எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 2, 2018

உணவே மருந்து! கீரை வகைகள்! முடிவு! திப்பிசம் ஆரம்பம்!

இன்னும் சில கீரை வகைகள் இருந்தாலும் அவற்றைச் சமைத்துப் பார்க்காமல் எப்படிச் சொல்வது? ஆகவே சொல்லவில்லை. அவற்றில் கல்யாண முருங்கை, புண்ணக்கீரை, தும்பைக்கீரை, மணலிக்கீரை, காசினிக்கீரை, (சிலர் புளிச்ச கீரை தான் காசினி என்கின்றனர்!) அதே போல் சக்கரவர்த்திக்கீரை(பருப்புக்கீரை தான் அப்படி அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.)சாணக்கீரை, வெள்ளைக்கீரை, விழுதுக்கீரை, ஆரக்கீரை, துத்தி, குப்பைக்கீரை (குப்பைமேனி அல்ல)  போன்றவை அடங்கும்.  இவற்றில் க்ளாவர் போன்ற அமைப்புடன் இருக்கும் ஆரக்கீரை நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்து எனச் சொல்லப்படுகிறது. பொதுவாகவே பச்சைக்காய்களும், கீரை வகைகளும் உடல் நலத்துக்கு ஏற்றவை.  கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சாப்பிட்டாலே போதும். கீரை வகைகள் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகின்றன.
Image result for ஆரக்கீரை

ஆரக்கீரை

மேற்சொன்ன கீரைவகைகளைச் சமைத்தது இல்லை. ஆகவே சொல்லவில்லை. இப்போச் சில திப்பிச வேலைகளைச் சொல்றேன். முந்தாநாளைக்கு இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி அரைச்சேன். மிஞ்சிப் போச்சு. சரினு நேத்திக்குக்கொஞ்சம் போல் கொ.வி. க.ப.து.ப. நனைச்சு வைச்சுக் கொஞ்சூண்டு தேங்காயோடு அரைச்சுச் சட்னியில் கொஞ்சம் எடுத்துக் கலந்துகொண்டு தயிரில் கலந்தேன். உப்புப் பார்த்துப் போடணும். ஏனெனில் சட்னிக்கு உப்புப் போட்டு அரைச்சிருக்கோமே! தயிரில் கலந்தது நிறைய இருக்கவே அவ்வளவு செலவாகாதுனு கொஞ்சம் எடுத்து வைச்சுட்டு மிச்சம் இருக்கும் கலவைக் குழம்பில்,மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள், தயிருக்குத் தேவையான உப்பு மட்டும் போட்டு சேப்பங்கிழங்கை வேகவைத்துக் கலந்து அடுப்பில் வைத்துச் சூடு பண்ணினேன். நன்கு கொதித்து வந்ததும் கீழே இறக்கித் தே.எண்ணெயில் கடுகு, வெந்தயம், கருகப்பிலை, பாதி மி.வ. தாளித்தேன். மோர்க்குழம்பு ரெடி. இன்னொரு நாளைக்குக் குளிர்சாதனப் பெட்டியில் உப்புச் சேர்க்கப்படாமல் கொதிக்க வைக்கப்படாமல் தயார் ஆகக் காத்துட்டு இருக்கு.

Image result for மோர்க்குழம்பு செய்முறை

அப்படியும்கொஞ்சம் சட்னி மிச்சம் தான்! எல்லாம் இந்த ரங்க்ஸை நம்ப முடியறதே இல்லை. ஒரு நாளைக்குப் போட்டுப்பார். ஒரு நாளைக்குப் போட்டுக்க மாட்டார். அதுக்காகக் கொஞ்சமா அரைச்சாப் பாத்திரத்தைத் தடவவா முடியும்! மிஞ்சின சட்னியை என்ன செய்யறதுனு ம.கு. இன்னிக்கு மத்தியானம் சாப்பாடுக்குக் காய் என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ 2 நாள் முன்னர் பீன்ஸ், காரட் கறிக்கு நறுக்கி மிஞ்சி இருந்த பீன்ஸ், காரட் துண்டங்கள் நினைவில் வந்தன. ஒரு சின்னத் துண்டு பறங்கிக்காயும் இருந்தது. அதையும் நறுக்கி அவற்றோடு சேர்த்து நன்கு நீர் விட்டுக் கழுவி வடிகட்டி வைத்துக் கொண்டேன். சின்னக்குக்கரில் இரண்டு டீஸ்பூன் பாசிப்பருப்பைக் கழுவிச் சேர்த்தேன். ஒரு தம்பளர் நீர் ஊற்றினேன். அலம்பி வைத்திருந்த காய்களையும் அதில் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு இரண்டு விசில் கொடுத்து இறக்கினேன். பின்னர் திறந்து அதில் மிச்சம் இருக்கும் சட்னி விழுதைக் கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கினேன். தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மி.வத்தல் பாதி, கருகப்பிலை தாளித்துக் கொஞ்சம் துருவிய தேங்காயை இரண்டு டீஸ்பூன் போட்டு வறுத்துக் கூட்டில் சேர்த்தேன். கூட்டு நன்றாக இருந்தது. என்னோட அம்மா பொரிச்ச கூட்டுப்பண்ணுவது எனில் காய்களை வேகவைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, அரை ஸ்பூன் சாம்பார்ப் பொடி போட்டு வெறும் தேங்காயும், அரிசியும் மட்டும் அரைச்சு விடுவார். அநேகமாக நான் தான் அம்மியில் அரைத்துக் கொடுப்பேன் என்பதால் நன்றாகத் தெரியும். பொரிச்ச கூட்டில் பருப்பு இருக்காது.  அநேகமா என் பிறந்த வீட்டில் பொரிச்ச கூட்டு எனில் பருப்பு இல்லாமலே செய்வாங்க. புளி விட்ட கூட்டு எனில் கொஞ்சமாகத் துவரம்பருப்பு குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். பொரிச்ச குழம்பு என்றால் தான் பாசிப்பருப்போ, துவரம்பருப்போ போடுவார்கள்.

இது போலத் தான் முன்னர் ஒரு நாள் மோர்க்குழம்பு வைத்தது மிஞ்சிப் போயிற்று. அதிலிருந்தே இப்போல்லாம் மோர்க்குழம்புக்கு அரைத்துக் கலக்கும்போதே கொஞ்சமாக் கலக்கிப்பேன். நிறைய இருந்தா எடுத்துத் தனியே வைச்சுடுவேன் இன்னொரு நாளைக்கு ஆகட்டும் என! ஆனா அன்னிக்கு என்ன செய்யறது, இவ்வளவு நல்ல மோர்க்குழம்பைனு நினைச்சப்போ தஹி ஆலூ நினைவில் வர, உ.கி. வேகப் போட்டுத் துண்டங்களாக எடுத்துக் கொண்டேன். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, ப.மி. போட்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு உ.கி. போட்டு வறுத்து மி.பொடி, த.பொடி.ம.பொடி சேர்த்து நன்கு வதக்கினேன். பின்னர் கொஞ்சம் கரம் மசாலாவும் போட்டு நன்கு  வதக்கினேன். மோர்க்குழம்பை எடுத்துச் சூடாக்கி வதக்கிய உ.கி. மசாலாவை அதில் போட்டு மேலே கொஞ்சம் போல் அன்று எடுத்த புது க்ரீமைச் சேர்த்தேன். க்ரீம் இல்லைனா வெண்ணெய் போட்டுக்கலாம். கசூரி மேதி சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொ.மல்லி தூவினேன். அன்றைய இரவுக்குச் சப்பாத்திக்கான சைட் டிஷ் தயார்.

Image result for தஹி ஆலு


படங்களுக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்!

இப்போத் தான் இந்த உ.கி. சாப்பிடவே பயம்மா இருக்கே! 

18 comments:

  1. திப்பிச வேலை - இதுல நீங்க ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கீங்களே!

    கீரைகள் - நிறையவே இருக்கு என்றாலும் கிடைப்பதில்லை. கிடைப்பதைச் சாப்பிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஆமாம் வெங்கட்! இந்தச் சமையல் மிஞ்சினால் அதை வீணாக்குவது என்பது பிடிக்காது! அதான்!

      Delete
  2. கல்யாண முருங்கையாவது கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற கீரைவகைகளை அறியேன்! தும்பைக்கீரை என்பது நாம் அறிந்த தும்பைப்பூவின் இலையா? புளிச்சக்கீரை கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், புளிச்ச கீரை தான் கோங்குராக்கீரை, காசினிக்கீரைனு நான் சொல்றேன். ஆனால் ரஹ்மான் இல்லைனு சொன்னார். தெரியலை. புளிச்ச கீரை சமைச்சிருக்கேனே. எழுதியும் இருக்கேன்.

      Delete
  3. தேங்காய் சேர்க்கும் இடத்தில எல்லாம் இந்த சட்னியைச் சேர்த்து விளையாடலாம் போல! வகை வகையாய் செய்திருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், ஆனால் நான் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைப்பதால் அவியல், மோர்க்கூட்டு போன்றவற்றிற்கு நன்றாக இருக்காது. அதே சமயம் மிஞ்சின சட்னியோடு வெங்காயம், கசகசா அரைத்துச் சேர்த்து வெள்ளைக்குருமா செய்யலாம். :) அவியல் மிஞ்சினாலும் அதில் வெங்காயம், கசகசா, இஞ்சி, சோம்பு சேர்த்து அரைத்துச் சேர்த்துக் குருமாவாக மாற்றலாம். :))))

      Delete
  4. ஏஞ்சல், அதிரா இந்தப் பதிவுகளைப் படித்தால் விளையாடி விடுவார்கள். அவர்கள் விடுப்பில் இருக்கிறார்களே...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், ரெண்டு பேரும் இல்லாமல் கொஞ்சம் இல்லை நிறையவே போர் அடிக்குது! :))))

      Delete
  5. திப்பிச மோர்க்குழம்பு நல்லா இருக்குக்கா .எங்க வீட்லயும் சட்னி மிஞ்சும் நான் தயிர் பச்சடி அப்புறம் க்ளூட்டன் free ரொட்டிக்குள்ள தயிர்சாண்ட்விச் இப்படி சாப்பிட்டு முடிப்பேன் .தஹி ஆலூ நல்லா இருக்கே செஞ்சிட வேண்டியதுதான் :) நான் பொட்டுக்கடலை சட்னிக்கு சேர்க்கமாட்டேன் அதனால் மிஞ்சினதை அவியலுக்கு சேர்ப்பேன் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஏஞ்சல், பொட்டுக்கடலை சேர்த்த சட்னி அவியலுக்குச் சரியா வராது! சிவப்பு மிளகாய்ச் சட்னின்னா நான் அரிசி உப்புமாவுக்குப் பயன்படுத்திடுவேன். :)))) அதில் சிவப்பு மிளகாய் தாளிப்பதில்லை! ஆகையால் இந்த அரைத்த கலவையோடு கொஞ்சம் பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்துச் சேர்த்துடுவேன்.

      Delete
  6. திப்பிசமே பெருங்கலை கீதா கையில்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீங்களும் இந்தப்பக்கம் வந்துட்டீங்களா?

      Delete
  7. திப்பிச வேலைகளை ரசித்தேன்.

    ஆமாம், வீட்டில் அவருக்குத் தெரியுமா, நேற்று தான் சாப்பிட மறுத்த தேங்காய்ச் சட்டினிதான் இன்றைக்கு மோர்க்குழம்பாக மாறி இருக்கிறது, இன்றும் முழுவதும் சாப்பிடவில்லையானால், அந்த மோர்க்குழம்பு நாளைக்கு மோர்க்குழம்புக் கொழுக்கட்டையாக மாறிவிடும் என்று? ஹா ஹா ஹா. நாங்களும், நீங்கள் கொடுப்பதைச் சாப்பிடுவதற்கு முன்பு, அவரிடம் (உங்கள்ட கேட்டால் உண்மை வருமா?) நேற்று என்ன மெனு, அதற்கு முந்தைய நாள் என்ன மெனு என்றெல்லாம் கேட்டுக்கொண்டபிறகுதான் சாப்பிடணுமா?

    On a serious note, எனக்கும் சாதம் மற்றவைகள் மிஞ்சுவது கஷ்டமாகத்தான் இருக்கு. அதுக்காக, மிஞ்சினவைகளை அன்றே சாப்பிட்டுக் காலிசெய்ய முடியுமா? மறுநாளும் வைப்பதில்லை. சரியான அளவில் செய்வது கஷ்டம்தான் (பசங்க எப்படிச் சாப்பிடுவாங்க என்று கணிப்பது கடினம்). இது எல்லாம் என் அப்சர்வேஷந்தான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, ச்ரீராம் எப்போவுமே நீங்க சொல்றாப்போல் தான் சொல்லிட்டு இருக்கார். வரது தான் இல்லை. :) முன்னெல்லாம் யார் கிட்டேயும் சொல்லாமல் தான் திப்பிசங்கள் நடந்தன. இப்போல்லாம் வீணாகிடும்னு சொல்லிட்டே செய்துடறேன். அதோடு அன்றைய சமையலை அன்றே மாற்றுவதால் பிரச்னை எல்லாம் இல்லை. பொதுவாகவே அதிகம் மிஞ்சாமல் சமைப்பேன். என்னிக்காவது மிஞ்சினால் தான் இப்படி!

      Delete
    2. //ச்ரீராம்//

      கிர்ர்ர்ர்ர்... ஸ்ரீராம்...

      Delete
    3. முன்னெல்லாம் சாதம் மிஞ்சினால் ராத்திரி டிஃபனைக் குறைச்சுட்டு சாதத்தைப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவோம். அப்படியும் குழந்தைங்க இருக்கையில் சாதம் மிஞ்சினால் ராத்திரிக்கு வெஜிடபுள் சாதமாகப் பண்ணிக் கொடுப்பேன் அல்லது ஏதேனும் கலந்த சாதம், இல்லைனா து.பருப்பைக் குழைய வேகவிட்டுக் காய்களைப் போட்டுப் புளிக்கரைசலை ஊத்தி சாம்பார் சாதம், அப்படியும் இல்லைனா மஞ்சப் பொங்கல், பாசிப்பருப்புப் போட்டுப் பொங்கல்னு பண்ணுவேன். அதெல்லாம் நிறைய மிஞ்சினால் தான். இப்போ அதிக பட்சம் ஒரு கைப்பிடி மிஞ்சும். அதை ரெண்டு பேருக்கும் நிரவிப் போட்டுடுவேன். மத்தியானமே சாதம், குழம்பு, ரசம் எல்லாம் தீர்ந்துடும். என்னிக்கானும் சாம்பாரோ மோர்க்குழம்போ மிஞ்சினால் திப்பிசம் தான்!

      Delete
  8. படம் நீங்க எடுத்ததா? (செய்த சைட் டிஷ்ஷா?). ரொம்ப அழகா வந்திருக்கு. புதுவிதமா இருக்கு (ஆனால், இன்றைக்கு என் மனைவி, சிவப்பு மிளகாயை உபயோகப்படுத்திச் செய்த மோர்க்குழம்பின் மீது, சின்னவெங்காயத்தை வதக்கிச் சேர்த்ததுபோல் இருக்கிறது ஹா ஹா)

    ReplyDelete
  9. படம் கூகிளார் தயவு. நான் எடுத்தது இல்லை.

    ReplyDelete