எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 27, 2018

உணவே மருந்து! வரகு 2

வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.

ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி

அரை கப் இட்லி புழுங்கலரிசி

முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்

பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!


தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார்.  தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.




அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்


இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)


வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு!  தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க!  தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான். 

19 comments:

  1. வரகரிசி இட்லி சூப்பரா இருக்கே ..எங்க வீட்டில் அடிக்கடி செய்வேன் ஆனா இவ்ளோ உப்பி வந்ததில்லை ..
    அக்கா ஆமணக்கு விதை முந்தி ஊரில மருந்துக்கடைலருந்து வாங்கி அனுப்புவ தங்கச்சி ..அது இட்லி குண்டா வர .ஆனா நானா இப்போல்லாம் அதில்லாமேயே செய்றேன் ..
    ஆமா அதென்ன ஸ்ரீராம் சாம்பார் ??

    ReplyDelete
    Replies
    1. http://sivamgss.blogspot.com/2014/08/blog-post_28.html
      வாங்க ஏஞ்சல், வருகைக்கு நன்னி. இந்தச் சுட்டியில் இருப்பது ஸ்ரீராம் சொன்ன சாம்பார் முறையில் நம்ம இஷ்டப்படி பண்ணியது இருக்கும்.

      http://engalblog.blogspot.com/2014/08/blog-post_25.html
      ஸ்ரீராம் சொன்ன செய்முறைப்படி சரவணபவன் சாம்பார்!

      Delete
    2. இங்கெல்லாம் மாவு நல்லாப் புளிச்சுப் பொங்கி வரும். அதனால் இட்லியும் குண்டாக வரும். அங்கே அவ்வளவாப் பொங்குவதற்கு வாய்ப்பு இல்லையே! நீங்க செய்யறதே பெரிய விஷயம்! அம்பேரிக்காவில் டெனிசியில் மாவு அவ்வளவாப் பொங்காது! அவன் உள்ளே வைக்கணும். அதே ஹூஸ்டனில் வெளியே வைக்கும் மாவு கூடப் பொங்கி வரும்.

      Delete
    3. ஆங் யெஸ் நினைவுக்கு வருது ..இந்த குறிப்பை எங்கோ பார்த்தா சொல்லி பகிர்ந்தார் எங்கள் பிளாகில்

      Delete
  2. இட்லி பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு, அதுவும் துணில வார்த்தது. யம்மி....

    ரொம்ப பில்டப் கொடுத்திருக்கீங்க. நாங்க வந்து சாப்பிடற அன்னைக்கு பஞ்சு மாதிரி இட்லி வருமா? ஹாஹாஹா

    பஞ்சு போன்ற இட்லில மிளகாய்ப்பொடி தடவி வைத்து ஆறவைத்து மறுநாள் சாப்பிட ரொம்ப யம்மியா இருக்கும். இல்லைனா, துணிலேர்ந்து எடுத்த உடனேயே சுடச் சுட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... பசி நேரத்துல அட்டஹாசமான படம்.

    ஆமாம்... எங்கே அந்த தீஞ்ச தோசை?

    ReplyDelete
    Replies
    1. தோசை படம் சேர்த்தேன். என்னமோ வரலை! இப்போ மறுபடி சேர்த்திருக்கேன். வந்திருக்கணும்!

      நம்பினால் நம்புங்க! எத்தனை பேர் வந்தாலும் துணி போட்டுத் தான் இட்லி வார்ப்பேன். இப்போவானும் பத்து வருஷங்களாக இரண்டு இட்லிக் கொப்பரைகள் துணைக்கு வந்திருக்கு! முன்னால் எல்லாம் ஒரே இட்லித் தட்டு தான் ஐந்து இட்லிகள் ஒரு ஈட்டுக்கு வரும். அவற்றில் இட்லி வார்த்தே சுமார் 30 முதல் 40 பேர் வரை செய்து கொடுத்து அனுப்பி இருக்கேன். எல்லாம் வடக்கே இருக்கையில்! ராஜஸ்தான், குஜராத்தில்! பெரிய தூக்குகளில் இட்லி, வடை,சாம்பார், சட்னி, மற்றும் ஸ்வீட் ஏதேஎனும் செய்து கொடுத்து அனுப்புவேன்.

      Delete
    2. தோசை படம் பார்த்துட்டேன்.

      Delete
  3. வரகு இட்லி...

    இந்த முறை ஊருக்கு வந்திருந்த போது கொள்ளு இட்லி சாப்பிட்டேன். இதையும் செய்து பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கொள்ளு வாங்கிக் கொண்டிருந்தோம். ஒத்துக்கறதில்லை. சுண்டல் ரொம்பப் பிடிக்கும். முளைக்கட்டிச் சுண்டல் செய்து காரட், வெங்காயம் பொடியாக நறுக்கித் தூவிப் பச்சைமிளகாய், கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து சாப்பிடப் பிடிக்கும். ஆனால் ஒத்துக்கறதில்லை! :)

      Delete
  4. பார்க்கவே நன்றாக இருக்கு கீதாமா. உங்களுக்கு அடுத்த வீடு காலியா இருந்தால் அங்கயே வந்துடுவேன்.
    வெள்ளையா தானே இருக்கு. வித்தியாசமே இல்லை. சுவையாகவும் இருக்கும்.



    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, நீங்க இந்தப் பக்கம் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! 2015,16 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வரகுத் தேன்குழல் கூடப் பண்ணினேன். இப்போக் கூடத் தினைமாவில் தேன்குழல் செய்தேன். எல்லாம் நன்றாகவே வருகின்றன.

      Delete
  5. பார்க்க அழகாக இருக்கின்றன இட்லிகள். அதைவிட இட்லித்தட்டைத் தூக்க சிறு கைப்பிடி! ஆமாம் தோசை படம் எங்கே? சப்பாத்தி படம் எங்கே? மிளகாய்ப்பொடி படம் எங்கே?!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், சப்பாத்தி படம் எடுத்திருக்க மாட்டேன். தோசை படம் சேர்த்திருந்தேன். என்னமோ தெரியலை. வரலை. இப்போ மறுபடி சேர்த்திருக்கேன். சைட் டிஷ் படம் எல்லாம் எடுக்கலை! :)))

      கைப்பிடி இருந்தாலும் துணி பிடிச்சுத் தான் தூக்கணும்! சுடும்! :))))

      Delete
  6. ஸ்ரீராம் சாம்பார்னா? சரவணபவன் சாம்பாரா? சாதா இட்லிதான் எங்கள் வீட்டில் வரகெல்லாம் பிறகுதான்!

    ReplyDelete
    Replies
    1. அதே! அதே! உங்களுக்கு சரவணபவன் சாம்பார்! எங்களுக்கு ஸ்ரீராம் சாம்பார்! :)

      ஒரு முறை வரகில் செய்து பாருங்க! எல்லா சாதமும் பண்ணலாம். வரகைக் கொஞ்சம் ஊற வைச்சுக் குக்கரிலோ நேரடியாகவோ சாதமாகச் சமைத்து அதில் எலுமிச்சைச் சாதம், புளியஞ்சாதம், கதம்ப சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம்னு எல்லாமும் செய்யலாம். எல்லாமும் நான் செய்து பார்த்தேன்.

      Delete
  7. வரகு இட்லி. அருமையான உணவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க முனைவர் ஐயா! நன்றி.

    ReplyDelete
  9. கலர் மாறாம நல்லா இருக்கே. வரகு இதுவரை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.

    ReplyDelete