எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, July 3, 2014

காஞ்சிபுரம் இட்லி சாப்பிட வாங்க!

தேவையான சாமான்கள்:  சுமார் நான்கு பேருக்கு!

இட்லி அரிசி ஒரு கிண்ணம்

பச்சரிசி ஒரு கிண்ணம்

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்

மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும்.  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.  உப்புப் போட்டுக் கலக்கவும்.  இரவு ஒரு துண்டு சுக்கை நன்கு பொடி செய்து மாவில் கலந்து வைக்கவும்.



காலை இட்லி வார்க்கும் முன்னர் மாவில் சேர்க்க வேண்டியவை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகம் உடைத்த பொடி 2 டீஸ்பூன்

பெருங்காயம் சின்னத் துண்டு

கருகப்பிலை, கொத்துமல்லி ஆய்ந்து நறுக்கியது

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது 2 டேபிள் ஸ்பூன்



நெய்யை நன்கு காய வைத்துக் கடுகு , உ.பருப்பு, கபருப்பு, பெருங்காயம், கருகப்பிலை தாளித்து மாவில் போட்டுக் கலக்கவும்.  அந்தச் சட்டியிலேயே நறுக்கிய தேங்காய்களைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு இருந்தாலும் போடலாம்.  அவரவர் விருப்பம். கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.  பின்னர் இட்லிப் பானையில் துணி போட்டோ  அல்லது இட்லி குக்கரில் உள்ள தட்டுக்களில் எண்ணெய் தடவியோ  இட்லி மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றி வேக வைக்கவும்.  வெந்ததும் சட்னி, சாம்பார், கொத்சு  எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  காஞ்சீபுரத்தில் தம்பளரில் எண்ணெய் தடவி மாவை விட்டு வேக வைப்பாங்க.  இங்கே நாம் வீட்டில் பண்ணுவதை விட அங்கே இன்னமும் உதிர் உதிராக இருக்கும். நான் ரொம்பக் கொரகொரப்பாக அரைப்பதில்லை.



வெந்த இட்லிகள்


சாம்பார் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பண்ணியது.

இதோடு குழந்தைகள் சாப்பிட வேண்டி பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைச்ச பட்டாணியோ, வேர்க்கடலையோ, காரட் சீவியோ சேர்க்கலாம். இதை இட்லியாகச் செய்ததும் ஒரு வாணலியில் நல்லெண்ணையைக் காய வைத்துக் கடுகு தாளித்து இட்லிகளை நான்காக நறுக்கிப் போட்டு மிளகாய்ப் பொடியைக் கலந்து(தோசை மிளகாய்ப் பொடி தான் கலக்க வேண்டும்) கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி, எலுமிச்சம்பழம் பிழிந்து சில்லி இட்லி என்று சாப்பிடலாம்.  பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்திலேயே எலுமிச்சைச் சாறைக்கலந்து அதையும் இந்த சில்லி இட்லி மேல் தூவிக் கொண்டு சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும். :)

19 comments:

  1. செய்முறை பகிர்வுக்கு நன்றி. செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது! :)

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க வெங்கட். மிச்சம் மாவுக்கு ஒரு திப்பிச வேலை வைச்சிருக்கேன். இன்னிக்கு அதான் பண்ணப் போறேன். ராத்திரிக்கு. பண்ணினதும் சொல்றேன், உங்களுக்கு மட்டும் ரகசியமா! :))))

      Delete
  2. நாவூறுகிறது!!! நாங்கள் கடையில் ரெடிமேட் மாவு வாங்கி அவ்வப்போது செய்கிறோம்! கொஞ்சநாள் முன்பு மக்கள் டிவியில் காஞ்சிபுரம் இட்லி என்று அறியப்படும் குடலை இட்லி செய்முறை காட்டினார்கள். பார்த்துப் பகிர்ந்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், நீங்க வாங்கற ரெடிமேட் மாவு எம்டிஆர் ரவா இட்லி மிக்ஸா இருக்கும், அதுவும் வாங்கிப் பண்ணி இருக்கேன். நானே வீட்டில் ரவாவை வறுத்தும் பண்ணி இருக்கேன். இது வேறே. அரைப்பதும் கஷ்டம் இல்லை.

      Delete
    2. ஆமாம், குடலை இட்லினு ஓலையால் செய்த குடலைகளில் சதும்ப எண்ணெய் தடவித் தான் இது செய்யப்பட்டு வந்தது. எழுபதுகளில் முதல்முறை காஞ்சீபுரம் போனப்போ அப்படித் தான் சாப்பிட்டோம். இப்போக் கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் (விற்கிறது இல்லை) மட்டுமே அப்படிச் செய்யறாங்களாம். கடைசியாக் காஞ்சீபுரம் போனப்போக் குடலை இட்லியைத் தம்பளரில் விட்டுச் செய்து கொண்டு தந்தார்கள். :)))) எல்லாம் ஒரு முன்னேற்றம் தான். ஆனால் அங்கே இன்னமும் கொஞ்சம் பெரியதாகக் குருணை குருணையாக இருக்கும்.

      Delete
  3. கமெண்ட் மாடரேஷன்? வொய்? :)))))

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மாதங்கள் ஆச்சே மாத்தி! கமென்ட்ஸ் வரதே தெரியறதில்லை. அதான் மாத்தினேன்.

      Delete
  4. செய்து பார்க்கிறோம் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. கட்டாயமாய்ச் செய்து பார்க்கச் சொல்லுங்க டிடி. ரொம்பவே சுலபம் தான். கஷ்டமெல்லாம் இல்லை.

      Delete
  5. அடுத்த ஞாயிறு பண்ணிடலாம்
    bhageerathi.in

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்து பாருங்க எல்கே. :)

      Delete
  6. காஞ்சீபுரம் இட்லி திருச்சியிலா...அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி, திருச்சி என்ன, ராஜஸ்தான், குஜராத், ஊட்டி, ஹைதராபாத்னு எங்கேயும் பண்ணி இருக்கேன். இப்போத் தான் இரண்டு, மூன்று ஆண்டுகளாகப் பண்ணவில்லை. :)))

      Delete
  7. இந்த முறை நன்றாக இருக்கிறதே.பாட்டி செய்யும் போது படு கஷ்டமாக இருக்கும். தயிர்,நெய் கலந்து ஒண்ணு ரெண்டா மாவு நெரடும். சாப்பிடும்போதே விக்கல் வரும். பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும் . செய்துவிடலாம் நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, முதலில் நானும் அப்படித் தான் செய்தேன். அப்புறமாத் தான் தோணித்து. இவ்வளவு நொய்யாக ஏன் வைச்சுக்கணும்னு. நீங்க சொல்றாப்போல அதிலே விக்கல் வரும். தொண்டையை அடைக்கும். இது நல்லாவே இருக்கும். தைரியமாப் பண்ணுங்க. கொத்சோட பிரமாதமா இருக்கும். :)

      Delete
  8. சுலபமாக இருக்கு மாமி. இதுவரை சாப்பிட்டதேயில்லை....:) கட்டாயம் செய்து பார்க்கிறேன். அடுத்த முறை சோதனை எலி இங்கே வரும் போது.....:)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி. எல்லோருக்கும் இது பிடித்துப் போனது குறித்து சந்தோஷம். :)

      Delete
  9. படிப்பன்வர்கள எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை என்று ஆங்கலாய்க்கிறீர்களே என்பதினால் ..இந்த செய்தி;
    மாதங்கியின் மைத்த்துளிகள் ..blog.-ல் குறிப்பிட்டிருக்கும் எல்லா பதிவர்களின் blogs தவறாமல் படிக்கிறேன்
    இரண்டு நாட்கள் முன் ,இரவு மூன்று மணி நேரம் தங்கள் சாப்பிடவாங்க blog-ல் நிறைய படித்த்து பல
    recipe களை index செய்து வைத்த்ததுக்கொண்டேன்- சமையல் குறிப்புகள் மட்டுமின்றி எளிய மறுத்த்துவ
    குறிப்புகளும் மிகவும் பயனூள்ளுவையாக இருக்கின்றன ..ஆன்மீக blog-ல் மஹாபாரதம் படித்து வியந்து கொண்டிருக்கிறேன் ...மாலி

    ReplyDelete