எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, June 13, 2018

உணவே மருந்து! முடக்கத்தான் கீரை!

pictures of keerai

முடக்கத்தான், அல்லது முடக்கித்தான் கீரை அநேகமாய் எல்லார் வீட்டுக்கொல்லைப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் ஒரு வகைக் கீரை. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது இந்தக் கீரையும். முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தக் கீரை நல்ல மருந்து. தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது இதைச் சமைத்து உண்டு வந்தால் மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்தக் கீரையை நீர் விட்டு மைய அரைத்துப் பிரசவம் ஆகக் கஷ்டப்படும் பெண்களின் அடி வயிற்றில் தடவினால் உடனே சுகப் பிரசவம் ஆகி விடும் என்கின்றனர்.

கைகால்கள் அறவே முடங்குவதைத் தடுப்பதால் இதற்கு முடக்கு+அற்றான் என்னும் பெயர் வந்தது. இதை ரசம் வைத்துச் சாப்பிடலாம்.  மலச்சிக்கல், வாய்வு, வாதம் போன்றவை வெளியேறும்.

ரசம் வைக்கும் முறை

சாதாரணமாகப் புளி கரைத்து ரசப்பொடி போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இந்தக் கீரையைத் தண்டு, காம்பு இலை ஆகியவற்றுடன் நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். அதைச் சாறு எடுத்து ரசத்தில் பருப்பு ஜலத்துக்கு பதிலாக விளாவவும். நெய்யில் கடுகு, மிளகு ஜீரகம் தாளித்துச் சூடான சாதத்துடன் சாப்பிடவும். இதைத் தவிரவும் மலம் சரியாகப் போகவில்லை என்றாலும் முடக்கத்தான் கீரையைச் சாப்பிடலாம். கைப்பிடி அளவுக் கீரையுடன் பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்பளர் நீரில் இடவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்க்கவும். கால் தம்பளராக வற்றும் வரை கொதிக்க விடவும். விடியற்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் எல்லாம் பிரிந்து மலம் நன்கு வெளியேறும். பேதி அதிகம் ஆனால் எலுமிச்சைச் சாறில் உப்புச் சேர்த்து அருந்தவும். ரசம் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். இதைத் தோசை மாவோடு சேர்த்து அரைத்து தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். இந்தக்கீரையைப் பொடியாக நறுக்கி தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் போல் வார்த்தும் சாப்பிடலாம்.

இந்தக்கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து நன்கு ஊறியபின்னர் குளித்து வந்தால் தலை மயிர் கொட்டுவது நிற்கும். நரை வருவதைத் தடுக்கும். இந்தக்கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கீல் வாயு இருப்பவர்கள் வீக்கத்தில் கட்டிக் கொண்டால் குணம் ஆகும். 

18 comments:

 1. இதெல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும்போது தோட்டத்தில் சும்மாவே இருக்கும் ,கீழாநெல்லியும் அப்டித்தான்
  இதிலிருக்கும் பலூன் ஷேப் காய்களை டப்பு டப்புனு உடைப்போம் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், ஆமாம், நானும் பார்த்திருக்கேன். என்றாலும் அவற்றின் அருமை அப்போதெல்லாம் தெரியாது. :))

   Delete
 2. எங்க வீட்டில் வாரமொரு முறை முடக்கத்தான் குழம்பும், முடக்கத்தான் தோசையும் செய்வோம்

  ReplyDelete
  Replies
  1. முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. ரொம்ப நல்லது முடக்கத்தான் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

   Delete
 3. முடக்கத்தான் தோசை சாப்பிட்டிருக்கிறேன். நல்ல கீரை என்றாலும் இங்கே கிடைப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், அம்பத்தூரில் இருக்கிறச்சே நானும் முடக்கத்தான் கீரையில் மோர்க்குழம்பு, தோசை எனச் சாப்பிட்டிருக்கேன். மின்னல் இலை என்ற ஒன்றும் உண்டு. அதிலும் மோர்க்குழம்பு செய்யலாம். வீட்டுத் தோட்டத்திலேயே அவை எலலம் தப்பு முதலாய் வந்தவை!

   Delete
 4. ஒரே ஒருமுறை அம்மா தோசையில் போட்டு வார்த்துக் கொடுத்திருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ச்ரீராம், தனி வீடுகள் அருகி வரும் இக்காலத்தில் இனி இம்மாதிரி மூலிகைச் செடிகளைத் தொட்டியில் வளர்த்தால் தான் உண்டு. தோசை நானும் சாப்பிட்டிருக்கேன்.

   Delete
 5. இதெல்லாம் சாப்பிட்ட நினைவே இல்லை.

  கீசா மேடம் - நான் சிறுவயதில் எங்கள் பெரியப்பா வீட்டில், அப்பக் கொடி மோர்க்குழம்பு சாப்பிட்டிருக்கேன். அந்த அப்பக்கொடி நீங்க சாப்பிட்டிருக்கீங்களா? எங்கு கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. அப்பக்கொடி என அதளக்காயைச் சொல்கிறீர்களோ? அல்லது மிதுக்கு வத்தல்? நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டால் கிடைக்கலாம். விசாரிக்கிறேன். ஆனால் அதலக்காய் இங்கே நிறையக் கிடைக்கிறது. கொஞ்சம் பாவக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. பாவக்காய் மாதிரியே கறி செய்யலாம், பிட்லை செய்யலாம். நன்றாகவே இருக்கும்.

   Delete
  2. இல்லை கீசா மேடம். கொடி போல இருக்கும். உதாரணமா கருவேப்பிலை கொத்தில் இலைகளை எடுத்துட்டு இன்னும் கொஞ்சம் நெகிழ்வா இருக்கற மாதிரி. இது நெல்லை, திருவனந்தபுரத்தில் கிடைக்கலாம்

   Delete
 6. நெல்லைத்தமிழன் அப்பக்கொடி !! அப்படீன்னா ?
  சுக்கங்காய் மினுக்கு வற்றலா ?

  ReplyDelete
  Replies
  1. அதளக்காயா இருக்குமோனு நினைக்கிறேன் ஏஞ்சல்!

   Delete
  2. உங்களுக்காகத் தேடிக் கண்டுபிடித்தேன்.

   http://andhimazhai.com/news/view/bharathi-mani-30-04-2015.html

   படித்துப்பாருங்கள் பாரதி மணி ஐயாவின் கட்டுரையை

   Delete
  3. //அப்பல்லாம் கடுகு என்றால் பெரிய கடுகுதான். இப்ப தமிழ்நாட்டில் எந்த வீட்டில் போனாலும் பயன்படுத்துற சின்ன கடுகு அந்தக் காலத்தில் ஆவக்காய் ஊறுகாயில்தான் போடுவாங்க. நான் இப்பவும் பெரிய கடுகுதான் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தறேன். பெரிய கடுகுன்னு கேட்டாதான் தருவான். அதுக்குன்னு ஒரு தனி ருசி, மணம் உண்டு. நல்லா ஊறினத ஒவ்வொண்ணா எடுத்து சாப்பிடறது தனி ருசி// எனக்கும் ரொம்பப் பிடிக்கும் கடுகு அதிலும் பெரிய கடுகு! :)

   Delete
  4. அப்பக்கொடி பத்தி தெரிஞ்சது! நன்னி ஹை!

   Delete
  5. நானும் படிச்சேன் ..தாங்க்ஸ்

   Delete
  6. இங்கே கடுகு பிரவுன்/கருப்பு /குட்டியூண்டு என வித விதமா கிடைக்குது .எனக்குதான் எதை வாங்கனு தெரியாம வாங்கிடுவேன்

   Delete