முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் கீரையையும் நரம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் வேக விட வேண்டும். பின்னர் கடாயில்தே.எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு தாளித்துக்கருகப்பிலை போட்டு வதக்கியதும். வெந்து எடுத்ததை உதிர்த்து அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். உதிராக வரும் வரை கிளறணும். தேவையானால் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கலாம்.
அடுத்துப் பொரிச்ச குழம்பு போல் செய்யலாம்.
ஒரு கட்டு முள்ளங்கிக்கீரை பொடியாக நறுக்கவும்.
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு அரைக்கிண்ணம் நன்கு குழைய வேக வைக்கவும்.
உப்பு தேவைக்கு
வறுத்துப்பொடிக்க
மிளகு ஒரு டீஸ்பூன்
மி.வத்தல் 2
அரைக்க
ஜீரகம் ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு அரைக்கையில் சேர்க்கலாம்.)
தாளிக்க தே. எண்ணெய் கடுகு, உபருப்பு, அரை மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயத் தூள்
ஓர் சட்டியில் அல்லது உருளி அல்லது சமைக்கும் பாத்திரத்தில் ஓர் முட்டை எண்ணெய் ஊற்றிக் கொண்டு முள்ளங்கிக்கீரையை நன்கு வதக்கவும். தேவையான நீர் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் பாசிப்பருப்பைச் சேர்க்கவும். கொதிக்கையில் வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்வத்தல், மிளகுப்பொடியை உங்கள் காரத்துக்கு ஏற்பச் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும். ஐந்து நிமிஷம் கொதித்த பின்னர் சீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும். கொதித்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு. மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். கீரை வேகும்போதே பிடிக்கும் எனில் ஊற வைத்த மொச்சை அல்லது கொண்டைக்கடலையைச் சேர்க்கலாம். நான் பொதுவாகப் பொரிச்ச குழம்பு, புளி விட்ட குழம்பு, கூட்டு வகைகளுக்கு அப்போதே வறுத்துக் காய்கள் வேகும்போது சேர்ப்பேன். வெந்து விடும். இது அவரவர் வீட்டுப் பழக்கம் மற்றும் விருப்பம்.

செய்யப்போவதில்லை என்று தெரிந்தாலும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்வதில் தப்பில்லையே...!
ReplyDelete@ஸ்ரீராம், இல்லை!:))))
Deleteமுள்ளங்கி கீரை உடம்புக்கு நல்லது. ஒரு சிலர் மட்டுமே இங்கே பயன்படுத்தும் கீரை.
ReplyDelete@வெங்கட், யெஸ்ஸ்ஸ்ஸூ!
Deleteஇதையெல்லாம் செய்துகொடுத்ததனால் அவர் பயப்படுகிறாரோ?
ReplyDeleteநிறைய செய்முறைகள் முள்ளங்கிக் கீரையை உபயோகப்படுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். என்றைக்காவது செய்து ருசிக்கப் போகிறேனா இல்லை, "நல்லா இல்லையே" என்று சொல்லப்போகிறேனா, தெரியவில்லை.
நீங்க வேறே நெ.த. அவர் இதெல்லாம் கொஞ்சூண்டு சும்மா ஒரு ருசி பார்க்கனு போட்டுப்பார். அவருக்குனு தனியாப் பண்ணணும் வேறே ஏதாவது! குழந்தைங்க இருந்தால் இப்போதும் பண்ணிக் கொடுப்பேன். முன்னர் அவங்க எங்களோட இருக்கறச்சே பண்ணினது தான்! இப்போல்லாம் அவர் அதிகம் விரும்புவது கத்திரிக்காய்! :)))))
Deleteஇப்போக் கூட வெஜ் பிரியாணி அல்லது புலவ் அல்லது தக்காளி சாதம்னு பண்ணினால் அவருக்குக் கொஞ்சம் தான் போட முடியும். ரசம் வைச்சு வேறே ஏதானும் காய் பண்ணி யாகணும்.ஆகவே இரண்டே கரண்டி வர மாதிரிப்பண்ண வேண்டி இருக்கு! :)))) வெஜ் கலந்த சாதங்களோட துணைக்குச் செய்யும் வெங்காயப்பச்சடி மட்டும் போதாது என்பார். அதையும் கொஞ்சம் போல் போட்டுப்பார்! :)
Deleteஇங்கயும் அதே கதைதான். எனக்குன்னு உணவு விருப்பம் (கோவைக்காய் சாப்பிடமாட்டேன்), பசங்க ரெண்டுபேருக்கும் ஒருத்தருக்குப் பிடித்தது இன்னொருத்தருக்குப் பிடிக்காது... சமையல் செய்பவர்களுக்குக் கஷ்டம்தான்.
Deleteஎங்க வீட்டுல நான் மட்டும்தான் புதுசு எதையும் முயற்சிக்கமாட்டேன். பிடிவாதமா நோ என்று சொல்லிடுவேன். நல்லவேளை என் மனைவிக்கு எதையும் டிரை பண்ணி டேஸ்ட் பண்ணலாம் என்ற ஆட்டிடியூட் இருப்பதால், அவங்களுக்குப் பிடித்ததைச் செய்வாள்.
கோவைக்காய் நாங்க வாங்குவதே இல்லை. அதோட காசி யாத்திரையின் போது ச்ராத்த காய் ஒண்ணு விடணும்னு சொன்னதிலே நான் கொத்தவரை, அவரை எதாவது ஒண்ணுனு நினைக்கையில் அந்த வாத்தியாரே கோவைக்காயை விடலாம்னு சொல்லிட்டார். ஏற்கெனவே அவருக்குப் பிடிக்காதுனு இதைத் தான் விடணும்னு முடிவு கட்டி இருக்கிறச்சே இது வசதியாப் போச்சு. கர்நாடகா வாத்தியார்! அங்கெல்லாம் கோவைக்காய் சேர்ப்பாங்களாம். சாதமே உண்டாம். :) அவர் ஒண்ணு நான் ஒண்ணுனு தனித்தனியா விடக் கூடாதுனு சொன்னதாலே நானும் அதையே விட்டேன். மாமியார் கொத்தவரையை விட்டாங்க! அநேகமாக் காசிக்குப் போறவங்க விடறது கொத்தவரை தான்! பாவம்! :)))))
Deleteகீசா மேடம் - என் பெரியம்மா பெரியப்பா, காசிக்கு இரயிலில் பிராயணம் செய்யும்போது வழியில் பெரிய பெரிய கொய்யாப்பழங்கள் விற்பதைப் பார்த்தாராம். நெல்லைலதான் அந்த சைஸ் கொய்யா கிடையாதே. பெரியப்பாவிடம் வாங்கலாமா என்று கேட்டதற்கு திரும்பும்போது வாங்கலாம்.. இப்போ ஒத்துக்கொள்ளவில்லை என்றால் 3-4 வாரப் பயணம் கெட்டுப்போயிடும்னு சொல்லிட்டாராம் (அவங்க ரொம்ப ரொம்ப ஆசாரமானவர்கள்). காசில என்ன பழம் விடப்போறீங்கன்னு கேட்டபோது பெரியப்பா வாயில் கொய்யாப்பழம்னு வந்துடுத்தாம்.
Deleteகொத்தவரை நரம்பெடுத்து நறுக்குவது சிரமம் என்பதால் விட்டுடறாங்களா? காய்ல புடலையை விட்டவங்க தெரியும். பொதுவா கோவைக்காயை நாங்கள் உபயோகிப்பதே கிடையாது. சென்னைக்காரங்கதான்.
கொத்தவரை நீங்க சொல்றாப்போல் அப்படி ஒண்ணும் நறுக்கக் கஷ்டமில்லை. பொதுவாக வாயு எனப் பலரும் அதை ஒதுக்குகிறார்கள். அதே போல் பலரும் ஒதுக்கும் இன்னொரு காய் வாழைக்காய். பிஞ்சு வாழைக்காயில் (மதுரைப்பக்கம் கச்சல் வாழைக்காய் என்போம்) கூட்டு, கறி, பண்ணினால் உடம்புக்கு நல்லது. பெரிய வாழைக்காய் எனில் வேக வைத்துப் பொடிமாஸாகவோ, நெருப்பில் சுட்டு வாழைக்காய்ப் பொடியாகவோ சாப்பிடலாம். ஒண்ணும் பண்ணாது. வேக வைக்காமல் வதக்குவது தான் உடம்புக்கு ஒத்துக்காது. நல்ல முத்தின வாழைக்காய் எனில் நான் வறுவலாக வறுத்துடுவேன். இன்னிக்குக் கூடக் கொத்தவரைக்காய்க் கறி தான். கோவைக்காயை நான் அறுபதுகளுக்குப் பின்னரே சென்னை வந்து பார்த்தேன். குடைமிளகாய், பெரிய வெங்காயம் எல்லாமும் அப்போத் தான் தெரியும்.
Delete