எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, June 1, 2013

உண்மையா குலாப் ஜாமூன்னா என்னங்க?

எழுதலாமா வேண்டாமானு ஒரே யோசனை!  பின்னே? படம் போடலைனு சொல்வீங்களே!  இங்கே கிடைக்கிறதோ அந்த ரெடி மிக்ஸ் பவுடர் தான்.  அதிலே செய்து அதைப் படம் போட்டு அது பப்படமாத் தான் இருக்கும்.  குலாப் ஜாமூன்னா ஒரிஜினாலிடி வேண்டாமா?  அதோட ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிஞ்சதிலே இருந்து வீட்டிலே நோ ஸ்வீட்! ஆகவே இது பண்ணும்போது தான் படம் எடுக்கணும்.

இந்தப் பொருட்கள் வேணும்.  தயார் செய்துக்குங்க.  சர்க்கரை போடாத கோவா    அரை கிலோ, ஹிஹிஹி, நிறையனு தோணித்துன்னா கால் கிலோ போதும். மைதா மாவு ஒரு சின்னக் கிண்ணம், அரைக் கிலோ சர்க்கரை கால்கிலோ கோவாவுக்குச் சரியா இருக்கும்.  ரோஸ் எசென்ஸ் ஒரு துளி, ஏலக்காய்ப்  பொடி கால் டீஸ்பூன். பாகு வைக்க ஒரு கரண்டி நீர்.  பொரிக்க நல்ல நெய் இருந்தால் நல்லது.  இல்லைனா சமையல் எண்ணெய் ஏதானும்.

கோவாவை நன்கு கைகளால் பிசைந்து கொண்டு அதில் மைதாமாவைச் சேர்க்கவும்.  மீண்டும் நன்கு பிசையவும்.  கோவாவில் உள்ள இளகிய தன்மையே போதும்.  நன்கு பிசைந்து மேலே வெடிப்புக்கள் இல்லாமல் உருண்டை ஒரு பந்து போன்ற பதத்துக்கு வந்ததும், அதைத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டவும்.  கால் கிலோ கோவாவுக்கு நிதானமாக ஐம்பது உருண்டைகள் வரை வரலாம்.  இப்போது அடுப்பில் ஒரு பக்கம் அடி கனமான பாத்திரம் அல்லது உருளியில், சர்க்கரையைப் போட்டு ஒரு கரண்டி நீரை விடவும்.  பாகு காய்ச்ச வேண்டும்.  சர்க்கரை கரைய ஆரம்பித்ததும், அரைக்கரண்டி பாலை விட்டுச் சர்க்கரையில் உள்ள அழுக்கை எல்லாம் எடுத்துவிட வேண்டும்.  நிஜம்மாவே கறுப்பாக நுரைத்துக் கொண்டு மேலே வரும்.  அதை எல்லாம் எடுத்துடுங்க.

இப்போ அடுப்பின் இன்னொரு பக்கத்தில் வாணலியைப் போட்டுச் சமையல் எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெய் அல்லது நெய் புகைய ஆரம்பித்ததும் அடுப்பைத் தணிக்கவும். (இது முக்கியம்.  இல்லைனா காலா ஜாமூனாக ஆரம்பத்திலே ஆயிடும்) உருட்டி வைத்த உருண்டைகளை நாலைந்தாக எண்ணெயில் போடவும்.  நன்கு திருப்பிக் கொடுக்கவும்.  இதற்குள்ளாகச் சர்க்கரை ஒற்றைக் கம்பிப் பாகு வந்திருக்கும்.  அதைக் கிளறிப் பார்த்துக் கையில் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வரும்.  பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.  பாகைக் கீழே இறக்கிவிட்டு ரோஸ் எசென்ஸ், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி வைக்கவும்.

எண்ணெயில் போட்ட ஜாமூன் உருண்டைகள் சிவந்து கொண்டு மெல்லிய பிரவுன் நிறத்துக்கு வரும்.  அப்போது அவற்றை எடுத்துப் பாகில் போட்டுக் கரண்டியால் திருப்பி விடவும். உருண்டைகள் உடையாமல் திருப்ப வேண்டும். இது போல எல்லா ஜாமூன் உருண்டைகளையும் நன்கு வேக வைத்துப் பாகில் போடவும்.  பாகில் நன்கு ஊறக் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.  எல்லா உருண்டைகளும் பாகை இழுத்துக் கொண்டிருக்கும்.  பாத்திரத்தில் பாகே இருக்காது.  இப்போது எடுத்து ஒரு பேசினில் பரவலாக வைக்கவும்.  நம்ம ஊரில் தான் குலாப் ஜாமூனைப் பாகோடு சாப்பிடுவது எல்லாம்.  இங்கே இருந்த வரை அப்படித்தான் சாப்பிடணும்னு நினைச்சிட்டிருந்தேனா! முதல் முதலா 74-ஆம் வருஷம் ராஜஸ்தான் குடித்தனம் போனப்போ அங்கே சாப்பிட்டதும் தான் தெரிஞ்சது பாகில் ஊறினால் போதும்னு!  உருண்டைகள் கையிலும் ஒட்டாது. பிசுக் பிசுக்குனு எல்லாம் இருக்காது.  அடுத்து ஸ்டஃப்ட் குலாப்ஜாமூனும், உருளைக்கிழங்கு ஜாமூனும் வரும் நாட்களில் பார்க்கலாம்.

22 comments:

  1. வீட்டில் சூப்பராக செய்வார்கள்... ஊருக்கு வாங்க...

    ReplyDelete
    Replies
    1. வரோம், வரோம். கட்டாயமா வரோம்.

      Delete
  2. பாகில் ஊறின குலோப்ஜாமூன் அருமை..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

      Delete
  3. விளக்கமாப் போட்டுருக்கீங்க... ஆனால் செய்யும் பொறுமை...... பொறுமை... அதுதான் நம்ம கிட்டக் கிடையாது....!!!! :)))

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இருக்கிறதிலேயே இந்த ஸ்வீட் தான் செய்ய, சாப்பிட சுலபமானது! :)))))

      Delete
    2. ஹாஹாஹா, செய்யவும் சுலபம் தான்.

      Delete
  4. படிக்கவே கஸ்டமா இருக்குங்க.. யாராவது ரெண்டு குலோப்ஜாமூன் கொண்டாங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க என்னிக்குனு சொன்னால் பண்ணி வைக்கிறேன்.

      Delete
  5. இதை வீட்டில் யாராவது செய்வார்களா என்ன?

    தனபாலன், நிஜமாவா சொல்றீங்க.. அடுத்த ட்ரிப் நேரா திண்டுக்கல் தான்.

    ReplyDelete
  6. இதை வீட்டில் யாராவது செய்வார்களா என்ன?//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருங்க இருங்க, கடைகளிலே விற்கும் அந்த ரெடிமேட் குலாப்ஜாமூன் பவுடரை வாங்கி அரைகுறையா உருட்டி உள்ளே மாவு உருண்டையா வேகாம வாயிலே கடிபடும் அப்படிப் பண்ணி வைக்கிறேன். அப்புறமாத் தான் உண்மையான குலாப்ஜாமூனையும் ஸ்வீட்டுனு ஒத்துப்பீங்க! :))))))))

    ReplyDelete
    Replies
    1. இப்பத்தான் விஷயம் வெளில வருது.. வேகாம வாயில கடிபட்டா கடைல வாங்கினதா சொல்லிடறதா.. நல்லா இருக்கே டெக்குனிக்கு?

      (இதையெல்லாம் வீட்டுல செய்யுறாப்புல கற்பனை கூட செய்யமுடியலே.. என்ன செய்யறது சொல்லுங்க?)

      Delete
    2. பல முறை வீட்டிலே செய்திருக்கேன் அப்பாதுரை. ரெடிமேட் பவுடரெல்லாம் வாங்கினதில்லை. அதில் செய்தால் நடுவில் உருண்டைகள் சரியாக வேகாமல் கடிபடும். :)))) ஒரு தரம் வாங்கிப் பார்க்கணும். அதுக்கு நீங்க இந்தியா வர நேரம் தான் சரினு நினைக்கிறேன். எப்பூடி வசதி??? :))))))

      Delete
  7. ஆஹா அருமை.......

    அடுத்து எப்ப செய்யப் போறீங்கன்னு சொல்லிடுங்க! நான் வரலாம்னு இருக்கேன

    ReplyDelete
    Replies
    1. வாங்க, எங்கே, அதான் அப்புறமா வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லையே! :(

      Delete
    2. பிடிச்சீங்களே..வெங்கட் நல்லா மாட்டினாரு.

      Delete
    3. ஹாஹா, அவர் சாப்பிட்டிருக்கார். அதுவும் என்னோட மைசூர் பாகை. எப்படி இருந்ததுனு கேட்டுச் சொல்லுங்க. அதுவும் ரிஷபன் மிகவும் ரசித்தார்!:)))))))

      Delete
  8. காலா ஜாமூன்னு ஒரு ஸ்வீட் பார்த்திருக்கனே, தீஞ்சு போனது தான் ரகசியமா?

    ReplyDelete
    Replies
    1. காலா ஜாமூன் செய்முறையே கொஞ்சம் கறுப்பாக எடுப்பது தான். அதிலே தான் அதிகமா ஸ்டஃப் பண்ணுவாங்க. :))))) உள்ளே ஸ்டஃப் வேகணும்ங்கறதுக்காகக் கூடுதலா வேக வைக்கிறதாலே இருக்குமோ என்னமோ!! :)))

      Delete
  9. யாரும் தொடர்ந்து படிக்க மாட்டாங்க. படிச்சாலும் படிச்சதை நினைவுல வச்சுக்கமாட்டாங்கன்னு ஆரம்பத்துலேயெ உங்கள் நினைப்பு போலிருக்கு.

    "அடுத்து ஸ்டஃப்ட் குலாப்ஜாமூனும், உருளைக்கிழங்கு ஜாமூனும் வரும் நாட்களில் பார்க்கலாம்."

    'நானும் தேடித் தேடிப் பார்த்தேன். ஸ்டஃப்டு ஜாமூனும் உருளைக்கிழங்கு ஜாமூனும் என் கண்ணுல படலை.

    ReplyDelete
    Replies
    1. உருளைக்கிழங்கு ஜாமூனும் காலா ஸ்டஃப்டு ஜாமூனும் செய்யவே முடியலை. அப்புறம் எங்கே போடறது! :( அதான் போடலை!

      Delete