எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 16, 2012

உங்க ஊரில் மாவடு வர ஆரம்பிச்சுட்டதா?

இப்போ ஊறுகாய் போடும் பருவம் ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நாட்களில் மாவடு, மாங்காய் வர ஆரம்பித்துவிடும். முதல்லே மாவடு போடுவது எப்படினு பார்க்கலாமா? மாவடு பலருக்கும் பிடிக்கும் என்றாலும் யாரும் வீட்டில் போடுவதில்லை. அது என்னமோ பெரிய வேலைனு நினைக்கிறாங்க போல. இல்லை; மாவடு போடுவது ரொம்பவே எளிதான ஒன்று. எப்படினு கேட்கிறீங்களா?

முதல்லே மாவடு சீசனில் கிடைக்கும் நல்ல உருண்டை வடுவாக வாங்கிக் கொள்ளவும். விலையா? அதிகம் இல்லை ஜென்டில் உமன்! கிலோ 100ரூபாய்னு தான் சொல்வாங்க. :)))))

உருண்டை வடு கிடைக்கலையா? சரி,கவலை படேல். நீள வடுவே வாங்கிக்கலாம். எந்த வடுவானாலும் காம்புகளோடு இருக்கணும். கூடியவரை எடை போட்டு வாங்குங்க. படியில் அளந்து வாங்க வேண்டாம். இப்போ மூன்று கிலோ மாவடுக்குத் தேவையான பொருட்கள்.

மிளகாய் வற்றல் 100 கிராம்(காரம் வேண்டுமெனில் கூட வைச்சுக்கலாம்.), கடுகு 50 கிராம், மஞ்சள்(பச்சை கிடைத்தால் நல்லது, இல்லையெனில் மஞ்சள் தூள்) விளக்கெண்ணெய் நூறு கிராம். பெருங்காயம் தேவை இல்லை.

உப்பு இதான் முக்கியமான ஒன்று முன்பெல்லாம் ஒரு படி மாவடுக்கு 1/8 படி உப்பு அதாவது சென்னை அளவில் ஆழாக்கு உப்பு என்ற கணக்கு உண்டு. இப்போக்கிலோவில் என்பதால் உப்பு மூன்றுகிலோ மாவடுக்கும் சேர்த்து 300 கிராம் எடுத்துக்கொள்ளவும். அல்லது ஆழாக்கில் இரண்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு சிலர் உப்பை நீர் விட்டுக் காய்ச்சி ஆற வைத்து விடுவார்கள். அப்படியும் விடலாம். உப்பை அப்படியே வெறும் வாணலியில் வறுத்தும் போடலாம்.

மாவடுவை நன்கு கழுவி நீரை வடிகட்டிக்கொள்ளவும். மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அல்லது பொடியாகவும் செய்து கொள்ளலாம். எப்படியும் நீர் விட்டுக்கொண்டு விடும். ஆகையால் அதிகம் நீர் சேர்க்காமல் பொடியாகவே வைத்துக்கொள்ளலாம்.

ஊறுகாய் போடும் ஜாடியில் அடியில் கொஞ்சம் உப்பு, மிளகாய்,கடுகு, மஞ்சள் கலவை போட்டுவிட்டு அதன் மேல் மாவடு ஒரு கை போடவும். இப்போது மீண்டும் உப்பு, மிளகாய்க்கலவை, திரும்ப மாவடு என்று இரண்டும் முழுதும் போட்டு முடிக்கவும். கடைசியில் மிச்சம் இருக்கும் உப்பு,மிளகாய்க் கலவையை மேலே போட்டுவிட்டு விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டுக் கிளற வேண்டாம். அப்படியே மூடி வைக்கவும்.

மறுநாள் திறந்து பார்த்தால் கொஞ்சம் ஜலம் விட்டிருக்கும். இப்போது நன்கு கிளறிவிடவும். கிளறுவதற்கு மரக்கரண்டிகளையே பயன்படுத்தவும். குறைந்தது நான்கு, ஐந்து நாட்கள் இப்படிக் கிளறிவிட்டுக்கொண்டே வந்தால் மாவடு சுருங்க ஆரம்பிக்கும். நன்கு சுருங்கிவிட்டதெனில் மாவடு நன்கு ஊறி இருப்பதாகப் பொருள். எடுத்துப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். மறக்காமல் தினமும் ஒரு முறை கிளறிவிட வேண்டும்.

ஒரு சிலர் மாவடு சுருங்கினால் வெடுக்கென இருக்காது என நினைத்துக்கொண்டு அதில் ஐஸைப் போடுவது, அல்லது குளிர்பெட்டியில் வைப்பது, உப்பை நிறையவும் போட்டு ஐஸையும் போடுவது எனச் செய்வார்கள். இவை எதுவுமே தேவை இல்லை. தேவையான உப்பைப் போட்டுவிட்டுத் தினமும் கிளறிக் கொடுத்துவந்தாலே போதுமானது. ஒரு வருடம் ஆனாலும் வெளியேயே வைத்திருக்கலாம்; வீணாகாது.

15 comments:

  1. Nice recipe Maami... but mostly my grandma send it for me, so never tried. Will see this year...;)

    ReplyDelete
  2. கனடாவில் மாவடு கிடைக்குதா???????????????????????????

    ReplyDelete
  3. பேசாமப் பாட்டி அனுப்பறதையே சாப்பிடுங்க. கோவிந்து பாவம்! :)))) ரிஸ்க் எடுக்க வேண்டாம். :))))))

    ReplyDelete
  4. இங்க மாவடு லேது மாமி... மாவாடு வேணா இருக்கா...:))) கோவிந்த் பாவமா? ஏன் என்னை பாத்தா உங்களுக்கெல்லாம் பாவம்னு தோணவே தோணாதா... அவ்வ்வ்வ்...

    Nice talking to you today...take care...;)

    ReplyDelete
  5. ஓ ! வந்துடுத்தே! 777 மாவடு வரது இப்ப 2 மாசங்களா ! படேகர் , ப்ரியா மதர்ஸ் ஸ்பெஷல் நு வாய்ல வைக்க முடியாம இருக்கும் .
    777 பாத்துட்டு மகிழ்ந்துட்டேன் .தயிர்ஞ்சாதமும் வடுவும் அட்டகாசமே! சாம்பார், ரசப்பொடினுன்னு கொஞ்சம் கடைக்காரரிடம் மெதுவா ராகம் பாடினேன்! . ஹமாரேலியே கரீதா , ஆப் ஏக் பீஸ் லே லீஜியேனு மஹானுபாவர் வழங்கிட்டார் ,என் பொடியும் நன்னாதான் இருக்கும் என்ன நம்ப ஊர்ல மாதிரி அவ்வளவு ஃபைனா திரிச்சிருக்காது . சுமீத் எவ்வளவு பண்ணுமோ அவ்வளவே :)

    ReplyDelete
  6. வாங்க ஜெயஶ்ரீ, 777 இன்னமும் இருக்கா? தெரியாது. :)))))

    நான் இங்கே யு.எஸ். வந்தால் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் தனித்தனியாக் கிடைப்பதை வாங்கிக் கொண்டு பருப்புக்களையும், வெந்தயம், மிளகு போன்றவற்றையும் வறுத்து அரைத்துச் சேர்த்து சாம்பார் பொடி, ரசப்பொடி செய்து வைத்துவிடுவேன். இங்கே பெண்ணுக்கும், மாட்டுப்பெண்ணுக்கும் அது கொஞ்சம் வசதியாக இருக்கு. :))))))

    இந்தியாவிலே இருந்து கொஞ்சம் தான் கொண்டுவர முடியுது. மிக்சியிலே தான் திரிக்கிறேன்.

    ReplyDelete
  7. மாவடு வந்துட்டதா தெரியவில்லை. நீங்க சொன்னதும் தான் நினைவே வந்தது. எங்க வீட்டில் பூக்கள் நிறைய வந்திருக்கு. பார்க்கலாம் எவ்வளவு தேறுகிறது என்று.:)

    ReplyDelete
  8. வாங்க வல்லி, எங்க வீட்டு மாமரத்தைப்பக்கத்திலே ஃப்ளாட் கட்டினவங்க அடியோடு அழித்துவிட்டார்கள். காப்பாற்ற முனைந்தோம். கான்க்ரீட் கலவைகள் வேரை அடியோடு நாசம் செய்துவிட்டது. :((((((

    ReplyDelete
  9. ஐயோ...மறந்து விட்டதே...மாவடுவா...தஞ்சாவூர்க் குடைமிளகாய் விற்றுத் தீர்ந்திருக்குமே....கிளம்பி நாளை ஓடணும்!

    வடுமாங்காய் காம்போடு எடை போடும்போது ஒரு கிலோவுக்கு எவ்வளவு நிற்கும்கறீங்க....ரொம்பக் கம்மி!

    கொஞ்சம் கலவை, கொஞ்சம் மாவடு...ஓகே ஓகே நல்ல யோசனை அப்படியே போட்டு குலுக்குவோம் நாங்கள்!

    ReplyDelete
  10. வடுமாங்காய் காம்போடு எடை போடும்போது ஒரு கிலோவுக்கு எவ்வளவு நிற்கும்கறீங்க....ரொம்பக் கம்மி! //

    வாங்க, வாங்க, காணோமேனு நினைச்சேன். காம்புனா நீளமா எல்லாம் இருக்கக் கூடாது. ஆனால் சென்னை வியாபாரிகள்....... பார்க்கலாம்!

    நாங்க ஒருத்தர் கிட்டே சொல்லி வைச்சு வாங்குவோம். காம்போடுதான். ஆனால் காம்பு கொஞ்சம் தான் நீளமா இருக்கும். காம்பு இல்லைனா மாவடு அழுகிப் போயிடும். ஆகவே கூடியவரை காம்போடயே வாங்குங்க. மாவடு புதிதாக இறக்கியது என்றால் நல்லது. அதுவும் கோயம்பேட்டில் கிடைக்குமா? தெரியலை.

    ReplyDelete
  11. அடுத்து மோர் மிளகாய் வச்சுக்கலாமா?
    தஞ்சாவூர் குடமிளகாய்னதும் அது நினைவில் வந்தது. :))))))

    ReplyDelete
  12. //காம்புனா நீளமா எல்லாம் இருக்கக் கூடாது.//

    மதுரையில் அழகர் கோவில் வடு என்று கிடைக்கும்...இங்கே அப்படிக் கிடைப்பதில்லை! (மதுரையில் கிடைக்கும் அந்த மதுரைச் சுண்டைக்காய்க் கூட அங்கு போகும்போது வாங்கி வந்தால்தான் உண்டு!)

    கோயம்பேடோ, மாம்பலம் மார்க்கெட்டோ, மாவடு காம்புடன் என்று சொன்னால் காம்புடன் அல்ல, கிளையுடன் தருகிறார்கள்!!! ஒரு கிலோவுக்கு பதினைந்து வடு நிற்குமளவு 'அளக்கி'றார்கள். நம் மாவடு ஆசையை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

    மிளகாய் சீசனே முடியும் நேரம்...இளமிளகாய் முடிந்து போய் இருக்கும்! அட, மிளகாயைத் தேடுவதே கஷ்டம்.

    மோர் மிளகாய் பற்றி எழுதுங்கள். நாங்களும் போடுவது வழக்கம் என்றாலும் அதிலும் எதாவது எக்ஸ்ட்ரா பாய்ண்ட்ஸ் கிடைக்கும். நீங்கள் புளி மிளகாய் போடுவீர்களோ...

    ReplyDelete
  13. மதுரையில் அழகர் கோவில் வடு என்று கிடைக்கும்...இங்கே அப்படிக் கிடைப்பதில்லை! (மதுரையில் கிடைக்கும் அந்த மதுரைச் சுண்டைக்காய்க் கூட அங்கு போகும்போது வாங்கி வந்தால்தான் உண்டு!)//

    ஆஹா, அம்மூரா நீங்க! :)))) அழகர் கோயில் வடுனு இப்போ எழுதித் தான் பார்த்துக்கிறேன். அம்மாவோட போச்சு எல்லாம்! :(

    புளிமிளகாய் போடாமலா? கல் தோசைக்கு முன்னெல்லாம் அதான் காம்பினேஷன்! :)))

    இப்போ இருக்கும் தக்காளிச் சட்னியெல்லாம் அப்போ அவ்வளவாக் கிடையாது. எப்போவோ அம்மா பண்ணுவா. தக்காளியையும், வெங்காயத்தையும் வதக்கி. ஆனால் புளிமிளகாய் இல்லாமல் இருக்காது. அதுக்குனே பிஞ்சு மிளகாயாச் சின்னக்கடையிலே வாங்குவா.

    ReplyDelete
  14. இதன் எழுத்ாதாளர் ,கீதா சாம்பசிவத்துக்கு
    என் மனமார்ந்த நன்றி !

    i dont copied it ; but give your website link for otehrs to share and search and spread urs spl.
    keep it up your great work !











    ReplyDelete
  15. fantastic link !
    இதன் எழுத்தாளர் ,கீதா சாம்பசிவத்துக்கு
    என் மனமார்ந்த நன்றி !
    i didn't copied ur receipies but gave the blog link for others to spread urs spl .
    keep it up









    ReplyDelete