இந்தப் பருப்புக்கீரை இயற்கையாக இந்தியா முழுவதிலும் விளைகிறது. இதன் மருத்துவத் தன்மைக்காக இது வளர்க்கவும் படுகிறது. இது மணமற்றக் குறுஞ்செடியாக சுமார் 90 செ.மீ உயரம் வரை வளரும் இயல்பு கொண்டது. இது உடல் வெப்பம் மிகுந்தவர்களுக்குத் தக்க பலன் கொடுக்கக் கூடியது. இதை நன்கு அரைத்து உடலில் அக்கி கண்ட இடத்தில் அடர்த்தியாகத் தடவி வர வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இம்மாதிரித் தடவலாம். அப்படித் தடவி வந்தால் உடனடியாக அக்கியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு அக்கி வந்ததால் ஏற்படும் தழும்புகளும் மறையும். உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். இந்தப் பருப்புக்கீரை இலைகளை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றி, பிடரி, கழுத்துப் பகுதிகளில் பற்றாகப் போட்டு வந்தால் தீராத தலைவலி குணமாகும். சாறை உடலில் தடவிக் கொண்டு குளித்தால் வியர்க்குரு வராது என்பதோடு வந்திருந்தாலும் பட்டுப் போகும். தீப்புண், சொறிசிரங்கு போன்றவற்றிற்கும் இது நல்லதொரு நிவாரணி ஆகும். புண்கள் செப்டிக் ஆகாமல் தடுத்து ஆற வைக்கும்.
மலச்சிக்கல் இருக்கும் குழந்தைகள் முதியவர்களுக்கு மலச்சிக்கல் தீரப் பருப்புக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். பருப்புக்கீரைச் செடியை நன்கு கழுவி அலசிக்கொண்டு இளநீரோ மோரோ விட்டு முழுச்செடியையும் அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக் கொண்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரத்துடன் சாப்பிட்டு வந்தால் குடல் பிரச்னைகள் தீரும். முக்கியமாய் மஞ்சள்காமாலை குணமாகும். நீர்க்கடுப்பு, எரிச்சல், ஆகியன நீங்கும். இதன் விதைகளையும் பொடி செய்து இளநீருடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலஹீனம் நீங்கும். இந்தக்கீரையில் புரதம், கொழுப்புச் சத்து, தாதுச் சத்துக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
பருப்புக்கீரை சமையல்
பருப்புக்கீரை ஒரு கட்டு
பாசிப்பருப்பு சின்னக் கிண்ணம் ஒன்று
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
மி.வத்தல் ஒன்று, ஜீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க தே.எண்ணெய் (பொதுவாய்க்கீரை வகைகளுக்கே தே.எண்ணெயில் தாளித்தால் நன்றாக இருக்கும்.)
கடுகு, உபருப்பு
கீரையை நன்கு அலசிப் பொடியாக நறுக்கி வேக விடவும். பருப்பைத் தனியாகக் குழைவாக வேக வைத்துக் கொள்ளவும். கீரையும் நன்கு வெந்தபின்னர் பருப்பைச் சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலோடு மிளகாய் வற்றலையும் ஜீரகத்தையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்துச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீரையில் தண்ணீர் அதிகம் இருந்தால் எடுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் அதில் மிளகுபொடி,பெருங்காயப் பொடி சேர்த்து நெய் அல்லது வெண்ணெய் போட்டு சூப் போல் குடிச்சுக்கலாம்.
கீரைக்கு அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதி வந்ததும் கீழே இறக்கித் தே. எண்ணெயில் கடுகு, உபருப்புத் தாளிக்கவும். கீரை மொளகூட்டல் என்றே இதைச் சொல்லலாம்.
இம்முறையில் மிவத்தல் சேர்க்காமல் மி.பொடி சேர்த்து, வெங்காயம், பூண்டு வதக்கிச் சேர்த்தும் பண்ணலாம். இதற்குப் பச்சை மிளகாய் தாளிதத்தில் சேர்க்கலாம். சிலர் கீரையைக்குக்கரில் வேக வைக்கின்றனர். அது அவ்வளவு நல்லது இல்லை. இதை நன்கு வேக விட்டுக் கொண்டு புளி சேர்த்து சாம்பார்ப்பொடி போட்டு, துவரம்பருப்புச் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொண்டு, சின்ன வெங்காயம், பூண்டு (பிடித்தால்) பச்சை மிளகாய், மி.வத்தல், கடுகு, வெந்தயம், கருகப்பிலை தாளித்துச் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.
இந்தக் கீரையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteமுளைக்கீரை, அரைக்கீரை ஆகியவற்றோடு பல சமயங்களில் இதூவ்ம் கலந்து வரும். உங்களுக்குப் பருப்புக்கீரை எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! :)
Deleteஇதுவும்! :(
Deleteகீரை வகைகளை பெரும்பாலும் விரும்பி உட்கொள்வேன். இதனையும் முயற்சிப்போம்.
ReplyDeleteமுயற்சி செய்யுங்க முனைவர் ஐயா! உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
Deleteஅம்மா செய்வார் - நெய்வேலி வீட்டில் தோட்டத்திலேயே இருந்தது.
ReplyDeleteஆமாம், தப்பு முதலாக எங்கே பார்த்தாலும் காணக்கிடைக்கும். நல்ல சத்துள்ள கீரை!
Deleteஆஆவ் !! பருப்புக்கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும் .ஆனா இங்கே ரெண்டு தரம் தான் கிடைச்சது .அதிக செகண்ட் டைம் கிடைச்சதை தண்டுகளை தொட்டியில் நட்டு வளர்த்தேன் :) நல்லாவே வளர்ந்தது ரெண்டு நாள் கேப்பில் குருவிங்க விளையாடிட்டாங்க :)
ReplyDeleteஇதன் ஆங்கில பெயர்purslane .பிரான்சில் சாலட் செக்ஷனில் இருந்தது .கீரை எங்காச்சும் சாலட் இலை பக்கம் இருக்குமான்னு நினைச்சி வாங்காம விட்டேன் .அப்புறம் பார்த்தா purslane ஐரோப்பாவில் விளையுதாம் .இதெல்லாம் தெரிஞ்சப்போ இங்கே uk வந்தாச்சு ..
நானும் கீரை தேங்காய் பாசிப்பருப்பு காம்பினேஷனுக்கு தேங்காய் எண்ணெய் தாளிதம்தான் ..
வாங்க ஏஞ்சலின், யு.எஸ்ஸில் வட மாநிலங்களில் கிடைக்கும் ராஜ்கீர் என்னும் சிவப்புத் தண்டுக்கீரை தான் கிடைக்குது. இலைக்கீரை ஒண்ணு இருக்கு. அது வாங்கிச் சமைச்சுப் பார்க்கலை!
Deleteராஜ்கீர்//
Deleteyes akka ..i bought amaranth seeds from holland and barrets ,sowed them in pots .they were yummy and fresh .i wonder how come nellaithamizhan and sriram havent seen this paruppukeerai in chennai ..mom used to make keerai masiyal twice a week
பூனை பார்த்தா பீட்டர் இங்க்லாண்ட்னு கலாய்க்கும் :)
Deleteசரி சர்ச்க்கு போயிட்டு வரேன் பை பை
Deletehttps://kaagidhapookal.blogspot.com/2015/10/blog-post_10.html
Delete:)
ஹிஹிஹி, பூனை இந்தப்பக்கமெல்லாம் வராது! :) படிச்சுட்டுக் கமென்டியாச்சு! சர்ச்சுக்குப் போயிட்டு நிதானமா வாங்க!
Deleteஅக்கா சிவப்புத் தண்டுக் கீரையும் சரி இலைக்கீரையும் சரி ரொம்ப நல்லாருக்கும் அக்கா. கேரளத்தில் அதுதான் நிறைய பார்க்கலாம்.
Deleteபூனையார் இப்ப ரொம்பவே பிஸி ஸோ வராது. ஹா ஹா ஹா ஹா
கீதா
பூனைக்கு என்ன வேலை? குழந்தைங்க லீவுலே இருக்காங்களா? ஸ்கூல் திறந்திருக்கணுமே!
Deleteஇந்தக் கீரையைப் பார்த்தமாதிரியோ சாப்பிட்டமாதிரியோ நினைவு இல்லை. நல்ல முயற்சி கீசா மேடம்.
ReplyDeleteசென்னையிலே நிறையக் கிடைக்கும் நெ.த. இங்கே கீரை வகைகளில் சிலது கிடைப்பதில்லை. இன்னிக்குத் தான் எங்கேயோ பார்த்துச் சிறுகீரை வாங்கி வந்திருக்கார். அது நீரிழிவு நோய்க்கும் ப்ரோஸ்டேட், சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு தரும். அதிலும் சிறுகீரையின் வேர் மிகவும் நல்லது.
Deleteசிறுகீரை ஆமாம் கீதாக்கா நல்லது நீங்க சொல்லியிருப்பது போல். காசினிக்கீரை கூட சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு நல்லது. கோயம்புத்தூரில் நிறைய கிடைக்கும். பலவித கீரைகள் ஆனால் பாண்டிச்சேரியில் அந்தப் பாட்டி கொண்டு வந்தது போல் வித விதமான கீரை...எங்கும் பார்த்ததில்லை.
Deleteநம்ம வீட்டு தோட்டத்தில் கூட தரையில் பொடிப் பொடியாக இலையுடன் ஒரு செடி தரையோடு படர்ந்து இருக்குமே அதவும் ஒரு கீரைதான். அப்படியே நான் எடுத்து அதைக் கழுவி சமைத்ததுண்டு அங்கிருந்தவரை. பசலையே பல வெரைட்டிஸ் உண்டு.
கீதா
காசினிக்கீரைனு வேறேனு கலிலுர் ரஹ்மான் சொல்றார். பார்க்கணும். பசலைக்கொடி அம்பத்தூர் வீட்டில் இருந்தது. சிவப்புத் தண்டு.
Deleteகீதாக்கா நானும் இதை அடிக்கடி சமைப்பதுண்டு. இப்படியும் செய்வதுண்டு. மாக்கூட்டு போலவும், அப்புறம் மிளகுஷீயம் போலவும் அவ்வப்போது என்ன மனதில் தோன்றுதோ அப்படி. பாண்டிச்சேரியில நிறைய கிடைக்கும் பாட்டி ஒருவர் தினமும் கொண்டு வருவார் பல வித கீரைகள். இது எளிதாக வளரும்.
ReplyDeleteஇது மத்த கீரைகளோடு கலந்தும் வரும். பொதுவா ஆயும் போது எல்லாரும் தூக்கிப் போட்டுருவாங்க. நான் அதை யும் சேர்த்தே சமைச்சுருவேன்..
கீதா
கீரை தினமும் வாங்கத் தான் அவருக்கு விருப்பம். ஆனால் சில நாட்கள் என்னால் சாப்பிட முடியாமல் வயிற்றுக் கோளாறு வந்துடுது! இப்போப் பத்து நாட்களுக்கும் மேல் ஆச்சு கீரை வாங்கியே!
Delete