எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 8, 2016

உணவே மருந்து! தென்னை, தேங்காய்!

தேங்காய் குறித்துப் பலரும் பலவிதமாகச் சொல்கின்றனர். சமீப காலத்தில் ஆங்கில மருத்துவத்தில் தேங்காயைச் சாப்பிடாமல் தவிர்க்கச் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் தேங்காய் ஒரு அருமருந்து. தாராளமாகச் சாப்பிடலாம். முற்றிய நெற்றுத் தேங்காயைத் தான் அதிகம் உண்ணக் கூடாது! அதோடு இல்லாமல் இந்துக்களின் வாழ்க்கையில் தேங்காய் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தேங்காய் இல்லாமல் எந்தவிதமான பண்டிகைகளோ, வழிபாடுகளோ இடம் பெறாது. பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் விநாயகருக்குத் தேங்காய் உடைப்பதாகப் பிரார்த்திப்பார்கள்.

தேங்காயைத் தரையில் போட்டு உடைத்துச் சிதறுகாயாக உடைப்பதால் மனித மனத்தின் அகங்காரம் குறையும் என்பது ஐதீகம். தென்னை மரத்தைக் கற்பக விருட்சம் என்பார்கள். தேங்காய் மிகச் சிறப்பாக ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதயம், கல்லீரல்,சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கவல்லது. தேங்காயின் இளநீர் உடலுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். தாகம் தணிக்க இதைவிடச் சிறந்த நீர் வேறு ஏதும் இல்லை. மிகச் சுத்தமான நீர் என்றால் அது இளநீர் மட்டுமே. உடல்சூட்டைத் தணிக்கும் வல்லமை கொண்டது தேங்காயிலிருக்கும் நீர். விக்கல்களைத் தடுக்கும். நம் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம் முற்றாத அரைத் தேங்காயில் இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கும் இளநீர் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குச் செரிமானம் நல்ல முறையில் நடக்கும். அடிக்கடி வயிற்றுப் போக்குக்கு ஆளாகிறவர்களும், சிறுநீரகத்தில் தொற்று உள்ளவர்களும் இளநீரை தினம் தினம் பருகினால் நல்ல முன்னேற்றம் தெரியும். தீராத வயிற்றுப் புண்ணையும் தீர்க்கும் வல்லமை கொண்டது இளநீர்.

தேங்காய் எண்ணெயும் தேங்காயிலிருந்து கிடைக்கிறது. முற்றிய நெற்றுத் தேங்காய்களைத் துண்டங்களாக்கி வெயிலில் காயவைத்துச் செக்கில் ஆட்டி எடுப்பதே தேங்காய் எண்ணெயாகும். தென்னாட்டில் முக்கியமாகக் கேரளாவில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  தேங்காய் எண்ணெய் விரைவில் செரிமானம் ஆகிவிடும். இதில் செய்யும் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாது. எண்ணெயில் பொரித்தெடுத்துச் செய்யப்படும் முறுக்கு, தேன்குழல் போன்றவையும் ஒருமாதம் வரை வைத்திருக்கலாம்.  நம் தோல் வியாதிகளுக்கு அருமருந்தாகத் தேங்காய் எண்ணெய் ஆயுர்வேதத்தில் பயன் படுத்தப்படுகிறது.  தீராத புண்கள், தோல் நோய்கள், வாத நோய்களுக்கும் மற்றும் கற்பூராதித் தைலமாகவும், தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் நீலி பிருங்காதித் தைலம் போன்றவையும், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலத்திலும், பொடுகுக்குப் பயன்படும் பொடுதலைத் தைலத்திலும் தேங்காய் எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. 

6 comments:

  1. தேங்காய் இல்லாம சில பேர் வீட்டிலே சமையலே இருக்காது.

    தேங்காய் எண்ணெய் நேத்திரங்காய் வறுவல் செய்ய சூப்பர் ஆகத் தான் இருக்கும். சந்தேகம் இல்லை.

    பீன்ஸ் உசிலி செய்யும்போது, தேங்காய் சேர்த்த அடை க்கும் தேங்காய் எண்ணெய் உபயோகித்தால் ருசி இருக்கிறதே சுகம். சுகம்.

    இருந்தாலும், தேங்காய் எண்ணை bad கொலஸ்ட்ரால் . இந்த எல்.டி. எல். மேலப் போகும்போது, கூடவே திரிகிரிச்ளைட்ஸ் ம் கூட கூட மேல போயி, ரத்தக்குழாய் .

    லே முக்கியமா தமனிகள் லே கட்டி வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    தே.எண்ணை உபயோகிக்காதவருக்கும் ரத்தக் கொதிப்பு வருதே, அர்டேரியோ செலாரசிஸ் வருதே அப்படின்னு கேட்கலாம்.

    ஆனா, தேங்காய் எண்ணை உபயோகித்தால் ஆபத்து அதிகம்.

    ஆகவே, சுவை வேணும் அப்படின்னா சீக்கிரம் ஸ்வர்கம் போக ஒரு கவிக் சான்ஸ்

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. Hariharan V
      April 24 at 7:34pm ·
      Is LDL cholesterol really bad for health? Far from it.

      #2 An open letter to all doctors and public
      By Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
      .
      We have been taught that LDL cholesterol causes heart disease and so it is named BAD cholesterol. NO. It is not so. Even the world famous (accepted by all cardiologists in the world) Framingham heart study said that they have found no relation between dietary intake of cholesterol (like egg yolks) and atheroclerosis leading to heart disease. Yes THE Framingham heart study.

      I will ask you a logical question. If LDL is so bad, why it is produced in the body? Can you name some substances which are toxic but are not detoxified and excreted through urine and feces? So when LDL becomes high, why it is not excreted? It's not toxic, that's why.

      Let me quote from few International studies which you can't refute on.
      1. There was no association at all found between LDL-C levels and Coronary artery calcium scores (Indicator for heart attack) in this octogenarian population. It says that increased LDL levels are not a cause for heart disease. Remember we have been taught LDL is bad and to reduce them we have to give statins
      2. Higher levels of so called LDL cholesterol is associated with reduced risk of heart disease. That is when LDL levels are high, your chances of getting heart attack is low (Mindblowing right?). They also state that Low levels of LDL and Total cholesterol are riskfactors for coronary atherosclerosis (Heart attack).
      3. Higher levels of total cholesterol protected the heart.

      Remember-Statins were lobbied heavily. We were fooled in to trust them. When statins were discovered, the initial studies in rats showed that, on administering statins, the cholesterol levels improved but the rats died soon. In control group (Where statins were not given), the higher level of cholesterol prolonged their life. The investigators recommended that statins should not be used for humans, since cholesterol levels are not related to heart disease. But FDA approved it because some sensational idiot told cholesterol is bad for health. Go and check internet on the fraud of Statin lobbying. By declaring this i am now in danger of the lobbies too. Let's stand unite against these mafias. STOP STATINS NOW. Share this post until every doctor in nook and corner of India gets this message. Let's save people's lives.

      References:
      1. Freitas WM, et al. Low HDL cholesterol but not high LDL cholesterol is independently associated with subclinical coronary atherosclerosis in healthy octogenarians. Aging Clin Exp Res. 2014 Jun 7. [Epub ahead of print]

      2. Takata Y, et al. Serum total cholesterol concentration and 10-year mortality in an 85-year-old population. Clin Interv Aging. 2014;9:293-300

      3. Association of lipoprotein levels with mortality in subjects aged 50 + without previous diabetes or cardiovascular disease: A population-based register study. Scandinavian Journal of Primary Health Care 2013;31(3):172-180

      Delete
  2. கொலஸ்டிரால் இருப்பவர்கள் தேங்காய் சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்கள். சிலர் தேங்காய் நல்ல கொலஸ்டிராலை வளர்க்கும், சாப்பிடலாம் என்றும் சொல்வார்கள்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Sriram, Answer was given to Su.Tha.'s comment. please read it carefully. :)The post was written by an allopathy Doctor. :D

      Delete
  3. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தேங்காய் பற்றிய தகவல்கள் சிறப்பு!

    ReplyDelete