எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, January 25, 2014

ஊற வைச்ச கொ.க. மிஞ்சினால் என்ன செய்யலாம்? :)))

இரண்டு நாள் முன்னாடி காலை ஆகாரத்துக்கு ரொட்டி பண்ணினேனா!  அதுக்குக் கொண்டைக்கடலையிலே தான் தொட்டுக்கப் பண்ணி இருந்தேன்.  நனைச்சது என்னமோ சின்னக் கிண்ணம் தான்.  ஆனாலும் ஊற வைச்ச கடலையை எல்லாம் போட்டுப் பண்ணலை.  நிறைய ஆயிடும் போல் தோணித்து.  அதனால் அதே சின்னக் கிண்ணம் அளவுக்கு ஊறின கடலையைத் தனியா எடுத்து வைச்சிருந்தேன்.  மூணு நாளா அந்தக் கடலை கண்களிலே பட்டுக் கொண்டு என்னை என்ன செய்யப் போறேனு கேட்டுட்டு இருந்தது.  ஆனால் மூணு நாளா வெங்காயம், சோம்பு எல்லாம் சேர்க்க முடியாத நேரமாக இருந்தது.  இன்னிக்கு என்ன சமையல்னு மண்டை உடைஞ்சது.  சாம்பார் நேத்திக்குத் தான் பண்ணினேன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நீர்ப்புளி விட்டு சாம்பார்.  முந்தாநாள் மோர்க்குழம்பு, பருப்பு உசிலி. அதுக்கு முன்னாடி மைசூர் ரசம். அதுக்கு முன்னாடி வத்தக்குழம்பு, பொரிச்ச குழம்புனு வைச்சாச்சு.

இன்னிக்குத் தான் வெங்காயம் சேர்க்கலாமே! அந்தக் கொண்டைக்கடலையை வைச்சு சனா மசாலா பண்ணி ஃபுல்கா ரொட்டிடலாமா? ம்ம்ம்ம்ம்? மதியம் சாப்பாட்டுக்குப் பல சமயங்களிலும் ரொட்டி பண்ணி இருக்கேன் தான். ஆனால் இன்னிக்கு என்னமோ பண்ணணும்னு தோணலை.  சரி, கொண்டைக்கடலையைப் போட்டு மசாலா சாதமாப் பண்ணிடலாமானு யோசிச்சேன்.  அடுத்த நிமிஷம் ரெடி, ரெடி, ரெட்ட ரெடி.  மசாலா சாதம்னா தொட்டுக்க வெங்காயப் பச்சடி வேணுமே.  இன்னிக்குனு தயிர் அதிகமா இல்லையே!  சரி, காரட், தக்காளி, வெங்காயம் போட்டு சாலட் பண்ணிட்டு அப்பளம் பொரிச்சுக்கலாம்.  மிளகு, ஜீரகம் வறுத்தரைத்த ரசம் வைச்சுக்கலாம். தீர்மானம் ஆனது.

கொண்டைக்கடலை சாதம் வட மாநிலங்களில் பண்ணுவாங்க தான். நான் அதிகமாப் பண்ணினதில்லை.  இப்படி எப்போவானும் என்ன செய்யறதுனு முழிச்சுட்டு இருக்கிறச்சே பண்ணறது தான். இன்னிக்கு அதான் செய்தேன். செய்முறை படத்தோடு அடுத்த பதிவில்.

இதுக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா.  அப்போத் தான் அடுத்த பதிவு போடுவேனாக்கும்! :))))

18 comments:

  1. தீர்மானம் நடந்ததா என்பதை நாளை வந்து பார்ப்பேன்னாக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. haahaahaaபடம் எடுத்து வைச்சிருக்கோமாக்கும். சாப்பிட்டுட்டுத் தானே வந்து எழுத நினைச்சதே! :))))

      Delete
  2. கொண்டக்கடலை சாதம் வித்தியாசமா இருக்கு... படத்தோடு பகிருங்கோ மாமி... வரேன்..

    நேற்று தான் உங்களின் செய்முறை பார்த்து வெந்தயக் குழம்பு வைத்தேன்... ரோஷ்ணியும் சாப்பிட்டாள்...:) நன்றாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. இதோ கொஞ்ச நேரத்தில் படங்களை இணைச்சுடுவேன். :))) அப்புறமா எழுதறேன். :)))

      Delete
  3. இப்போ தான் கேரள கடலைக்கறி, கொண்டக்கடலை ஸ்டூ பார்த்துட்டு வந்தேன்..இங்கயும் கொண்டக்கடலை....:))

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்துக்கோங்க ஆதி. கொண்டக்கடலக்கறி கேரளாவில் குழாய்ப்புட்டோடு செய்வாங்க. ஆனால் அது கறுப்புக் கடலை. இது வெள்ளைக் கடலை. :)))

      Delete
    2. ஆசியா உமர் அவர்களின் பக்கத்தில் ” பார்த்துட்டு வந்தேன் மாமி... நான் செய்யலை....:))

      Delete
    3. செய்து பாருங்க ஆதி. :)

      Delete
  4. அடடா நாக்கில் எச்சில் ஊற வச்சிட்டு அடுத்த பதிவுல பதிவா? ரொம்ப அ நியாயம்......
    //இதுக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா. அப்போத் தான் அடுத்த பதிவு போடுவேனாக்கும்! :))))//

    குறைஞ்சது 100 கமெண்ட்ஸாவது போடறேன் ஆனா செஞ்சதை எனக்கும் திங்க குடுத்தீங்கன்னா........

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்து கேட்டா என்ன செய்யறது?? ராத்திரிக்குக் கூடக் கிடையாது! :))))

      Delete
  5. ம்ம்ம்ம்.... அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சே பார்க்கலையா? :))))

      Delete
  6. ஓ.... போட்டாச்சா... update ஆகலை. பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவாப் பாருங்க ஒண்ணும் அவசரமில்லை. :)

      Delete
  7. புதுசு புதுசா என்னவோ செய்றீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் தான் சோதனை எலி! தைரியமாச் செய்யலாம் பாருங்க! :))))

      Delete
  8. சீக்கிரமா போடுங்கள். முயன்று பார்த்து விட வேண்டியது தான். அதுவும் கொண்டைகடலை
    சாதம் சுவைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போட்டுட்டேனே, பார்க்கலையா? :)

      Delete