எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, December 26, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாவின் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. புதினாவே சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். நான் கல்யாணமாகி வந்ததும் மாமியார் வீட்டில் புதினாத் துகையல், சட்னி பற்றிச் சொன்னப்போ அவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! அதென்ன கீரை? அதைச் சாப்பிடுவாங்களானு கேட்டாங்க! நம்ம ரங்க்ஸும் எட்டு வருடத்துக்குப் புனேயில் குடித்தனம் பண்ணினாலும் புதினா ஜாஸ்தி சாப்பிட மாட்டார்! அப்புறமாச் சாப்பிட ஆரம்பிச்சதும் ஒத்துக்காமல் நெஞ்செரிச்சல் வர ஆரம்பிச்சது! ஆகவே இப்போவும் புதினா வாங்கினால் நான் மட்டும் தான்!

ஊட்டியில் தோட்டத்தில் புதினா படர்ந்து இருக்கும். அவ்வப்போது பறித்துக் கொள்வேன். வடமாநிலத்தவர் செய்யும் பஜியாவுக்குப் புதினா சேர்த்தால் மணம்! சப்பாத்திக்குச் செய்யும் உ.கி. குடைமிளகாய்க் கறியில் புதினா சேர்க்கலாம்.பச்சைப்பயறு சாதத்துக்கு வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களோடு வதக்குகையில் புதினாவையும், பச்சைக்கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் சாதம் மணமாக இருக்கும்.

வயிறு உப்புசமாக இருந்தால் புதினாவைக் கஷாயம் போட்டுக் குடிக்கலாம். நான் தனியா(கொத்துமல்லி விதை), இஞ்சி, சோம்பு ஆகியவற்றோடு புதினாவையும் சேர்த்து அரைத்துச் சாறெடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது அளவான சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் நீர் சேர்த்துக் குடிப்பேன். இது ஜீரணத்துக்கு நல்லது! பச்சைப் புதினவைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம், பல் கூச்சம் மறையும். வட மாநிலங்களில் செய்யும் சாட் வகையறாக்களுக்குப் புதினாச் சட்னி மிகச் சிறந்த ஜோடி!

புதினாச்சாறினால் உடல் பருமன் கூடக் குறையும் என்கின்றனர். ஆஸ்த்மா நோயாளிகளுக்குச் சளி, இருமல், மூக்கடைப்புப் போன்றவற்றிற்குப் புதினா மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.  நெஞ்செரிச்சல் தீரும் என்று சொன்னாலும் ஏற்கெனவே அசிடிடி உள்ளவர்களுக்குப் புதினா சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை என்றே தெரிகிறது.  வயிற்றுப் போக்கு, காலரா போன்றவற்றிற்கும் புதினா நல்ல மருந்து. தோல் பொலிவுறும்.
Image result for புதினா

தொடரும்!

6 comments:

  1. எனக்கென்னவோ புதினா வாசனையே பிடிப்பதில்லை. ஹஸ்பண்ட், பசங்க விரும்பிச் சாப்பிடுவாங்க. குனுக்குக்கு வெங்காயம் சேர்க்காமல், புதினா சேர்த்து ஹஸ்பண்ட் பண்ணுவா. நான் எப்போதும் இதனை சாப்பிடமாட்டேன்.

    நீங்க புதினாவை வைத்து என்ன என்ன செய்முறை சொல்லப்போறீங்க என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறையப் பேருக்குப் புதினா பிடிக்கிறதில்லை. ஆனால் உடம்புக்கு நல்லது.

      Delete
  2. புதினா பிடிக்காது என்று இல்லை என்றாலும், செய்யும்போது அதிகம் போட்டுக்கொள்ளத் தோன்றாது. பெரும்பாலும் புதினாத் துவையல்தான். அவ்வப்போது புதினா ரைஸ்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், புதினா ரைஸ் படம் பார்த்தேனே! :)

      Delete
  3. புதினா துவையல் எனக்குப் ப்டிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடிக்கும் வெங்கட்!

      Delete