எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 21, 2013

தோசையம்மா தோசை! 2 ரவா தோசை!

ரவை பொடி ரவையாக இருந்தால் நல்லது,  இல்லைனாலும் பரவாயில்லை. தோசை செய்ய அரை மணி முன்னே ஊற வைக்கலாம்.  நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்.

ரவை இரண்டு கிண்ணம்

அரிசி மாவு ஒன்றரைக் கிண்ணம்

மைதா மாவு ஒரு கிண்ணம்

உப்பு தேவைக்கு

கொஞ்சம் புளித்த மோர் அரைக்கிண்ணம்

கரைக்கத் தேவையான நீர்

மிளகு அரை டீஸ்பூன்

சீரகம் இரண்டு டீ ஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் இரண்டு

தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்


முதலில் ரவையைப் புளித்த மோர் விட்டு நன்கு ஊற வைக்கவும். பின்னர் தோசை வார்க்க அரை மணி முன்னால் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து நீர் விட்டுக் கரைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். மிளகு, சீரகம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.   தோசை மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  அதே சமயம் அளவாக நீர் சேர்த்துக் கரண்டியால் ஊற்றும் அளவுக்குக் கரைக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகைப் போடவும், கடுகு வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிவிட்டுப் பின் மாவில் சேர்க்கவும்.  அதே தோசைக்கல்லில் தொடர்ந்து தோசையை ஊற்ற ஆரம்பிக்கலாம்.

முதலில் ஒரு கரண்டி மாவை எடுத்துக் கொண்டு சுற்றி ஊற்ற ஆரம்பித்துப் பின்னர் நடுவில் வந்து முடிக்க வேண்டும்.  சாதாரண அரிசி, உளுந்து தோசைக்கு நடுவில் மாவை ஊற்றித் தேய்த்துப் பெரிதாக்குவோம்.  இதுக்கு அப்படி இல்லை. தோசையில் துவாரங்களோடு வரும்.  எண்ணெய் ஊற்றவும்.  ஏற்கெனவே கடுகு தாளித்த கல்லிலேயே தோசையை ஊற்றினால் கல்லில் ஒட்டாமலும் எடுக்க வரும். எந்த தோசையானாலும் முதலில் கடுகு போட்டு எண்ணெயில் வெடிக்க விட்ட பின்னர் மாவை ஊற்றினால் கல்லில் முதல் தோசையே ஒட்டாமல் வரும்.

தோசை மெலிதாக முறுகலாக வரும். சட்னி, சாம்பாரோடு வெளுத்துக் கட்டலாம்.

அடுத்து உளுந்து அரைத்துப் போட்ட ரவா தோசை.

14 comments:

  1. மிகவும் பிடித்த தோசை... உங்கள் செய்முறை படி செய்து பார்ப்போம் அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. ம்..ம்.. தோசை ஸ்பெஷல் தொடர்ந்து வரட்டும்.. நானும் செய்து பார்க்கிறேன். என் பொண்ணும் வெளுத்து கட்டுகிறாளா பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வெளுத்துக் கட்டுங்க உஷா அன்பரசு! :)

      Delete
  3. இந்த தோசை படிச்சாச்சு. அடுத்தது என்ன தோசை?

    ReplyDelete
    Replies
    1. வரும், வரும், பொறுங்க!

      Delete
  4. ஒரே தலைப்பில் இருப்பதால் படித்ததா, படிக்காததா என்று சந்தேகம் வந்து விட்டது! ரவையை முன்னாலேயே ஊற வைக்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஊறவைத்துக் கரைத்து வைத்து அரை மணி கழித்து வார்ப்போம். இனி இப்படிச் செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒண்ணு தான் ஶ்ரீராம். அப்படியும் செய்யலாம். :))))

      Delete
  5. இந்த செய்முறையில் செய்யறேன்.இதுக்கு முந்தி எல்லாம் சேத்து ஊற வச்சு செஞ்சிட்டிருந்தேன்!!:).

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம் பார்வதி!

      Delete
  6. ம்ம்ம்... ரவா தோசை ஆசை தான்... ஆனால் இங்கு ரவையே வீட்டுக்குள் வரக்கூடாது என்பார்களே....:)) தோசைக்காக வாங்கி செய்கிறேன்..:))

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்கறீங்க? ஏன்?? ரவையே பிடிக்காதா? அட!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  7. ரவா தோசை - கடையில் மொறுகலாக சாப்பிடப் பிடிக்கும்.... சுடச்சுட. கொஞ்சம் ஆறிவிட்டாலும் சாப்பிட பிடிப்பதில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சூடாகத் தான் சாப்பிடணும். :)))) எனக்கு இதுக்குத் தொட்டுக்க வெங்காயச் சட்னி பிடிக்கும். :)

      Delete