திடீர்னு குழம்பை விட்டுட்டுப் பொடியைப் பத்தி எழுதறேன்னு நினைச்சீங்களா? ஹாஹா, இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி செய்தேன். அப்புறமாத் தான் படம் எடுக்கலையேனு நினைச்சேன். அதனால் என்ன? இன்னொரு தரம் செய்யும்போது படம் எடுத்துடலாம். இப்போச் செய்முறை பார்ப்போமா?
நல்ல முத்தின வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று ,
நடுத்தர அளவு எனில் இரண்டு.
மி.வத்தல் 5 அல்லது ஆறு அவரவர் காரம் சாப்பிடும் வழக்கத்துக்கு ஏற்றாற்போல் குறைந்த பக்ஷம் 8 வரை.
உப்பு,
க.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் ஒரு துண்டு.
வறுக்க நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதானும். ஒரு கரண்டி
வாழைக்காயை முன்பெல்லாம் குமுட்டி அடுப்பில் போட்டுச் சுடுவோம். சுட்டால் பொடி டேஸ்ட் தனி தான். இப்போக் குமுட்டி இருக்கு. கரி இல்லை. :( ஆகவே வெந்நீரில் தான் போட்டேன். ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து. வாழைக்காயை இரண்டாக வெட்டிப் போடவும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அங்கே இங்கே போகாமால் நீரில் போட்ட வாழைக்காயின் ஒரு பக்கம் கறுப்பாக ஆனதும் கறுப்பாக ஆகாத மறுபக்கம் திருப்பி விடவும். சீக்கிரமே கறுப்பாகிவிடும். உடனே எடுத்துவிடவேண்டும். வாழைக்காய் முழுதும் வேகக் கூடாது. தோல் உரியும் வண்ணம் நிறம் மாறினால் போதுமானது. இப்போது வாழைக்காயைத் தோலை உரிக்கவரும். தோல் உரித்துக் காரட் துருவலில் நன்கு துருவித் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், கடலைப்பருப்பு, உ.பருப்பு ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். எடுத்து ஆற வைக்கவும். மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், உப்புச் சேர்த்து ஒரு தரம் சுற்றிவிட்டுப் பின்னர் கடலைப்பருப்பு, உ.பருப்புப் போட்டுச் சுற்றவும். இதுவும் ஒரே முறை சுற்றினால் போதும். இப்போது வாழைக்காய்த் துருவலைப் போட்டுச் சுற்றவும். ஒரே சுற்றுத் தான். வெளியே எடுத்து நன்கு கலக்கி வைக்கவும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடவும், அல்லது சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.
டிடி கவனிக்க: இதுவும் மோர் சாதத்துக்கு ஜூப்பரோ ஜூப்பரு! :)))