எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 31, 2014

தேப்லா சாப்பிட வாங்க!

பரோட்டாவெல்லாம் போட்டுட்டேன், சாப்பிட்டுப் பார்த்திருப்பீங்க. :)) இப்போ ரொட்டி வகைகளில் வேறே சிலது பார்ப்போமா?  இதிலே தேப்லா என்ற குஜராத்தி முறை ரொட்டி ஒண்ணும், மிஸ்ஸி ரொட்டி என்ற மராட்டி வகை ஒண்ணும் பார்ப்போம்.  இது எல்லாம் என்னோட முறையிலே தான் நான் செய்வேன்.  அவங்க முறையிலே செய்யறதில்லை.  தேப்லாவை குஜராத்தியர் கோதுமை மாவிலே மட்டுமே செய்வாங்க.  நான் கொஞ்சம் கடலை மாவு சேர்த்துப்பேன். அதான் வித்தியாசம்.  ராஜஸ்தானில் ஐந்து கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ கடலைப்பருப்புச் சேர்த்தே அரைப்பாங்க. ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை. :)))


தேப்லா அல்லது தேப்ளா; நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அல்லது முழுதாக ஒரு டீஸ்பூன்

சோம்பு அரை டீஸ்பூன்

ஜீரகம் அரை டீஸ்பூன் பொடித்தது

உப்பு தேவைக்கு

இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதாரணமாய் ரொட்டி பண்ணுகையில் வட மாநிலங்களில் உப்பு சேர்த்துப் பிசைந்து பார்த்ததில்லை.  ஆனால் இம்மாதிரி ரொட்டிகள் பண்ணுகையில் தேவையான உப்பைச் சேர்க்கணும்.

பிசைய சமையல் எண்ணெய் (நான் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவேன்) இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கியது

இஞ்சித் துருவல் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்


மாவுகளை முதலில் ஒன்றாகக் கலக்கவும்.  கலக்கும்போது மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி, பொடித்த ஓமம், ஜீரகப் பொடி, சோம்பு போன்றவற்றையும் சேர்த்து முதலில் கைகளால் நன்கு கலக்கவும். மாவு நன்கு கலந்ததும் தயாராக வைத்திருக்கும் சமையல் எண்ணெயை சூடு செய்து மாவில் விடவும்.  மீண்டும் கலக்கவும்.  இப்போது பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கைகளுக்குக் கொரகொரப்பாக வரும்.  கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து மாவை ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர்  மாவை மீண்டும் கொஞ்சம் பிசைந்து கொண்டு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிச் சப்பாத்தியாக இடவும்.  அதை தோசைக்கல்லில் அல்லது நான் ஸ்டிக் தவாவில் போட்டுச் சுடவும்.  அடி பாகம் வெந்து மேலே குமிழ் வந்ததும் திருப்பிப் போட்டு மறு பாகத்தையும் வேக வைக்கவும்.  பொன்னிறமாக வெந்ததும் எடுத்து இரண்டு பக்கமும் மேலே கொஞ்சம் நெய்யைத் தடவி விட்டு வைக்கவும்.  ஒரு சிலர் தோசைக்கல்லில் வேகும்போதே நெய் அல்லது எண்ணெய் ஊற்றியும் வேக வைக்கிறார்கள்.  அது அவரவர் விருப்பம் போலச் செய்யவும்.  இதைக் கொஞ்சம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொண்டால் ஊர்களுக்குச் செல்லும்போது ஊறுகாய், தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு, பச்சை ஆப்பிள் தொக்கு போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும்.  இது நாளை அல்லது நாளன்றைக்குச் செய்யும் போது படம் எடுத்துப் போடறேன்.  இன்னிக்கு தோசை மாவு இருக்கு! :))))

16 comments:

  1. தேப்லா படத்தை கண்டிப்பாக போடவும்... அப்போது தான் இந்தக் குறிப்பை, வீட்டில் குறித்துக் கொள்ள செய்வேன்...! ஹிஹி...

    நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கும் நாளைக்கும் செய்ய முடியாது டிடி. கட்டாயமாய் திங்கட்கிழமைக்குள் போட முயல்கிறேன். :))))

      Delete
  2. புதிதாக இருக்கிறது. குறித்து வைத்து பாஸ் கிட்ட சொல்றேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கடைசிலே இது ஒண்ணாவது புதுசா இருக்கே! :))))

      Delete
    2. :))) ஆமாம், அநேகமா எல்லாமும் எல்லாருக்கும் தெரிஞ்சதாத் தானே இருக்கு! :)

      Delete
  3. இது புதுசு எனக்கு, ஒரு நாள் ட்ரை பண்ணி விட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, டெல்லியிலே பரோட்டாவுக்காகன்னே தனிக்கடை இருக்கே? தெரியும் இல்ல? :)))) இதை முயற்சி பண்ணிப் பாருங்க. இதுக்குத் தொட்டுக்க என்னோட விருப்பம் தக்காளித் தொக்கு! :))) தயிரும் கூட வைச்சுக்கலாம்.

      Delete
  4. எங்க நாத்தனார் கற்றுக் கொடுத்தார். .அவர் பாம்பேயில் இருக்கும் போது கற்றுக் கொண்டதாம் . ரொம்ப சுவையக் இருந்தது. புதிதாகசோன்ஃபும் போடலாம்னு தெரிந்து கொண்டேன். நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்ம விருப்பம் தானே வல்லி. சோம்பும் போடலாம். நல்லா வாசனையா இருக்கும். நீங்க சொல்றது மிஸ்ஸி ரொட்டியோனு நினைக்கிறேன், மும்பையிலே அது தான் ஃபேமஸ். :)

      Delete
  5. இது கேள்விப்பட்டிருக்கேன்... செய்ததில்லை..

    அப்பளம் மாதிரி ஒடிச்சு எடுக்கற பக்குவத்துல ஒருமுறை ரயிலில் குஜராத்தியர் எடுத்து வந்து சாப்பிட்டாங்க... பச்சை வெங்காயம், புஜியாவுடன்... இது தானா தெரியலை..

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதுக்கு வேறே பெயர். மனசில் இருக்கு. நினைவில் வரலை. :)))) இதுவும் ரயிலுக்குக் கொண்டு போகலாம்.

      Delete
  6. காக்ராவா? அது...:)

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல! :)))) காக்ரா தான். :)))) சட்டுனு மறந்து போச்சு.

      Delete
  7. தேப்லா - உண்டதுண்டு. ஆனால் எனக்கு ஏனோ இதைப் பிடித்ததில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சிலருக்குப்பிடிக்காது தான்.:))))

      Delete