எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, April 4, 2013

ஆரஞ்சுப் பழத்திலே என்னெல்லாம் பண்ணலாம்?

எதிர் வீட்டிலே ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொடுத்தாங்க.  ஆரஞ்சுப் பழம் உடம்புக்கு ரொம்பவே நல்லது.  எல்லாவகையிலும் நன்மை தரும் பழம் அது.  சர்க்கரை நோய்க்காரங்க கூடச் சாப்பிடலாம். ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரிச்சுச் சாப்பிட்டேன்.  தோலை எறியலாமானு யோசிக்கையில் அம்மா செய்யும் துவையலும் புளிப்பச்சடியும் நினைவில் வந்தது.  பிறந்த வீட்டோடு சில சமையல் பக்குவங்கள் போயாச்சு.  சிலது இங்கே இவங்களுக்கும் பிடிச்சால் செய்யறது உண்டு.  ஆனால் இந்த ஆரஞ்சுத் தோலில் இன்னும் செய்து காட்டலை.  நார்த்தங்காயில் புளிப்பச்சடி செய்திருக்கேன். வேறே வழியே இல்லைனு கால் ஸ்பூன் போட்டுப்பார்.

இன்னிக்கு ஆரஞ்சுத் தோலில் துவையலும் பச்சடியும் செய்துடலாம்னு ஒரு எண்ணம்.

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுப் பழத்தின் தோல் ஒரு கிண்ணம், சின்னச் சின்னதாகக் கிள்ளிக் கொள்ளுங்கள் அல்லது நறுக்கிக் கொள்ளுங்கள்.  மி.வத்தல் ஆறிலிருந்து பத்துவரை(அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) உப்பு, தேவையான அளவு, இஞ்சி(தேவையானால்) ஒரு துண்டு, பெருங்காயம், ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுப் புளி, கடுகு, உளுத்தம்பருப்பு. வதக்க நல்லெண்ணெய்

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்துத் தனியாக வைக்கவும்.  கடுகு, உபருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும்.  பின்னர் மிச்சம் எண்ணெய் இருந்தால் அதிலேயே அல்லது தேவைப்பட்டால் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஆரஞ்சுத் தோலையும், இஞ்சியையும் (சிதைத்துப் போட்டு) நன்கு சுருள வதக்கவும்.  ஆற விடவும். மிக்சி ஜாரில் மி.வத்தல், புளி, ஆரஞ்சுத் தோல், இஞ்சி, பெருங்காயம், உப்புச் சேர்த்துக் கொஞ்சம் நீர் ஊற்றி அரைக்கவும்  நன்கு அரைத்ததும் தனியாக வைத்துள்ள கடுகு, உபருப்பைச் சேர்த்து ஒரே சுற்றுச் சுற்றி எடுக்கவும்.  கடுகு, உபருப்புச் சேர்த்தால் ரொம்ப அரைக்கக் கூடாது.  சூடான சாதத்தில் துவையலைப் போட்டுக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

புளிப்பச்சடி:  ஆரஞ்சுத் தோல் ஒரு கிண்ணம், புளி எலுமிச்சை அளவு ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பெருங்காயம், மி.வத்தல் நான்கு, பச்சை மிளகாய் நான்கு, மி.பொடி தேவையானால் ஒரு டீஸ்பூன், வெல்லம் தேவையானால் ஒரு டீஸ்பூன், தாளிக்க, வதக்கத் தேவையான எண்ணெய் ஒரு குழிக்கரண்டியில். நல்லெண்ணெயாக இருத்தல் நல்லது.  கடுகு, வெந்தயம், கருகப்பிலை.


அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மி.வத்தல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.  ஆரஞ்சுத் தோலையும் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.  நன்கு சுருள வதங்கியதும் புளிக் கரைசலைச் சேர்த்து உப்புச் சேர்க்கவும்.  கொதிக்கவிடவும்.  நன்கு கொதித்துச் சேரும்போது கொஞ்சம் வெல்லம் சேர்க்கவும்.  வெல்லம் கரையும் வரை கொதித்ததும் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  இது வாரக்கணக்கில் வீணாகாது.  வாய் அருவருப்பாய் உணரும்போது இதைப் போட்டுக் கொண்டு ஒரு பிடி சாதம் சூடாய்ச் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.  அதிக உமிழ்நீர் சுரந்தாலோ, உமிழ்நீரே சுரக்காமலோ இருந்தாலோ இது சாப்பிடுவது நன்மை தரும்.

15 comments:

  1. ஆரஞ்சுத் தோலில் துவையலும் பச்சடியுமா...! வாழ்க எதிர் வீடு...

    செய்து பார்த்திடுவோம்... நன்றி...

    ReplyDelete
  2. ஹிஹி.... படிச்சு வச்சுகிட்டேன்!

    ReplyDelete
  3. வாங்க டிடி, பித்தவாந்தி, வயிற்றுப் பிரட்டலுக்கு ரொம்பவே நல்லது. முயன்று பாருங்க. :))))

    ReplyDelete
  4. ஸ்ரீராம், முயற்சி செய்யுங்க, பாஸை ஐஸ் வைச்சுப் பாருங்க. :))))

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல ஐடியா. இதுவ்ரை ஜாம் மட்டுமே ஆரஞ்ச்னு நினைச்சிருந்தேன். அப்போ ஆரஞ்சு சாதமும் பண்ணலாம் போல இருக்கே.!

    ReplyDelete
  6. ஆரஞ்சிலே சாதம் பண்ணலாம் வல்லி, கொட்டை நீக்கிச் சுளைகளை எடுத்துக்கொண்டு, வெங்காயம் வதக்கி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, கூடவே ஆப்பிள் பழம், மாதுளை முத்துக்களையும் சேர்த்து, பாதாம், முந்திரியால் அலங்கரித்தால் காஷ்மீரி புலவ் தயார். விரிவாகப் பின்னர் எழுதறேன். நல்ல பாஸ்மதி அரிசி வேண்டும் அதுக்கு.

    ReplyDelete
  7. ஆரஞ்சு தோலின் கசப்பு போகுமோ? இல்லை பாகற்காய் போல கொஞ்சம் இருந்துகிட்டே இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. ஆரஞ்சுத் தோலில் கசப்பு இருக்குமா அப்பாதுரை? கொஞ்சம் புளிப்புக் கலந்த சுவைதான் எனக்குத் தெரியும். :)))) அப்படியே கசப்பு இருந்தாலும் உடலுக்கு நன்மையே தரும்.

      Delete
    2. அப்பாஜி, ஒரு வாட்டி நீங்க இதைப்பண்ணி சாப்பிடுங்களேன் - it has the citrus tinge! quite tangy and delicious.. தச்சுமம்முவுக்கு பெஸ்ட் காம்பினேஷனாக்கும்! கசப்பெல்லாம் போயே போயிடும்.. அதா உப்பு புளி காரம் + கடைசியில் வெல்லம் போடுறோமே.. it will be yummy, try it!

      Delete
  8. வித்தியாசமா இருக்கு கீத்தாம்மா. புளிப்பச்சடி நாங்களும் நாரத்தையில் செய்வோம். இங்கே நாரத்தை ஏது? ஆகவே அதே பக்குவத்தில் பாகற்காயில் செஞ்சுட்டு வந்தேன். உங்க குறிப்பு படிச்சப்புறம் ஆரஞ்சுத்தோலிலும் அதே ருசியுடன் செய்யலாம் போலிருக்கு.

    சாத்துக்குடித்தோலிலும் நல்லா வரும்ன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமைதி, நாரத்தை புளிப்பச்சடி போல் ஆரஞ்சுப் பழச் சுளைகளைப் போட்டும் பண்ணலாம். தோலிலும் பண்ணலாம். சாத்துக்குடித் தோலில் எந்தச் சுவையும் இருக்காது. ஆகவே அதிலே செய்து பார்க்கலை. :))))

      Delete
    2. சாத்துக்குடி தோல் ரொம்பவே கசக்கும். அதே மாதிரி mandrin oranges முயன்று பார்த்தேன். ஒரிஜினல் டேஸ்ட் வரலை. கமலா ஆரஞ்சு தான் பெஸ்டு!

      Delete
    3. மான்ட்ரின் ஆரஞ்சுத் தோல் பச்சடிதான் இன்னிக்கு! :))))

      Delete
  9. துகையல் சூப்பரோ சூப்பர் ரெஸிப்பி.. பச்செடி நம்மாத்துலேயும் பண்றது. நாக்குல வெச்சா.. அப்பா... சூப்பர் ருசி.. நம்மாத்துல கா.மிளகாய் போடமாட்டோம். ஒன்லி பச்சை மிளகாய்.இதையும் ட்ரை பண்ணிட வேண்டியது தான்.. ஜூரம் வரும் சமயத்தில் துகையல் படு தூக்கலா இருக்குமே! லவ் இட்!கமலா சீஸனுக்கு வெயிட்டிங்! :)நன்றி மாத்தா! இதுக்கு தான் சொல்றது ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, அநன்யா அக்கா, அடுத்தடுத்து வருகை தந்திருக்காங்க. ரங்க்ஸோட சமையல் அவ்வளவு சூப்பரா?? ஜமாயுங்க! :))))

      Delete