்தேன் ஆனால் ப பட்டாணி மட்டும் சேர்க்கலை. அவங்க கொண்டைக் கடலை சேர்த்திருந்தாங்க. நானும் சேர்த்துச் செஞ்சுருக்கேன். அப்புறம் மற்றொரு வட இந்திய குடும்பம் என் கஸினின் வீட்டருகில் குர்காவ்னில் அவங்களும் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்க ஆனால் நீங்க சொல்லிருக்காப்ல கடுகு என்ணை விட்டாங்க. நான் நல்லெண்ணைதான்.

    இந்த வருடம் ஊறுகாய் போடலை மஞ்சளும் அதிகம் இல்லை இங்கு. சென்னையில் போன வருடம் செஞ்சேன்.. மஞ்சள் ஊறுகாய் மா இஞ்சியும், வீட்டில் காய்த்த மாங்காயும் சேர்த்து. அதிகம் காரம் இல்லாமல் மாமியாருக்காக. நம் வீட்டில் நானும் மகனும் தான் ஊறுகாய் அதுவும் எப்போதேனும் பயன்படுத்துவதால் மகனும் இப்ப இங்கு இல்லை என்பதால் மச்சினர் புகுந்த வீட்டில் யாராவது கேட்டால் அவர்களுக்குத்தான் போட்டுக் கொடுப்பது என்றாகிவிட்டது.

    ப பட்டாணி சேர்ப்பதும் இப்ப தெரிந்து கொண்டேன். உங்கள் குறிப்பையும் நோட் செய்து கொண்டுவிட்டேன். நல்லாருக்கு அக்கா நீங்க செஞ்சுருக்கறது. பார்க்கவே யம்மியா இருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, வடக்கே காலிஃப்ளவர், நூல்கோல், பச்சைப்பட்டாணி, இன்னும் சில ஆங்கிலக்காய்கள் சேர்த்துப் பூண்டு போட்டு வெஜிடபுள் ஊறுகாய்னு செய்வாங்க. நம்ம வீட்டில் அது போணி ஆகாது. குழந்தைகள் இருக்கறப்போப் பூண்டு சேர்க்காமல் பண்ணுவேன். காலிஃப்ளவர் கிடைக்காத நாட்களில் அதைப் பயன்படுத்தவும் பதப்படுத்தி வெயிலில் காய வைத்து வைக்கிறாங்க. ஆனால் எனக்கு என்னமோ அதில் ஒரு வாசனை வராப்போல் தோணும். பச்சைப்பட்டாணியை வெறும் மாங்காய் ஊறுகாயில் கூடச் சேர்க்கலாம். நான் பச்சை வேர்க்கடலையும் சேர்த்திருக்கேன். கொண்டைக்கடலை ஆவக்காயில் போடுவது உண்டு. நான் நன்கு களைந்து காய வைச்சுச் சேர்ப்பேன். என் நாத்தனார் அப்படியே சேர்ப்பார்கள். முக்கியமாய் ஆலு பரான்டா, மூலி பரான்டா, மேதி பரான்டா போன்றவற்றிறும் தேப்லா போன்றவற்றிற்கும் காய்கள் ஏதும் பண்ணாமல் இதைத் தொட்டுக்கொண்டே சாப்பிடலாம்.

      Delete
  3. இப்படி எல்லாம் செய்ததே இல்லை...
    செய்முறை விளக்கம் அட்டகாசம்... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. நான் பெரும்பாலும் கொஞ்சமாய் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவுக்கே செய்துப்பேன். பெரிய அளவில் எங்க பொண்ணுக்குச் செய்து கொடுப்பேன். அங்கே குழந்தைகள், மாப்பிள்ளை ஆகியோருக்குப் பிடிக்கும். செலவாகும். நீங்களும் இப்போக் காய்கள் பருவம் என்பதால் உங்க மனைவியிடம் சொல்லிச் செய்து பார்க்கச் சொல்லுங்க.

      Delete
  4. பச்சைப்பட்டாணி ப்ரீசரில் வைத்து எவ்வளவு நாள் உபயோகிக்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வடக்கே எல்லாம் ஆறு மாசம் வீணாகாதுனு வைக்கிறாங்க. நான் 2 மாதத்துக்குள் செலவு செய்துடுவேன். ஆகவே உங்கள் வசதிப்படி செய்யவும். கோயில்களுக்குப் போயிட்டு வரும்போது கிடைக்கும் தேங்காய் மூடிகளைக் கூட நன்கு துருவி ஃப்ரீசரில் வைத்துடுவேன். 2 மாதங்களுக்குள்ளாகச் செலவு செய்துடுவேன். தேங்காய்ச் சேவை, தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பொடினு செய்யலாம். தேங்காய்ப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தேங்காய்த் துவையல் செய்யாமல் அதையே பயன்படுத்திக்கலாம்.

      Delete
  5. சாப்பிட வாங்க பகுதிஇந்தமுறை அழகாய் வந்திருக்கிறது. படிப்படியாய் படங்களுடன் நன்றாய் வெளி இட்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் திங்கறகிழமைக்கு ரெசிப்பி அனுப்பி நாட்களாச்சுன்னு ஞாபகப்படுத்த விரும்பறேன்!

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி, நேரம் கிடைக்கணும் ஸ்ரீராம். பல நேரம் சமையல் செய்யும்போது தான் அல்லது குளிக்கப் போனதும் தொலைபேசி அழைப்பு வரும் வாசலில் யாரானும் கூப்பிடுவாங்க.இப்படித் தொல்லைகள் இருக்கையில் படம் எடுப்பதெல்லாம் நினைவிலேயே வராது. :))))) சில சமயங்களில் அடுப்பில் ஈயச்செம்பு வைக்கையில் யாரானும் கூப்பிடுவாங்க! அடுப்பை அணைச்சுட்டு வந்துடுவேன். :)

      Delete
    2. உங்கள் "திங்க"ற கிழமைக்கு ஸ்லாட் கிடைப்பதில்லை என்பதால் தான் அனுப்பறதில்லை. பார்க்கிறேன். இன்னும் 2,3 இருக்குனு நினைவு.

      Delete
    3. ஸ்ரீராம் எதுக்கு ஸ்லாட் தரணும். நான் தர்றேன். பிடிங்க. ஏப்ரல் 15, 22, 29 மூன்று தேதிகளும் உங்களுக்குத்தான். உடனே மூணு எழுதி அனுப்புங்க.

      Delete
  6. வினிகர் சேர்த்தால் எனக்கும் பிடிப்பதில்லை. நேற்று கோயம்புத்தூரிலிருந்து மாமா மாகாளி ஊறுகாய் வாங்கி வந்தார். மாகாளியில் வினிகர் போட்டு கெடுத்து வைத்திருந்தார்கள்.

    ReplyDelete
  7. ஹையோ, ஸ்ரீராம், மாகாணிக்கிழங்குக்கெல்லாம் வினிகரா? அது இல்லாமலேயே வெளியே வைத்தால் கெட்டே போகாது. வருடக்கணக்கில் வைத்திருக்கலாம். நல்ல கெட்டித் தயிர், இஞ்சி, எலுமிச்சம்பழம் எல்லாம் போட்டுப் பச்சைமிளகாயும் அரைத்து விட்டால் போதும். எனக்கு முன்னெல்லாம் ரொம்பப் பிடிக்கும். பைல்ஸ் வந்து கஷ்டப்பட்டப்போ அதைச் சாப்பிட்டாலே பிரச்னை வரும். ஆகவே விட்டுட்டேன். இப்போல்லாம் கிட்டேக்கூடப் போறதில்லை. வத்தல் குழம்பு சாதத்தோடு சாப்பிட ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  8. இதை அச்சாறு /அச்சார் என்று வட இந்தியர் சொல்றாங்கக்கா இங்கே .இதில் பிரென்ச் பீன்ஸ் அப்புறம் பப்பாளிக்கா இன்னொரு காய் gumberry, லசூடா அதும் சேர்க்கிறாங்க ஆனா எனக்குதான் வினிகர் சுவை விருப்பமில்லாததால் பிடிப்பதில்லை
    .இந்த மஞ்சளை ஒரு குஜராத்தி தோழி வெறுமனே வெட்டி லைம் ஜூஸில் ஊறவைத்து பிரிஜ்ஜில் உப்பு சேர்த்து வைத்து சாப்பிட சொன்னார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், ஊறுகாய்க்கு இந்தியில் அசார் தான் பெயர். பீன்ஸெல்லாமும் போடலாம். வெஜிடபுள் ஊறுகாயில் எல்லாமும் போடலாம். இது மஞ்சளை வீணாக்காமல் வயிற்றுக்குத் தள்ளினால் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும் என்பதற்காகப் போடுவேன். வெறும் மஞ்சளை எலுமிச்சைச்சாறில் ஊறவைத்து உப்பு, மி.பொடி அல்லது மிளகு பொடி சேர்த்தும் சாப்பிடலாம். இஞ்சி குருத்தாக இருந்தாலும் அப்படிச் செய்து சாப்பிடுவது உண்டு. காரட், இஞ்சியையும் அடிக்கடி எலுமிச்சைச்சாறில் ஊற வைச்சுச் சாப்பிடுவோம்.

      Delete
  9. வண்ண மயமாக இருக்கிறது ஊறுகாய்.
    இங்கே மஞ்சள் ஏகமாகக் கிடைக்கிறது. வாசனை கூட இருக்கிறது. நான் இஞ்சி
    மஞ்சள்,எலுமிச்சை மட்டும் கலந்து வைத்தேன். மிளகுப் பொடி காரத்துக்கு.
    கச்சிதமான படங்களுடன் நல்ல் பதிவு கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. நீங்க சொல்லும் விதத்தில் போட்டு உடனே தொட்டுக்கொள்ளலாம். குருத்து இஞ்சி கிடைக்கையில் நானும் பண்ணுவேன்.

      Delete