எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, January 9, 2018

உணவே மருந்து! கறிவேப்பிலை!

Image result for கறிவேப்பிலை

படத்துக்கு நன்றி கூகிளார்.

கறிவேப்பிலையை வளர்ப்பதே பெரிய விஷயம்!  கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பெண்! அல்லது ஒரே பையர்! என்று சில பெற்றோர் சொல்வதில் இருந்து கறிவேப்பிலைக் கன்று வளருவதற்கு நாம் படும் கஷ்டமும் புரியும்! உணவில் வாசனைக்காக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்துக்காகவுமே கறிவேப்பிலை பயன்படுத்தப் படுகிறது. பொதுவாகக் கறிவேப்பிலையை எந்த உணவில் போட்டாலும் நாம் அதை எடுத்து எறிந்துவிட்டே சாப்பிடுகிறோம். ஒரு சிலர் தாங்கள் பிறருக்குப் பயன்படும் வரை உதவி செய்த பின்னர் அவர்கள் தங்களைக் கவனிக்காமல் இருப்பதைக் குறித்துச் சொல்லும்போது, "கறிவேப்பிலையைப் பயன்படுத்துகிற மாதிரி அவங்க தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டாங்க! அப்புறமாத் தூக்கி எறிஞ்சுட்டாங்க!" என்று சொல்வது உண்டு.

ஆனால் அந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாக நாம் தினம் சாப்பிட்டு வருவதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டிருக்கிறோமா? கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலை மயிர் வளரும் என்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரம் நரைக்கவும் நரைக்காது! அதோடு காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலைக் கொழுந்துகளைப் பச்சையாகச் சாப்பிட்டோமானால் ஏற்படும் நன்மைகள்:-

இதில் ஏ விடமின், பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்துகள் இருக்கின்றன.  இந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாகத் தினம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். வயிற்றைச் சுற்றி இருக்கும்மடிப்புகள் எல்லாம் கரைந்து போய் வயிறு சாதாரணமாகக் காட்சி அளிக்கும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கப் பேரிச்சையோடு கறிவேப்பிலையைக் காலை நேரத்தில் உண்ண வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு சீராக இருக்கத் தினமும் காலைவேளையில் கறிவேப்பிலைக் கொழுந்துகளை மென்று தின்னலாம். தலையில் மயிர் வளரவும் கறிவேப்பிலைபயன்படும். கறிவேப்பிலையைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொண்டு தினம் ஒரு டீஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிகட்டிக் கொண்டு அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலை கல்லீரலுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு சமயத்தில் கறிவேப்பிலையுடன், இஞ்சி, சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு ஒரு லிட்டர் மோரில் இந்துப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கும் குறையும். அதே சமயம் வாய் ருசியில்லாமல் இருந்தால் அதுவும் சரியாகும். மூல நோய்க்குக் கூடக்கறிவேப்பிலை சிறந்த மருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சிக்கல்களுக்கும் கறிவேப்பிலைச் சாறு நல்ல பலன் அளிக்கிறது. இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொஞ்சம் உப்புடன் உட்கொண்டால் நல்லது.  புற்று நோய்க்காக எடுத்துக்கொள்ளும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் கறிவேப்பிலையை உணவில் தாராளமாகச் சேர்க்கலாம் என்கின்றனர். இதன் மூலம் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறையும் என்கின்றனர்.  உடலில் ஏற்படும் நோய்த் தொற்றையும் குணமாக்கும். கண் பார்வையைச் சீராக்கும்.

13 comments:

  1. கறிவேப்பிலை இப்போ எல்லாம் சுலபமாகவே வளர்கிறது! கறிவேப்பிலையை வீண் செய்யாமல் சாப்பிட்டால் தலைமுடி கறுப்பாகும், நரைக்காது என்று சொன்னதைக் கேட்டு நீண்ட நாட்களாய் வீண் செய்யாமல் கடித்துச் சாப்பிட்டு வந்தேன்!!!

    ReplyDelete
    Replies
    1. விளைவைச் சொல்லவில்லை. டிவிஸ்ட் ஏதேனும் இருக்குமோன்னு படிச்சேன்.

      (நீ பண்ணற ஒவ்வொரு தப்புக்கும் எனக்கு ஒரு முடி நரைமுடியாகுதுன்னு சொன்ன அப்பாகிட்ட, பையன், அதுனாலதானா தாத்தாக்கு எல்லாமுடியும் வெள்ளை என்று சொன்ன ஞாபகம் வந்தது)

      Delete
    2. /விளைவைச் சொல்லவில்லை. டிவிஸ்ட் ஏதேனும் இருக்குமோன்னு படிச்சேன்.//

      ஹி ஹி ஹி.... சொல்லவும் வேண்டுமோ!

      Delete
    3. எனக்கு ஜாஸ்தி நரைக்கலைனு உறவினர்கள் பார்த்துக் கண்ணு வைக்கிறாங்க! :)))) தலை முடியும் நிறைய இருந்தது! இந்தப் பதஞ்சலி கேஷ் கந்தி தடவ ஆரம்பிச்சதும் கொட்டிப் போச்சு! :(

      Delete
  2. என் மகனிடம் சின்ன வயதில் இதைச் சொன்னபோது ("தலைமுடி நல்லா வளரும்டா... வேஸ்ட் செய்யாமச் சாப்பிடு"), "வேணாம்ப்பா ... மாசா மாசம் முடிவெட்ட உனக்குத்தான் செலவு" என்று சுலபமாய் பிரச்னையை முடித்துக் கொண்டுவிட்டான்.

    ReplyDelete
  3. எனக்கு கறிவேப்பிலை பிடிக்கும். தூரப்போட மாட்டேன். சின்ன வயசுல கறிவேப்பிலை பழம் சாப்பிடுவேன் (மரத்துலேர்ந்து பறித்து).

    அடுத்த இடுகை, கறிவேப்பிலை பொடி, கறிவேப்பிலை தொகையல்னு நினைக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதான் சொல்லிட்டீங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  4. எத்தனை பலன்கள் இந்த கறிவேப்பிலைக்கு....

    ReplyDelete
    Replies
    1. உண்மை வெங்கட், மருத்துவ குணம் வாய்ந்தது!

      Delete
  5. இதனால் ஏற்படும் தீமைகள் எதுவுமே இல்லையா?

    ReplyDelete
  6. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் தீமைகள் எதுவுமே இல்லையா?

    ReplyDelete
  7. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் தீமைகள் எதுவுமே இல்லையா?

    ReplyDelete