எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, June 10, 2018

உணவே மருந்து! பொன்னாங்கண்ணி

 பொன்னாங்கண்ணிக் கீரை பல விதங்களிலும் பயன்படும். முக்கியமாய் அதன் பெயரைப் பார்த்தாலே சருமம் பொன்னைப் போல் மினுங்கும் என்பது தெரிகிறது அல்லவா! இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உப்புப் போட்டு மசித்து உண்டால் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும். கண் பார்வைக்கும் இந்தக் கீரை மிகவும் பயன்படும். தொடர்ந்து இந்தக்கீரையை உண்டு வந்தால் கண் பார்வை பிரகாசமாக இருக்கும் என்பார்கள். எடை குறைய இந்தக் கீரை பயன்படுவது போல எடை கூடவும் இதே கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும். மூல நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இந்தக்கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு மசித்து உண்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இந்தக் கீரையில் புரதம், ஊட்டச் சத்து, மினரல் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. முக்கியமாய் இப்போது கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். சின்னச் சின்னக் குழந்தைகள் கூடக் கணினியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோரும் இந்தக் கீரையை மசித்தோ அல்லது வதக்கிப் பொரியல்/கறி மாதிரித் தேங்காய் பருப்புச் சேர்த்தோ உண்டால் கண் எரிச்சல் குறையும்.கண் சிவப்பு மாறும்.  உடலே புத்துணர்வு பெற்று விடும் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணிக் கீரை! இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இரு வகைகள் உண்டு. சீமைப் பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணம் இருக்காது. ஆகவே பார்த்து வாங்க வேண்டும்.


Image result for பொன்னாங்கண்ணி

அழகுக்கு வளர்க்கப்படும் சீமைப் பொன்னாங்கண்ணி.


Image result for பொன்னாங்கண்ணி

மருத்துவ பலன் கொண்ட நாட்டுப் பொன்னாங்கண்ணி

படங்களுக்கு நன்றி கூகிளார்

11 comments:

  1. பொன்னாங்கண்ணி கீரை இங்கு கிடைக்குதா என்று பார்த்து செய்யச் சொல்கிறேன். எடை குறைக்க.

    "பொன்னாங்கண்ணிக் கீரை போல கண்டேன் உந்தன்" என்ற பாடலை ஶ்ரீராம் குறிப்பிடுகிறாரா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட, அது என்ன பாடல் நெல்லை? நீங்கள் எதிர்பார்த்ததுபோல நான் பாடலைக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அது வேறு பாடல்!

      Delete
    2. சென்னையில் பொன்னாங்கண்ணிக் கீரை நிச்சயம் கிடைக்கும். நீங்க சொல்லும் பாடல் எனக்குத் தெரியாது! ஹிஹிஹி, மன்னரே தெரியலைனு சொல்லிட்டிருக்கார்! ;)))))

      Delete
    3. ஸ்ரீராம் எனக்கு இந்த வார்த்தைகள்தான் மனசுல இருக்கு. 'கண்டேன் உந்தன் இடையை' என்று வரும் என நினைக்கிறேன். ஆனால் பாடல் நினைவுக்கு வரலை.

      Delete
    4. கண்டு பிடிங்க, கண்டு பிடிங்க!

      Delete
  2. இந்தக் கீரையும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர சமைத்ததில்லை. சிறு சமையல் வித்தியாசத்தில் எதிர் எதிர் பலன்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தினம் சாப்பிடலாம் என்பார்கள்.

      Delete
  3. இந்தக் கீரையின் பெயரைப் படித்ததும் "பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ....புன்னகையில் தெரியுது அம்மா...." பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, மீ த எஸ்கேப்பு! :)))))

      Delete
  4. தண்ணீர் பாயும் வரப்புகளின் ஓரம் தானாகவே முளைத்து வளரும். மழைநாட்களில் அதிகம் கிடைக்கும். தண்ணீர் சிறிது தேங்குமிடமெல்லாம் வளர்ந்துவிடும். என்ன சுத்தம் செய்தாலும் சற்று மண் வாஸனை வரும். ருசி நன்றாக இருக்கும். உடம்பிற்கு நல்லது என்றபலன் இருக்கே. சீமைப் பொன்னாங்கண்ணியைக் கிள்ளி நட்டாலே துளிர்த்து விடும். அதையும் சமைப்பது உண்டு. கீரையின் பலன்களெல்லாம் விவரமாக படிக்க ஸந்தோஷமாக இருந்தது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா, சந்தோஷமா இருக்கு இங்கே பார்த்ததில்! இன்னிக்குக் கூட நினைச்சேன் நீங்க இப்போல்லாம் வரதில்லையே என! கருத்துக்கு நன்றி.

      Delete