எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 13, 2013

சாபுதானா கிச்சடி என்ற ஜவ்வரிசி உப்புமா!

தேவையான பொருட்கள்;  நான்கு பேருக்காக.


அரை கிலோ ஜவ்வரிசி (கொஞ்சம் அதிகம் தான், படியால் அளந்தால் ஒன்றரை ஆழாக்கு அல்லது 300 கிராம் போதும்.  ஏனெனில் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.  சீக்கிரம் பசிக்காது. அதான் வ்ரத நாட்களில் வைச்சிருக்காங்கனு நினைக்கிறேன். :))))

ஜவ்வரிசி மாவு ஜவ்வரிசி தான் நல்லா இருக்கும்னு என்னோட கருத்து. நைலான் ஜவ்வரிசி நல்லா இருக்கிறதில்லை. வத்தல் போடும் ஜவ்வரிசினு கேட்டு வாங்குங்க மக்களே!


ஜவ்வரிசி கப்பால் அளந்தால் மூன்று கிண்ணம்
உருளைக்கிழங்கு  பெரிதாக 2 (நன்கு கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் ஆறு
வேர்க்கடலை வறுத்துப் பொடித்தது ஒன்றரைக் கிண்ணம்
கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் (தேவையானால்) ஒன்று
உப்பு தேவைக்கு ஏற்ப


தாளிக்க

சமையல் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்,

கடுகு ஒரு டீஸ்பூன்
ஜீரகம் ஒரு டீஸ்பூன்


சாபுதானா எனப்படும் ஜவ்வரிசியை நாளைக்காலை உப்புமா பண்ணவேண்டுமெனில் முதல் நாள் இரவே நன்கு களைந்து கழுவி நீரை வடித்து அதில் இருக்கும் கொஞ்சம் நீரோடு அப்படியே வைக்கவும்.  மறுநாள் காலையில் பார்த்தால் ஜவ்வரிசி நன்கு ஊறிப் பெரிதாக ஆகி இருக்கும்.  மாலை பண்ணவேண்டுமெனில் காலை ஊறப்போடவும்.  கடாயில் எண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்.  நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கவும்.  உருளைக்கிழங்கு வேகும் வரை வதக்கிய பின்னர் ஜவ்வரிசியைச் சேர்க்கவும். அதோடு சேர்த்தே வேர்க்கடலைப் பொடியைச் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  வேர்க்கடலை சேர்ப்பதால் ஜவ்வரிசி தனியாக உதிர்ந்து வந்துவிடும்.  நன்கு கிளறி உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.  சூடாகப் பரிமாறவும்.


8 comments:

  1. இதில் சில மாற்றங்களோடு எங்க வீட்டில் செய்வேன்.

    முதலாவது எண்ணெய்க்குப் பதிலா நெய்,

    இரண்டாவது கடுகு சேர்ப்பதில்லை, சீரகம் மட்டுந்தான். அத்தோடு கறிவேப்பிலையும் போடுவதில்லை. கொத்தமல்லி இலையும் இஞ்சியும்தான் சேர்ப்பேன். இது வாசனையிலும் ருசியிலும் முக்கியமான மாற்றத்தைக் கொண்டாந்துடும்.

    மூணாவதா உ.கி முதல்லயே வேக வெச்சு உதிர்த்து வெச்சுக்கிட்டு சேர்ப்பாங்க. போடலைன்னாலும் பாதகமில்லை. வடைக்குத்தான் முக்கியமாச் சேர்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றாப்போல எங்க பொண்ணு செய்வா. நான் ஆலு போஹா மட்டும் உ.கி. வேக வைச்சு உதிர்த்துச் சேர்ப்பேன். அதுக்கு சீரகம், கொத்துமல்லி மட்டும். இஞ்சி போடறதில்லை. சாபுதானாவும் நீங்க சொல்றாப்போல் ஒருநாள் செய்துடலாம். :)))))))

      Delete
  2. ஓகே. ஒருமுறை ட்ரை பண்ணிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்க, நாளைக்கூட இதான் காலை டிஃபன். வயிற்றை எதுவும் பண்ணாது. அதோடு வயிறும் நிரம்பும். :))))

      Delete
  3. ஆஹா! கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா செய்ததில்லை. அரிசி உப்புமா அதுவும் வெங்கலப் பானையில் தவிர மீதி எந்த உப்புமாவாக இருந்தாலும் நம்ம வீட்டுல அப்பாவும் மகளும் ஓட்டம் பிடிப்பாங்க...:))) முகமே மாறிடும்...

    எனக்காக ஒருநாள் கொஞ்சமா செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சின்னக் கிண்ணம் போதும் உங்க ஒருத்தருக்கு! செய்து பாருங்க! :))))

      Delete
  4. அட சாபு தாணா உப்புமா.... ஓகே ஓகே....

    ஒரே ஒரு தடவை சாப்பிட்டு பார்க்கலாம்! தப்பில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. haahaa, ungka thangamani kite sollidungka! :)))))

      Delete