எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 20, 2013

ஆசாரமானவங்க இங்கே எட்டிப் பார்க்க வேண்டாம்! :)

வெங்காயக் கறிவடாம் போடப் போறோமே.  அதான் முன் ஜாக்கிரதையாச் சொல்லி வைச்சேன்.  இதுக்கும் அரிசி, ஜவ்வரிசி எல்லாம் முன் சொல்லப் பட்ட அளவிலேயே எடுத்து ஊற வைச்சு நல்லா நைசா அரைக்கணும்.

அரை கிலோ அரிசி, நூறு கிராம் ஜவ்வரிசி போட்டு அரைச்சிருந்தீங்கன்னா அதுக்கு அரைகிலோ சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் தேவை.  வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  ஐம்பது கிராமுக்குக் குறையாமல் பச்சை மிளகாயை உப்பு, பெருங்காயம் போட்டி நைசாக அரைக்கவும்.  எலுமிச்சம்பழம் ஒன்று.

மாவை முன்னர் சொன்னது போலவே வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரத்தில் கொட்டிக் கிளறி எடுத்துக் கொண்டு, பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு, பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.  நன்கு கலக்கவும்.

பின்னர் ப்ளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.  மொத்தமாக உருட்டாமல் பாதுஷாவுக்கு உருட்டுவது போல் நடுவே காயும்படியாகக் கொஞ்சம் தட்டையாகவே கிள்ளி வைக்கவும். இது சில சமயம் ஒரே நாளில் காய்ந்துவிட்டாற்போல் தெரிந்தாலும் உள்ளே ஈரம் இருக்கும்.  ஆகவே இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவேண்டும்.  இதை மாலை வேளையில் காபி, டீயோடு சாப்பிடவும் பொரித்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

வெங்காயம் தெரிய வேண்டாம் வாசனை போதும் என்பவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் மிக்சியில் போட்டு அடித்துக் கொண்டு மாவில் கொட்டிக் கலந்து கொண்டு உருட்டி வைக்கலாம்.  இதில் வெங்காயம் வெளியே தெரியாது.  ஆனால் வாசனையாக இருக்கும். அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.

8 comments:

  1. ஜவ்வரிசி இப்போது தான் வாங்கி வந்துள்ளார்கள்... (முந்தைய பதிவின் படி செய்ய) இதையும் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்கிறேன்...

    ஆனாலும் குறிப்புகள்.... கொஞ்சம் கவனமாத்தான் செய்யணும் போலே...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, அவ்வளவு கஷ்டமா இருக்கா? கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் செய்தால் சுலபமாக இருக்கும். சாதாரணமாய் நாம் காஃபி, டீ குடிக்கும் தம்ளரால் இரண்டு போட்டால் போதும். அதற்கு ஒரு கரண்டி ஜவ்வரிசி போதும்.

      Delete
  2. ஏங்க.. இந்த உருளினு சொன்னீங்களே, அதுல கொட்டிட்டு கிளறணுமா இல்லே கிளறிட்டுக் கொட்டணுமா.. இல்லே கேக்குறேன்.. உங்களுக்கே இது நியாமா படுதா..

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை! :)))))))) எப்படி வேணாச் செய்யுங்க, நான் பொறுப்பில்லை. :)))

      Delete
  3. ஆச்சு.... ரெண்டுமே ஒரு டர்ன் செய்து பச்சையாகவும் சுவைத்து- மறுபடி சொல்றேன்- காயக்காய அவ்வப்போது பச்சையாகவும் அவ்வப்போது சுவைத்து... :)))))

    நாளை அடுத்த டர்ன்..!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், வேலைக்குப் போறதில்லையா? :)))) வடாம் போடறதுக்கு லீவா? :))))

      Delete
  4. வெங்காய வடாமா! மாமி கலக்குறீங்க...:)) படங்கள் சேர்க்கலையா?

    ReplyDelete
  5. படங்கள் சேர்க்கலைம்மா. எல்லாம் யு.எஸ்ஸுக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. எங்களுக்கு சாம்பிளுக்குத் தான் வைச்சிருக்கேன். அதை என்னத்தைப் படம் எடுக்கறது! :)))))ஒரு நாளில் தீர்ந்துடும்.

    ReplyDelete