எலுமிச்சை ரசம்: தேவையான பொருட்கள்.
நான்கு பேருக்கு
ஒரு நடுத்தர அளவிலான எலுமிச்சை ஒன்று
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்புக் குழைய வேக வைத்தது (மஞ்சள் பொடி சேர்த்து) அரைக்கிண்ணம்
தக்காளி (நாட்டுத் தக்காளி தான் நன்றாக இருக்கும்.) நடுத்தர அளவிலானது எனில் 2 அல்லது 3, பெரிது எனில் ஒன்று போதும். (இங்கே அம்பேரிக்காவில் தக்காளி ஒன்று ஆப்பிள் சைசுக்கு இருக்கு, ஆகவே பாதி தான் போடுவேன். நேத்தித் தான் எலுமிச்சை ரசம் வைச்சேன், படம் எடுக்கலை!)
பச்சை மிளகாய் காரம் அதிகம் இல்லை எனில் இரண்டு! காரம் அதிகம் இருந்தால் பாதி போதும்.
ரசப்பொடி ஒன்றரை டீஸ்பூன், மிளகு, ஜீரகப் பொடி அரை டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்
பொடி போடுவதற்கு பதிலாக மி.வத்தல், கொ.விதை, துபருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்துக் கொண்டு பொடி செய்து கீழே இறக்கும்போது போடலாம்.
உப்பு தேவைக்கு ஏற்ப
கருகப்பிலை(தேவையானால்) கொத்துமல்லி
தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, ஜீரகம்
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைத்துக் கொண்டு அதிலே தக்காளி,பச்சை மிளகாய், ரசப்பொடி, பெருங்காயம், உப்புச் சேர்த்துத் தேவையான அளவு நீர் விட்டுக் கொதிக்க விடவும். தக்காளி நன்கு குழைந்து உருத்தெரியாமல் ஆனதும். தேவைக்கு ஏற்ப ரசத்தை நீர் விட்டு விளாவவும். தக்காளியை முதலில் வேக வைத்துக் கொண்டு பின்னர் பருப்பு ஜலம் விட்டும் கொதிக்க விடலாம். அல்லது தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு அடித்துக் கொண்டு அந்தச் சாறோடு பருப்பு ஜலம் சேர்த்தும் பொடி, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடலாம்.
கருகப்பிலை, கொத்துமல்லியைக் கொதிக்கும்போதே போடப் பிடித்தால் போடலாம். அல்லது ரசம் விளாவிய பின்னர் போட்டு நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக் கொண்டு எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்ததும் ரசத்தைச் சூடு செய்யக் கூடாது.
எலுமிச்சைச் சாதம்
தேவையான பொருட்கள்
சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம்
எலுமிச்சை நல்ல சாறுள்ளது எனில் பெரிதாக ஒன்று போதும். இல்லை எனில் இரண்டு தேவை.
தாளிக்க நல்லெண்ணெயே இதற்கு நன்றாக இருக்கும்.
நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவை தாளிக்கலாம்.
பச்சைமிளகாய் அவரவர் காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது மூன்று.
கருகப்பிலை
பெருங்காயத் தூள்
மஞ்சள் பொடி
உப்பு தேவைக்கு.
சமைத்த சாதத்தில் எலுமிச்சைச்சாறு, உப்பு, நல்லெண்ணெய் அரைக்கரண்டி, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயைச் சூடு பண்ணித் தாளிக்கும் பொருட்களை வரிசையாகச் சேர்த்துக் கடைசியில் பச்சைமிளகாய், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு சாதத்தில் கொட்டிக் கலக்கவும். சற்று நேரம் எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின்பு பரிமாறவும்.
எலுமிச்சைச் சாதம்
தேவையான பொருட்கள்
சமைத்த சாதம் உதிர் உதிராக இரண்டு கிண்ணம்
எலுமிச்சை நல்ல சாறுள்ளது எனில் பெரிதாக ஒன்று போதும். இல்லை எனில் இரண்டு தேவை.
தாளிக்க நல்லெண்ணெயே இதற்கு நன்றாக இருக்கும்.
நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவை தாளிக்கலாம்.
பச்சைமிளகாய் அவரவர் காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது மூன்று.
கருகப்பிலை
பெருங்காயத் தூள்
மஞ்சள் பொடி
உப்பு தேவைக்கு.
சமைத்த சாதத்தில் எலுமிச்சைச்சாறு, உப்பு, நல்லெண்ணெய் அரைக்கரண்டி, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயைச் சூடு பண்ணித் தாளிக்கும் பொருட்களை வரிசையாகச் சேர்த்துக் கடைசியில் பச்சைமிளகாய், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு சாதத்தில் கொட்டிக் கலக்கவும். சற்று நேரம் எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின்பு பரிமாறவும்.
இந்த இரண்டும் பண்ணி ஏகப்பட்ட வாரங்களாகிவிட்டன. இந்த வாரம் பண்ணுகிறேன். (நீங்கள் சொல்லிய அளவு எண்ணெய் விடாமல்)
ReplyDeleteஅடுத்த போஸ்ட் அனேகமா தக்காளி ரசமா? மீதி பாதி தக்காளி ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறீர்களே.
நல்லெண்ணெய் சாதத்தில் விட்டுக் கலக்கத் தேவைப்படும். அதோடு இது நான்கு பேருக்கான அளவு! :) குழிக்கரண்டி என்றால் பெரிசா இருக்கணும்னு அர்த்தம் இல்லை! :)
Deleteகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கிற தக்காளியைச் சாயந்திரம் சப்பாத்திக் கூட்டுக்கோ அல்லது மறுநாள் ரசத்துக்கோ பயன்படுத்திடுவேன். பச்சைமிளகாயும் அப்படியே! :)
Deleteநாட்டுத்தக்காளியை டைவர்ஸ் செய்து ரொம்ப நாட்களாகி விட்டன. கல் அடைப்பு வந்தபோது டாக்டர் இதை கைவிட்டு பெங்களூரு தக்காளி உபயோகிக்கச் சொன்னார்!
ReplyDelete//பச்சை மிளகாய் காரம் அதிகம் இல்லை எனில் இரண்டு! காரம் அதிகம் இருந்தால் பாதி போதும்.//
இதை எப்படிக் கண்டுபிடிக்க? கடித்துப் பார்த்து?!!!!
தனியாக ரசப்பொடி வைத்துக்கொள்ளும் வழக்கத்தையும் மறந்தாச்சு... ஒரே பொடிதான்!
நியூஸ் 7 இல் வந்த சித்த மருத்துவர் பெயர் நினைவில் இல்லை. மாலை நாலேமுக்காலுக்கு மருத்துவ சமையல் உள்பட எல்லாமும் சொல்வார். அவர் நாட்டுத் தக்காளியை தைரியமாகப் பயன்படுத்தலாம் என்று சொன்னார். நாட்டுத்தக்காளி தான் உடலுக்கு நல்லது என்றும் கல் அடைப்பு வந்தவர்கள் கூட தைரியமாகச் சாப்பிடலாம் என்றும் சொன்னார். பச்சை மிளகாய் வாங்கின உடனேயே ஏதேனும் சமையலில் போட மாட்டீங்களா என்ன? ரசத்துக்குனு தனியாவா போய் வாங்கிட்டு வருவீங்க? :))))))
Deleteரசப்பொடி தனியாச் செய்யலைனாப் பரவாயில்லை. செய்திருக்கும்பொடியிலேயே அரை ஸ்பூன் போட்டு விட்டு மிளகு, ஜீரகத்தைப் பச்சையாகப் பொடி செய்து இறக்கும் முன் தூவலாம். ரசம் கெட்டியாக இல்லாமல் ரசமாக (நீர்க்க) வரும். கைவசம் என்னிடம் இந்தப் பொடி இருக்கும். இல்லைனா துவரம்பருப்பு, மிளகு, ஜீரகம் வறுத்தோ பச்சையாகவோ பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம்.
Deleteஇங்கே, எலுமிச்சை சாதத்தை (மட்டும்) சித்ரான்னா என்கிறார்கள். முக்கிய உணவு வகைகளில் ஒன்று. பாதிப் பேர் வீட்டில், தொட்டுக் கொள்ள ஒன்றும் வைக்காமல், மதியத்துக்கு இதை மட்டும் செய்கிறார்கள் (எனக்கு காரக் கறி இல்லாட்டி சாம்பாராச்சும் வேணும் :))!). எலுமிச்சை ரசம், இந்த மாதிரி செய்ததில்ல. செஞ்சு பாக்கறேன்.. ரொம்ப நாளாச்சு வலைப்பூக்கள் பக்கம் வந்து. நிறைய விடுபட்ட போஸ்டெல்லாம் இருக்கு ஒண்ணொண்ணா படிக்கறேன்!..
ReplyDeleteநானும் மத்தியானச் சாப்பாட்டுக்கு எலுமிச்சை சாதம் செய்யறது உண்டு. என்ன செய்தாலும் ரசமும் வேணும்! :)
Deleteருசிகரமான ரசம். நானும் செய்வேன் ஆனால் பருப்புத்தண்ணீர் தக்காளி எல்லாம் இல்லாமல் :)
ReplyDeleteஎப்படினு சொல்லி இருக்கலாமே!
Delete