எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 23, 2013

3 -----தோசையம்மா தோசை அரிசி, உளுந்து அரைத்துச் செய்யும் தோசை

ரவாதோசை என்பது முன் பதிவில் சொன்ன முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படும்.  சில சமயம் இட்லிக்கு அல்லது தோசைக்கு அரைத்த மாவு கொஞ்சம் போல் மிஞ்சும் இல்லையா?  அப்போ அதிலே ரவை, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கம்பு மாவு, சோள மாவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து தோசை வார்க்கலாம்.  இதற்கு மைதா மாவு சேர்க்கணும்னு அவசியம் ஏதும் இல்லை.  ஆனால் என்னோட அம்மா அரிசியையும், உளுந்தையும் ஊற வைச்சு அரைச்சும் ரவா தோசை, கேழ்வரகு தோசை போன்றவை செய்வாங்க.  அதுக்கு எப்படிச் செய்யணும்னா, மாலை தோசை வார்க்கணும்னா காலையிலேயே அரிசி, உளுந்தை ஊற வைச்சு அரைக்கணும்.  காலை செய்யணும்னா முதல்நாள் மாலையில் ஊறவைச்சு அரைக்கணும்

அரிசி ஒரு கிண்ணம்

உளுந்து முக்கால்கிண்ணம்

இரண்டையும் சேர்த்துக் கழுவி ஊற வைக்கவும்.  பச்சரிசி என்றால் இரண்டு மணி நேரமும் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டும் கலந்தது எனில் மூணு மணி நேரமும் ஊறட்டும்.  ஊறியதை நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுக்கலந்து புளிக்க வைக்கவும்.

ஒரு கிண்ணம் ரவை அல்லது கேழ்வரகு மாவு/கோதுமை மாவு/சோள மாவு/கம்பு மாவுக்கு மேலே சொன்னபடி அரைத்த மாவில் பாதியைப் போட்டுக் கலக்கவும்.  நன்கு கலந்து கரைத்துக் கொள்ளவும்.  ரொம்ப நீர்க்கவும் கரைக்கக் கூடாது.  ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  கரைத்த மாவில் கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, தேவையானால் வெங்காயம் ஆகியவை சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.  தோசையாக ஊற்றவும்.

இந்த மாவு நான்கு பேர்களுக்குப் போதலைனால் மிச்சம் இருக்கும் அரைத்த மாவில் முன் சொன்னது போல் கலந்து கொண்டு தோசை வார்க்கத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கவும்.  சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு பரிமாறவும்.

10 comments:

  1. இட்லி, தோசை மாவு கொஞ்சமா இருக்கும் போது இப்படி கோதுமை மாவு கலந்து தாளித்து செய்வதுண்டு......

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் இதுக்காகவே அரைத்துச் செய்வார்கள் உஷா அன்பரசு. :)

      Delete
  2. இன்று தான் இட்லிக்கு ஊறவைத்திருக்கிறேன்..
    மாவு கொஞ்சமாக இருந்ததால், அதனுடன் கோதுமை மாவு சேர்த்து எல்லா அலங்காரமும் தான் போட்டு தோசை வார்த்து கொடுத்தேன் ரோஷ்ணியிடம்....

    இனிமே நீ எப்பவுமே இதை செய்யக்கூடாது என்று சொல்லி விட்டாள்...:))))

    நமக்கு பிடிச்சா, அவங்களுக்கு பிடிக்கலை...:)))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, குழந்தைங்களுக்குக் கொஞ்சம் பிடிக்காது தான். எங்க குழந்தைங்க குழந்தைங்களா இருந்தப்போ அவங்களைச் சாப்பிட வைக்கன்னே, வெள்ளைச் சட்னி, க்ரீன் சட்னி, ரெட் சட்னினு செய்து வைத்துச் சாப்பிட வைப்பேன். ஆனால் ஸ்கூலுக்குக் கொடுத்து அனுப்பியதில்லை. ஸ்கூலுக்குக் கலந்த சாதம் அல்லது சப்பாத்தி, ப்ரெட் டோஸ்ட், ப்ரெட், பட்டர், ஜாம் இவை தான். :)))))

      Delete
  3. தோசை மாவு பத்தும்பத்தாம இருக்கும் போது
    ரவை, ராகி, கோதுமைமாவு என்று ஏதாவது போட்டு செய்வேன். இதற்காகவே அரைத்து செய்யலாம் போலிருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. அரைத்துச் செய்தால் அது தனி டேஸ்ட் ராஜலக்ஷ்மி. ஒரு முறை முயன்று பாருங்கள். :))) இரண்டு பேருக்குக் கொஞ்சம் போல் போட்டால் போதும். அரிசியும் உளுந்தும் சேர்த்து ஒரு சின்னக் கிண்ணம் போதுமானது.

      Delete
  4. இதைக் கண்டிப்பா செய்றேன். ராகி மாவு வாங்கி வச்சு ராகி தோசை செய்தால், நான் மட்டும் தான் சாப்பிடறேன்.. இதுக்காகவே அரைக்கிறேன் மாவு!!.. ரொம்ப நன்றிம்மா..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, செய்து பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். :)

      Delete
  5. ஓகே....

    கோதுமைன்னா நமக்கு சப்பாத்தி, பராந்த்தா மட்டுமே! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இங்கேயும் அப்படித்தான் என்றாலும் ஒரு மாறுதலுக்கு என நான் கட்டாயமாய்ச் செய்வது உண்டு. :))))

      Delete