எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 4, 2013

ஜீரா போளி சாப்பிட வாங்க!

வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  இப்போத் தான் நோ ஸ்வீட் ஆச்சே! :( இருந்தாலும் இந்த ஜீரா போளி பண்ணற அன்னிக்குத் தான் படம் எடுக்க முடியும்.  எப்போப்பண்ணுவேன்னு தெரியலை.  அதனாலே ஓசியிலே படம் வாங்கிப் போட்டிருக்கேன்.


இது கலர் போட்டிருக்கு.  கலர் போடாமலும் பண்ணலாம்.  தேவையான பொருட்களை முதல்லே சொல்லறேன்.  


தேவையான பொருட்கள்:-

பொடி ரவை, பேணி ரவைனு சொல்லுவாங்க அது கால் கிலோ (இந்த அளவில் சுமாராக பதினைந்து போளி வரை பண்ணலாம்.)  மைதா ஒரு சின்னக் கிண்ணம்.  அரிசி மாவு ஐம்பது கிராம், அதைக் குழைக்க நெய் அல்லது வெண்ணெய் ஐம்பது கிராமிலிருந்து நூறு கிராமுக்குள்ளாக.  உப்பு சிறிதளவு.  மாவு பிசைய கால் டீஸ்பூனும் அரிசிமாவில் போட்டுக் குழைக்க ஒரு சிட்டிகையும் தேவைப்படும்.  மாவு பிசைய நீர் தேவையான அளவு அல்லது அரைக்கிண்ணம் பாலும் மீதிக்கு நீருமாக.  பால் சேர்த்தால் போளியை அதிக நாட்கள் வைக்காமல் உடனடியாகச் செலவு செய்து விட வேண்டும்.  பொரிக்க நெய் அல்லது சமையல் எண்ணெய்

பாகு வைக்க சர்க்கரை முக்கால் கிலோ.  எசென்ஸ் வாசனை பிடித்தால் ரோஸ் எசென்ஸ், கலர் வேண்டுமெனில் பிடித்த கலர் ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள்.  மேலே தூவ தேங்காய்ப் பூ, முந்திரி, பாதாம், பொடியாகச் சீவியது.(விருப்பமிருந்தால்)

முதலில் மாவு பிசைந்து ஊற வைச்சுடணும்.  பொடி ரவை என்பதால் சீக்கிரமே ஊறும்.  ரவையை வறுத்து மிக்சியிலோ மிஷினிலோ கொடுத்து மாவாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.  மாவாக ஆக்கிய ரவைக்கு மைதா மாவு தேவையில்லை.  அப்படியே உப்புச் சேர்த்து நீர் விட்டுப் பிசையலாம். மாவாக ஆக்காத ரவை எனில் ரவை,மைதா, உப்பை ஒன்றாகக் கலந்து கொண்டு பின்னர் நீரை விட்டுப் பிசையவும்.  பொடி ரவை எனில் உடனடியாகச் சேர்ந்தாற்போல் வரும்.  இல்லாவிட்டால் ரவை சேராமல் உதிராக வரும்.  அப்போது இன்னும் கொஞ்சம் நீர் விட்டு நன்கு அழுத்திப் பிசையவும்.  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

மாவு நன்கு ஊறியதும் நன்கு சேர்ந்து காணப்படும்.  மீண்டும் அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.  நிதானமான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  அரிசிமாவில் வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து நன்கு ஒரு விரலால் குழைக்கவும்.  நுரை வரும்படி குழைத்து வைக்கவும்.  இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப்போட்டு நீர் ஊற்றிப் பாகு வைக்கவும்.  பாகு இரட்டைக் கம்பிப் பதம் வர வேண்டும்.  அப்போது நிறுத்தவும்.  அடுப்பிலேயே பாகு இருக்கட்டும்.  இப்போது அடுப்பின் இன்னொரு பக்கம் வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைக்க வேண்டும். புகை வர ஆரம்பித்ததும் அடுப்பைத் தணிக்கவும்.  உருட்டி வைத்த உருண்டைகளில் ஒன்றைச் சப்பாத்தி போல் இட்டு மேலே அரிசிமாவுக் கலவையை  விரலால் எடுத்து நன்கு பரத்தவும்.  அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை இட்டுப் போடவும்.  மேலே போட்டதன் மேலேயும் அரிசிமாவுக் கலவையைப் பரத்தவும்.  அப்படியே சுருட்டவும்.  சுருட்டிய பாகம் நீளமாக இருக்கும்.  அதை அப்படியே மேலும் கீழுமாக வைத்து  அழுத்தி விட்டுஅப்பளம் இடவும்.

இதையும் நன்கு மடித்து முக்கோணமாக அல்லது வட்டமாக வேண்டுமெனில் வட்டமாகப் பூரியாக இடவும்.  காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  குத்தி விடவும். நன்கு உப்பி வரும். திருப்பி விட்டு  நன்கு வெந்ததும் அப்படியே பக்கத்தில் உள்ள ஜீராவில் போட்டு நனைக்கவும்.  நனைத்ததும் உடனே வெளியே எடுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்.  இப்படியே எல்லாவற்றையும் செய்து எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டு எடுத்து வைக்கவும்.  இதுக்கு எங்க வீட்டில் கலர் சேர்ப்பது இல்லை.  வெள்ளையாகவே இருக்கும். வேண்டுமானால் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஏலப்பொடி சேர்த்து  அதன் மேல் சூடாக ஊற்றி ஊற வைத்துப் பால் போளி மாதிரியும் சாப்பிடலாம்.  ஜீராவில் போளிகள் நன்கு முங்க வேண்டும். இரு பக்கமும் ஜீரா உள்ளே போகும்படியாக திருப்பிப் போட்டுப் பின்னரே எடுக்கணும்.

11 comments:

  1. வெளியில் வாங்குவது சரி... பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும்... உங்களின் செய்முறைப் படி செய்து பார்க்க சொல்கிறேன்... நன்றி...

    (நான்) இனிப்பாக உள்ளதால் அடியேனுக்கு சாப்பிட வாய்ப்பில்லை...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, வெளியே எதுக்கு வாங்கணும்?? எங்க வீட்டிலே அதிகமா வெளியே வாங்கவே நான் விட மாட்டேன். :))))என்ன இப்போ ஸ்வீட் சாப்பிட முடியாது அதான்! நீங்க என்னடான்னா இப்போவே இனிப்புனு சொல்றீங்களே! :(((((

      Delete
  2. நன்றி! ஆவலாகத்தான் இருக்கிறது! இந்த பாகு வைக்கிற சமாச்சாரமே லொள்ளு... ஒரு பொறுமையான நாளில் முயற்சிக்கலாம் என்று குறித்துக் கொண்டுள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. பாகு அதுவும் சர்க்கரைப் பாகு சீக்கிரமாகவே வந்துடும். :))))

      Delete
    2. நாங்கல்லாம் தனியாத் தான் செய்யறோம். :))) கிட்டேக் கூட வரமாட்டார்! வந்தால் எனக்கும் சரியா வராது! கோதுமை அல்வா கிளறினால் மட்டும் கொஞ்சம் கூப்பிடுவேன். அது குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் என்பதால். கோதுமைப் பால் வேகும் வரை கை மாற்றிக் கிளறிக் கொடுப்பார். அதுக்கே ரெண்டு பேருக்கும் சண்டை மண்டை உடையும். :))))))

      Delete
  3. ஜீரா போளி அருமையான குறிப்புகள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

      Delete
  4. கீதா, பதிவு படிச்சதுமே சாப்பிட்ட திருப்தி வந்துவிட்டது,.,

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இன்னிக்கு யதேச்சையா பரோட்டா செய்தேன். முதல்லே நினைவில் வரலை. அப்புறமா நினைப்பு வந்து கடைசி பரோட்டாவைப் போடறச்சே படம் எடுத்திருக்கேன். போடறேன், பாருங்க. :)))))

      Delete
  5. பார்க்கவே சூப்பரா இருக்கு! சாப்பிட்டிருக்கிறேன். அதனால் சுவை உணர முடிகிறது இப்போது! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், செய்து வைத்துக் கொள்ளலாம். முன்னெல்லாம் நினைச்சால் பண்ணிடுவேன். இப்போல்லாம் சாப்பிட யாரும் இல்லைனு பண்ணறதில்லை. :(

      Delete