தூதுவளை கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். உடலை வலுவாக்கிக்கல் போல் ஆக்கும் மூலிகைகள் சிலவற்றில் தூதுவளையும் ஒன்று. கற்பம் என்றால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்து நோய் அணுகாதவண்ணம் செய்து நோய்களில் இருந்து விடுபட வைக்கும் என்ற பொருள் ஆகும். காயகற்பம் என்பார்கள். காயம் என்றால் உடம்பு. இத்தகைய காயகற்ப மருந்தைச் சாப்பிடும்போது உடல் தூய்மை மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் சாப்பிடும் மருந்தில் நம்பிக்கையும் இருத்தல் வேண்டும். பொதுவாகவே மருத்துவரிடம் செல்லவும், மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நல்ல நாள் பார்ப்பார்கள். இந்தக் காயகற்ப மருந்துகளுக்கும் அவ்வாறே நல்ல நாள் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிதாக எடுத்துக் கொண்டு நாள் ஆக, ஆக அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இத்தகைய மருந்துகள் சாப்பிடும்போது அகத்திக்கீரை உண்ணக் கூடாது.
தூதுவளையும் இந்தியா முழுவதும் கிடைக்கும் கீரைகளில் ஒன்று. சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களிலும் அழைக்கப்படும். அநேகமாக வேலியோரச் செடியாகவே வளரும். இதில் முட்கள் காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் எல்லாமும் மருத்துவ குணம் உள்ளது. முக்கியமாகச் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல மருந்து. தூதுவளை இலையுடன், துளசியும் சேர்த்துக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டால் தொண்டைக்கரகரப்பு, தொண்டை வலி, தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். தூதுவளை இலையுடன் , மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்துத் துவையல் அரைத்துச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இடைவிடாத இருமல், இரைப்பு போன்றவற்றுக்கு இது நல்லது. ஆண்களுக்கு இது மிகுந்த சக்தியைக் கொடுக்கும். எலும்புக்கும் பற்களுக்கும் இது நன்மை பயக்கும் என்பதால் பருப்புடன் சேர்த்துச் சமைத்து நெய்யில் தாளிதம் செய்து சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இதன் பொடியையும் தொடர்ந்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இலையை அரைத்து அடை போல் செய்தும் சாப்பிடலாம். இதனால் இரைப்பு நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகள், சூலை நீர் ஆகியவற்றுக்கு இது சிறந்த மருந்தாகும். தூதுவளைக் காயைச் சமைக்கலாம். அல்லது வற்றலோ, ஊறுகாயோ போடலாம். கண்களுக்கு நல்லது. தூதுவளைப் பூவை உலர்த்திப்பொடியாக்கிப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். பழத்தை வெயிலில் காய வைத்துப் பொடியாக்கித் தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச் சளி, இருமல் குணமாகும். விஷத்தை முறிக்கும். மலச்சிக்கல் நீங்கும். கீரை, வேர்,காய் இவற்றை வற்றலாகவோ ஊறுகாயாகவோ செய்து சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இலையைக் குடிநீர் செய்து அருந்தி வரலாம்.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கும் என்கின்றனர். சித்த வைத்திய முறையில் தூதுவளையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நெய் மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. தூதுவளை நெய்யை ஒரு தேக்கரண்டி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், ஈளை நோய், கப நோய், மேக நோய், வெப்ப நோய், இரைப்பு, இருமல், வாய்வு, குண்டல வாய்வு போன்றவைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவிளங்காயிலும் சத்துக்கள் இருப்பதால் அதையும் சமைத்துச் சாப்பிடலாம். பித்தத்திற்கு நல்லது.
தூதுவளை ரசம் செய்முறை: இதற்குச் சிலர் பூண்டு சேர்க்கின்றனர். பொதுவாக நான் பூண்டைக் குறைவாகவே பயன்படுத்துவதால் பூண்டு இல்லாமலேயே இங்கே கொடுக்கிறேன். நான்கு பேருக்கு!
தூதுவளை இலைகள் ஒரு கைப்பிடி அல்லது 50, 60 இலைகள்
மி.வத்தல் இரண்டு, மிளகு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், ஜீரகம்
பெருங்காயம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு (இதில் தக்காளி சேர்க்க வேண்டாம்)
உப்பு தேவையான அளவு
தாளிக்க நெய் ஒரு தேக்கரண்டி. கடுகு அரை டீஸ்பூன், மிவத்தல் பாதி, கருகப்பிலை, ஜீரகம்.
ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், துவரம்பருப்பு, மிளகு போட்டு, பெருங்காயமும் சேர்த்து வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.அந்தச் சட்டியிலேயே தூது வளை இலைகளைப் போட்டு வதக்கவும். ஜீரகத்தை வறுக்க வேண்டாம். பச்சையாகச் சேர்த்து அரைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். அம்மி இருந்தால் நல்லது தான். ஆனால் இந்தக் காலத்தில் எங்கே போறது!
புளியைக் கரைத்து ஈயச் செம்பு அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் விட்டுத் தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைப்போட்டுக்கொதி விடவும். மேலே நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விட்டுக் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அக்கா இது கண்டகத்திரினும் சொல்வாங்க இல்லியா ?
ReplyDeleteஇதை ஹெர்பேரியம் செய்ய தேடி போனேன் 11 ஆம் வகுப்பில் :)
அப்போ எங்க ஏரியாவில் கீழா நெல்லி முதல் எல்லாம் ரோட்டோரம் இருக்கும் .இப்போல்லாம் கான்க்ரீட் :(
எங்க தோட்டத்தில் கீழாநெல்லி இருக்கு இன்னும் .
வாங்க ஏஞ்சல், கண்டங்கத்திரியும் சளி, கோழை அகற்றும். காயைப் பொரிச்ச குழம்பு, சாம்பார் செய்வார்கள். ஆனால் அந்தச் செடி கீழே தான் படரும். தூதுவளை கொடி அல்லவோ? காய்கள் கொஞ்சம் ஒரே மாதிரித் தெரியும். ஆனால் இரண்டும் வேறே என நம்ம ரங்க்ஸ் அடிச்சுச் சொல்றார்.
Deleteஇன்னிக்குத் தேடிப் பார்த்துட்டேன். இரண்டும் வேறே தான். ஆனால் ஒரே குடும்பம்!
DeleteSolanum virginianum ..கண்டங்கத்திரி
Deletesolanum trilobatum தூதுவளைக்கா .நேற்றே எழுத நினைச்சி விடுபட்டு
தூதுவளை கீரை வகை இல்லை கொஞ்சம் ஹார்ட் ஷேப்பில் with slight pointed edges இருக்குமில்லையா
கண்டங்கத்திரி அப்டியே நம்ம dandelion இலை மாதிரி முள்ளு இலைல இருக்கும்
ஆமாம், நானும் பார்த்தேன்.
Deleteஇங்கே நிச்சயம் கிடைக்காது .எங்களுக்கு திருவள்ளூர் அரக்கோணம்லருந்து முந்தி கூடையில் கொன்டு வருவாங்க சென்னையில்
ReplyDeleteதூதுவளை சாப்பிட்ட நினைவில்லை .
அம்பத்தூரில் நம்ம வீட்டுத் தோட்டத்தில் தூதுவளை, சிறியா, பெரியா நங்கைச் செடிகள், சித்தரத்தை, துளசி, பருப்புக்கீரை எல்லாம் தானாக முளைச்சுக் கிடக்கும். இப்போ எதுவும் இல்லை! ::(
Deleteம்ம்ம்... படிச்சு வச்சுக்கிட்டேன்.....
ReplyDeleteவாங்கஸ்ரீராம், நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை சாக்லேட் கிடைக்குமே? சாப்பிட்டதில்லையா?
Deleteஅட, ஆமாம்... அது சாப்பிட்டிருக்கேனே...
Deleteஹிஹிஹி! அது!!!!!!!!!!!
Deleteஊரில் சாப்பிட்டேன்.. பின்பு கனடாவில் அண்ணன் வீட்டுக்குள் ஜாடியில் வளர்த்தார்கள், மிக அருமையாக நிறைய இலைகள்.. நாங்க போய் நின்றபோது நமக்கே அனைத்தையும் தந்தார்கள் சட்னிபோலதான் தேங்காய் சேர்த்து அரைத்துச் சாப்பிடுவோம் நாம். தேசிக்காய்ப்பிழிதான் சேர்ப்போம்.
ReplyDeleteஉங்கள் குறிப்பு புதுசா இருக்கெனக்கு.. வெளிநாட்டில் அனைத்து இலைகளும் வாங்கலாம் ஆனா என்னமோ இந்த தூதுவளை மட்டும் எங்கும் விற்பனைக்கு வருவதில்லை.
அட! அதிரடியா வந்துட்டீங்க? வெளிநாட்டில் எல்லாம் கிடைக்கும் என்பதே எனக்குப்புதுச் செய்தி. தூதுவளையும் தேடிப் பாருங்க கிடைக்கலாம்.
Delete///படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க ஸ்ரெப் பை ஸ்ரெப் படங்கள் போடாமல் குறிப்பு எழுதுவதால்.. உங்களில எனக்கு டவுட்டாகவே இருக்கு இதுவும் கொப்பி பேஸ்ட்டோ என:)) ஹையோ கீசாக்கா கலைக்கிங்.. மீ ரன்னிங்:))...
இந்த புளொக் செட்டிங்ஸ் ஐ கொஞ்சம் நன்றாக மாத்தலாமே.. எதுவும் சரியா செய்யாமல் வச்சிருக்கிறீங்க...யாராவது வீட்டுக்கு வரும்போது செய்து எடுங்கோ.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னிக்கு இது எழுத வேண்டும் என நினைச்சு மனசில் நினைப்பில் இருப்பதை எழுதுவேன். சந்தேகத்துக்கு மட்டும் குறிப்புக்களைச் சரி பார்ப்பேன். அன்றன்று அந்தக் கீரைகளைச்
Deleteசெய்து கொண்டிருந்தால் மட்டுமே ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்துப் போட முடியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த டெம்ளேட்டுக்கு என்ன குறைச்சல்?
///இந்த டெம்ளேட்டுக்கு என்ன குறைச்சல்?//
Deleteம்ஹூம்ம்.. என்ன குறைச்சலோ? போஸ்ட் இன் கொமெண்ட் பொக்ஸ் இன் வித் போதல்ல, சாப்பிட வாங்க என தலைப்பு மட்டும்தான் மற்றும்படி எல்லாம் மெலிஞ்சு போய்க் கிடக்கு இங்கின.. நீங்களே செய்யுங்கோ சொல்லித்தாறேன்.. செய்து போட்டு மறக்காமல் அதிராவுக்கு செக் அனுப்புங்கோ:)
புளொக்கர் போய்.. அதில் தீம் ஐ கிளிக்கி... பின்பு கஸ்ரமைஸ்... அதில தேடி.. அஜஸ்ட் வித் என இருக்கும் அதனை ஒவ்வொன்றுக்கும் கூட்டி விடுங்கோ.. மறந்திடாமல் அதிராவை நினைச்சுக் கொண்டு சேஃப் குடுங்கோ ஊக்கே?:)
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, ப்ளாக் திறந்ததும் நானே என் சொந்தக் கிட்னியைப் பயன்படுத்தி! டெம்ப்ளேட் எல்லாமும் என் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுத்துப் போட்டேன். இது இன்னிக்கு வரை யாரும் குத்தம் சொல்லலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பத்து வருஷமா இதே டெம்ப்ளேட்டில் இருக்குனு வேணா மாத்தலாம். நீங்க சொல்லிக் கொடுக்க வேண்டாம். அதெல்லாம் நானாகவே செய்திருக்கேன். இப்போத் தான் அடிக்கடி டெம்ப்ளேட் மாத்த வேணாம்னு கை வைக்கிறதில்லை! :)))))))))
Deleteஅதனாலே "செக்" மட்டும் வைச்சுக்குங்க! நான் செக்கெல்லாம் அனுப்பப் போறதில்லை! :))))))) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "செக்" தான் இருக்காங்க இல்ல! அவங்களுக்குச் சம்பளம் கொடுங்க முதல்லே! :)))))
Deleteகீசாக்கா ரெம்பிளேட் மாத்த சொல்லல்ல நான்.. உங்கள் போஸ்டின் அகலத்தையும், கொமெண்ட்ஸ் பொக்ஸ் இன் அகலத்தையும் கூட்டச் சொல்கிறேன்... அடுத்து எழுத்துக்களின் அளவையும் கொஞ்சம் கூட்டலாம்.. சொன்னா சொல்லுக் கேட்கோணும் அதை விட்டுப் போட்டு எனக்கெல்லாம் தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வாணாம் என ஸ்ரீராம் மாதிரி:))[ ஹையோ ஆண்டவா ஹா ஹா ஹா].. அடம் பிடிக்கக்கூடா கர்ர்ர்ர்:))
Delete// நீ ஒண்ணும் சொல்ல வாணாம் என ஸ்ரீராம் மாதிரி:))[ ஹையோ ஆண்டவா ஹா ஹா ஹா].. அடம் பிடிக்கக்கூடா கர்ர்ர்ர்:)) //
Deleteதெரிஞ்சா செய்ய மாட்டோமா...? ஆமாம், நான் எங்கே வர்றேன் இதில்?
அதிரடி, நீங்க தான் சொன்னீங்க! அசோகா மரம் வைங்க, ரோஜாச் செடி வைங்க! பூஸாரைப் பிடிச்சுப்போடுங்க. அழகு படுத்துங்க! பார்த்தாலே படிக்க, சாப்பிட ஆசை வரணும்னு ! அதான் நான் ரெம்ப்ளேட்னு சே டெம்ப்ளேட்னு நினைச்சேன். இப்போ என்னடான்னா எழுதறதுக்குக் கையைப் பிடிச்சுச் சொல்லித் தரேன்னு சொல்றீங்க. நீங்க சொன்னதைச் செய்து பார்க்கணும். நிதானமா! இல்லாட்டி சொதப்பிடும். ஒரு நாள் சாவகாசமா வைச்சுக்கறேன்.
Delete//தெரிஞ்சா செய்ய மாட்டோமா...? // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete//ஆமாம், நான் எங்கே வர்றேன் இதில்?// இங்கே தானே இருக்கீங்க! :)))))
தூதுவளை சிறு வயதில் நெல்லையில் சாப்பிட்டது. சில வருடங்களுக்கு முன்னால் தூதுவளை சாக்லெட் என்று பார்த்த ஞாபகம் (இத்துடன் இஞசி, சுக்கு போன்ரு பலவித சாக்லெட், பவுடர்கள்).
ReplyDeleteபடித்துவைத்துக்கொண்டேன்.
நெ.த. சென்னையில் தூதுவளைக்கீரையாகவே கிடைக்கும். வாங்கிப் பர்க்கலாம். மாம்பலத்க்டில் முயன்று பாருங்க!
Deleteஇன்றைக்கு தூதுவளை கீரை பழமுதிர்ச்சோலையில் பார்த்தேன். மனைவி, அதிலும் துகையல் செய்யலாம், வாங்கலாமா என்றார் (எபி க்கு எழுத). ஆனால் முள்ளை நான் தான் எடுக்கணும்னு சொன்னாள். அது என்னால முடியாதுன்னுட்டேன்.
ReplyDeleteமுள்ளை எடுப்பது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. வரிவரியாக உள்ளக் காய் நறுக்கும் கத்திரிக்கோலால் சுலபமாக இலைகளை மட்டும் வெட்டி எடுத்துடலாம். துவையல் நான் ஜாஸ்தி செய்ததில்லை. ரசம், கஷாயம் வைத்திருக்கேன்!
Deleteநீங்க சென்னை வந்ததுமே உங்க ஹஸ்பன்ட் மனைவியாயிட்டார் போல! :)))))))
Delete